Wednesday, September 16, 2015

தடையை நீக்கி அறிவியல் புரச்சியை ஏற்படுத்தியது இஸ்லாமா?

     இன்றைய நவீன முன்னேற்றமும் அதன் விளைவுகளும் தொழில் புரட்சியால் ஏற்பட்டதே. பூமியில் புதைந்து கிடந்த வளங்களை கண்டேடுத்து நிலக்கரியையும், கனிம பொருளை மனிதன் எடுத்தான், விரைத்து ஓடும் நீரிலிருந்து மின்சாரத்தை எடுத்தான், இப்படியாக இயற்கையிலிருந்து மனித முன்னேற்றத்திற்கு தேவையானவைகளை செய்தே தொழிற் புரட்சி ஏற்ப்பட்டது.

      இது போன்ற வளங்கள் ஆதி முதலே பூமியில் புதைந்து இறுக்க அவற்றை கண்டெடுத்து பயன்படுத்தி ஒரு மேம்பட்ட நாகரிகத்தை மனிதன் ஏன் உருவாக்கவில்லை? என்ன தான் காரணம்? வரலாறில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு காலக் கட்டத்திலும் மனிதன் இயற்கைக்கு தெய்விக தன்மை கூறி அதை வழிபட்டதே இதற்க்கு காரணமாக அமைகிறது.. கிரேக்கம், எகிப்து, ரோம், இந்தியா மற்றும் பாரசிகம் போன்ற அனைத்து பண்டைய நாகரிகமும் பல தெய்வ வணக்க வழிபாடுகளையே செய்தன. பூமி, நதிகள், மலைகள், சூரியன், நிலா போன்ற அனைத்தையும் மனிதன் கடவுள்களாக வணங்கி வழிப்பட்டான்.

     இப்படியாக இயற்கைகளையும், பல தெய்வ வழிபாடுகளில் மூழ்கி இருந்த மனித சமூகத்தை மாற்றி அமைத்து இயற்கைகள் ஒரு படைப்பினமே, அவற்றை வணங்க கூடாது என்று மனிதர்களுக்கு மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் பணி முஹம்மது (ஸல்) அவர்கள் (இஸ்லாமிய) காலத்திலும் அதை ஒட்டிய உத்தம கலீஃபாக்கள் காலத்திலும் வெற்றிகரமாக நடைபெற்றது.

    புதிய விஷயங்களை கண்டுபிடிக்கும் திறன் வாய்ந்த அறிஞர்கள் இஸ்லாத்திற்கு முன்பு வாழவில்லை என்று நாம் சொல்ல முடியாது. பல அறிஞர்கள் இஸ்லாத்திற்கும் முந்திய காலத்தில் வாழ்ந்தார்கள் ஆனால் அவர்கள் கண்டுபிடித்து வெளியிடுபவை, அன்றைய மக்களின், அரசர்களின் மூட நம்பிக்கைக்கும், தெய்வ வழிபாட்டிற்கும் எதிராக இருந்ததாலும், அவற்றை மக்கள் எதிர்த்ததாலும், புதுப்புது உண்மைகளையும், இயற்கையின் இரகசியங்களையும் ஆராய்ச்சி செய்ய முடியாமல் பல நூற்றாண்டுகளாக தடை செய்யப்பட்டது.
  
இவற்றை பில்லி, சூனியமெனவும், சாத்தானின் தூண்டுதல் என்று கூறப்பட்டதால். புதிய சிந்தனைகளுக்கு எவ்வித மதிப்பும், முன்னேற்றமும் இல்லாமல் போய் விட்டது.

     இஸ்லாமிய தொடக்க காலத்தில் இம்மாற்றம் மனிதர்களிடம் தோன்ற ஆரம்பித்தது என்றாலும், முறைப்படுத்தப்பட்ட சீரான முன்னேற்றம் கி.பி 832 இல் அப்பாஸிய ஆட்சிகாலத்தில் “பைத்துல் ஹிக்மா” நிறுவப்பட்ட பின்னரே உருவானது. ஸ்பெயினிலும், சிசிலியிலும் அரேபிய ஆட்சிகாலத்தில் இப்பணி வெகு உத்வேகத்துடன் தொடர்ந்தது. இறுதியில் உலகில் பெருப்பாலும் பகுதிக்கு பரவி, தொழில் புரட்சிக்குத் தூண்டுகோலாக இருந்தது.   
 
    இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னரே அறிவியல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மனப்பான்மை ஏற்ப்பட்டது. இந்த எழுச்சி தங்கு தடையுன்றி தொடந்து இன்றைய நவீன கண்டுபிடிப்புகள் வரை தொடர்கிறது. இஸ்லாம் மார்க்கம் வந்த பிறகே நாம் காணும் இந்த மனித வழ முன்னேற்றம் ஏற்பட்டது என்பதற்க்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் இப்போது வாழும் முஸ்லிம்களாகிய நான் அதை மறந்து வாழ்கிறோம். அறிவியல் புரட்சிக்கு காரணாமான நாம், இப்போது அதை பற்றி கவலை படாமல் வாழ்க்கிறோம். அதை மீண்டும் நமது கையில் எடுக்கும் காலத்தை எதிர்ப்பார்ப்போம். இன்ஷாஅல்லாஹ்!!!

   நிச்சயமாக, வானங்கள்பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (அல்-குர்ஆன் 3:190 )


      நாம் எந்த துறையை எடுத்து படித்தாலும் அதைக்கொண்டு உலக மக்களுக்கு பயனுள்ள விஷயங்களை நம்மால் உருவாக்கமுடியும் செய்ய முடியும். அல்லாஹ் குர்ஆனிலே அணைத்து துறைகளை பற்றியும் சொல்லி அதை ஆராய சொல்கிறான்.. இன்ஷாஅல்லாஹ் நாம் அனைவரும் முயற்சி செய்தால் இந்த உலகம் முஸ்லிம்களின் கையில் தவழும் நாள் வெகு துரைவில் இல்லை.

No comments:

Post a Comment