Saturday, August 15, 2015

இந்திய முஸ்லிம்களின் தியாகம் மறக்க மட்டும்தானா..?

          1929 டிசம்பரில் லாகூர் அருகில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் “இந்தியாவிற்கு பூரண சுதந்திரமே எங்கள் லட்சியம்” என தீர்மானம் நிறைவேற்ற பட்டு, சுதந்திரம் கிடைக்கும் வரை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் நாளை பூரண சுயராஜ்ஜிய தினமாக கொண்டாடுவதென உறுதி ஏற்கப்பட்டது. அதனால் தான் இந்திய அரசியலமைப்பு சட்ட நடைமுறைக்கு வர ஜனவரி 26 தேர்வு செய்யப்பட்டது.

மறக்கப்பட்ட ஹள்ரத் மொஹானி:
      இத்தீர்மானம் நிறைவேற்றுவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1921ம் ஆண்டு டிசம்பரில் அஹமதாபாத்தில் முஸ்லிம் லீக் மாநாட்டில் மவ்லானா ஹள்ரத் மொஹானி, வெள்ளையர் வெளியேற வேண்டும் இந்தியாவிற்கு பரிபூரன சுதந்திரம் கிடைக்க வேண்டும் என முழக்கமிட்டார். இந்த தீர்மானம் இப்போது வேண்டாம் என்று காந்தி கேட்டுகொண்டார். ஆனால் பூரண சுதந்திரம் கொள்கையில் உறுதியுடன் இருந்த மொஹானி, ‘நமது லட்சியம் இந்தியாவிற்கு பூரண சுதந்திரமே, எவருடைய மேலாதிக்கத்தின் அனுமதியோ, அறிவுறுத்தலோ இல்லாமல் நம்மை நாமே ஆள வேண்டும்’ என்றார்.

      பிரிட்டிஸ் ஆட்சிக்கெதிராக மக்களை புரட்சி செய்ய தூண்டியதாக இவரை இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்று ஆக்கபூர்வமாக செயல்பட்டது அரசியலில் முஸ்லிம்களுக்கு தனித்தொகுதி வேண்டும் என்று வாதாடியவர் ஹஜ்ரத் மொஹானி. அரசியல் நிர்ணய சபை தேர்தலில் டாக்டர் அம்பேத்கருக்கு காங்கிரஸ் வாய்ப்பளிக்காத நிலை கண்டு அதிர்ச்சியடைந்த முஸ்லிம் லீக் தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவரை வங்காளத்திற்கு அழைத்து வெற்றி பெற செய்தார் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

இந்தியாவிற்கு விடுதலை தா அல்லது உன்னுடைய சுதந்திர நாட்டில் என் உடலை அடக்கம் செய்ய இடம் தா; அடிமை நாட்டில் நான் மரணிக்க விருப்பவில்லை என இங்கிலாந்தில் வீர முழக்கமிட்டார் மௌலான முஹம்மது அலி ஜவஹர்.
     
இந்திய விடுதலைப் போரில் வீரியத்தை ஏற்படுத்தியதோடு அதை கிளர்ச்சியாக்கிய பெருமை கிலாபத் இயக்கத்தை தான் சாரும். கேரளத்தில் மாப்பிள்ளை புரச்சியும், கி.பி. 1857ல் சிப்பாய் கலகம் என கூறப்படும் முதல் சுதந்திர போரையும் முஸ்லிம்கள் தான் நடத்தினார்கள் என்பதற்காக ஆங்கிலயோர்களால் முஸ்லிம்கள் கொன்று குவிக்கபட்டனர்.

      இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் 14000 பேர் தூக்கில் போட்டதும், நெருப்பு குண்டங்களில் இஸ்லாமிய மத அறிஞர்கள் தூக்கி எறியப்பட்ட செய்திகள் இருட்டடிப்பு செய்யபட்டாலும் “தாமசனை” போன்ற வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருப்பதை எப்போது படித்தாலும் கண்ணீர் சொட்டுகிறது.

மறைக்கப்பட்ட ஐவேரி சகோதரர்கள்:
     ஆண்டுதோறும் ஜனவரி 9ஐ மையமாக வைத்து வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு நடத்தப்பட காரணம் காந்திஜி 1915 ஜனவரி 9 அன்றுதான் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திருப்பினார் என்பதால்தான். ஆனால் ஏன் அவர் தென்னாப்பிரிக்கா சென்றார் என்று நம்மில் யாருக்கும் தெரிவதில்லை.

      குஜராத்தின் போர் பந்தரை சேர்ந்த அப்துல்லா ஆதம் ஐவேரி, அப்துல் கரீம் ஆதம் ஐவேரி சகோதரர்கள் 1865 களில் தாதா அப்துல்லா அன்ட் கம்பெனி என்ற பெயரில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரை தலைமையாக கொண்ட கப்பல் கம்பெனிக்கு 105 பவுண்ட் சம்பளத்திற்க்கு அழைத்து செல்லப்பட்டார். 1894 மே  22ம் தேதி தாதா அப்துல்லா கம்பெனியின்தான் நேட்டால் இந்தியா காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு அதன் தலைவராக அப்துல்லா ஐவேரியும், செயலாளராக காந்தியும் செயல்பட்டார். அதன் பிறகு தான் 1906 மே முதல் இந்திய சுதந்திரத்திற்காக காந்திஜி குரல் கொடுக்க ஆரம்பித்தார்.


இன்று இந்துத்துவ அமைப்புகளால் அதிகம் விமர்சிக்கப்படும் தாருல் உலூம் தேவ்பந்த் மதரஷாவின் முதல் மாணவரான ஷைஹுல் ஹிந்த் மௌலான மஹ்மூதில் ஹசன் ஹஜ்ரத் அவர்கள் தான் வெள்ளையர்களை எதிர்த்து அகிம்சை வழியில் போராட முடிவெடுத்த போது அதற்க்கு தலைமை பொறுப்பேற்க காந்தியை கை காட்டினார். இது போன்று பல உண்மை வரலாறுகள் வளரும் தலைமுறைக்கு சொல்லுவது நமது கடமை என்பதை நாம் அதிகமாக மறந்துவிடுகிறோம்.                                                                                                                                                 Source: Kayal Makbul- piraimedai

Saturday, August 1, 2015

ஜிப்ரடில் மலை அடிவாரம் (கி.பி. 711 ஜூலை 13)

      இன்று (கி.பி. 711. ஜூலை 13) தாரிக் இப்னு ஜியாத் அவர்கள் இன்றைய ஸ்பெயின் உள்ள ஜிப்ரடில் மலை அருகில் போர் துவங்குவதற்கும் சிறிது நேரத்திற்கு முன்பாக ஆற்றிய உரை.

அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் துணை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.
       “எனதருமை வீரர்களே! உங்களுக்கு பின்னால் கடல் இருக்கிறது. முன்புறம் நவீன ஆயுதங்களோடு எதிரிகள் அணிவகுத்து நிற்கின்றனர். அல்லாஹ்வின் மீதும், தனித்துவமிக்க உங்களின் தன்னம்பிக்கையின் மீதும், மன உறுதிப்பாட்டின் மீதும், தான் நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக நிற்கிறீர்கள். எதிரிகளை வீழ்த்தி உடனடி வெற்றியைப் பெறவில்லை என்றால் உங்களது நம்பிக்கையான எதிர்க்கலாம் பாழாகிவிடும்.

       எதிரிகளின் உள்ளங்களில் பதற்றமும், பீதியும் நிறைந்துள்ளது. அவர்கள் வயிறு முட்டக் குடித்துவிட்டு நிற்கின்றனர். வீரர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அதிகமதிகம் வணக்கங்களில் ஈடுபடுங்கள். அல்லாஹ்விடம் மனமுருகி துஆ செய்யுங்கள். “ஷஹிது” என்ற உன்னதமான நிலையை அடைய மனதில் “நிய்யத்” செய்யுங்கள்.

       இந்தப் போரில் உங்களை வழிநடத்தும் நான் உங்களில் முதல் நபராக உங்கள் எதிரிகளை சந்திப்பேன் என்று உறுதி கூறுகிறேன். உங்களுக்கு ஏற்ப்படும் எந்த அபாயமும் எனக்கும் சொந்தமானது. உங்களில் இருந்து எந்த சுழலிலும் நான் விலகி செல்ல மாட்டேன். இது அல்லாஹ்வின் மீது ஆணை! சத்தியத்தை நிலைநிறுத்துவதே நமது குறிக்கோள்.

       உங்களில் யாராவது உயிருக்கு பயந்து புறமுதுகிட்டு ஓடினால் அவர்களுக்கு பரிசு மரண தண்டனையே! இன்ஷாஅல்லாஹ் போரில் வெற்றி பெரும் நமக்கு இந்த நாட்டில் சிறப்பான பரிசுகள் காத்திருக்கின்றன. அமீருல் முஃமினின் கலிஃபா வலிது இப்னு அப்துல் மாலிக் அவர்கள் தங்களின் அரபு இன வீரர்களில் இருந்து தனித்திறன் பெற்ற உங்களை இந்த புனிதப் போரில் முதல் நிலை வீரர்களாகத் தேர்வு செய்துள்ளார். அல்லாஹ்வின் வார்த்தைகள் ஐரோப்பிய மண்ணில் ஓங்கி ஒலித்திட வேண்டும் என்பதே கலிஃபா அவர்களின் விருப்பம்.

விஷிகோத் மன்னன் ரோட்ரிக்ஷை நேருக்கு நேர் சந்திக்கும் முன்பாக நான் விழ்ந்தால் எனது இந்த உத்தரவுகளை இரட்டிப்பாக்கி வீறுகொண்டு எழுந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை இந்த மண்ணில் நிலை நிறுத்துங்கள். ரோட்ரிக்ஸ் விழ்ந்தால் அவனோடு அவனது வீரர்களையும் வெற்றி கொள்வீர்கள்.”

      என்று வீரத்தளபதி தாரிக் பின் ஜியாத் அவர்கள் உணர்ச்சி பொங்க உரை நிகழ்த்தி முடித்தவுடன் அதனால் உரமேற்றபட்ட வீரர்களின் உள்ளத்திலிருந்து “அல்லாஹு அக்பர்” “அல்லாஹு அக்பர்” “அல்லாஹு அக்பர்” என்ற உயிரின் உயிரான முழக்கம் விண்ணையும் மண்ணையும் அதிரச் செய்தது.


இவரைபோன்ற இஸ்லாமிய போர் தளபதிகளின் வரலாறுகளை நமது பிள்ளைகளுக்கு சொல்லி அவர்களை அறிவுஜீவிகளாக வளர்த்து இஸ்லாமிய உண்மையான வரலாறுகளை அழியாமல் காப்போம். இன்ஷாஅல்லாஹ்...!