Wednesday, December 16, 2015

“தொல்லியல் துறையின் இஸ்லாமிய விரோத போக்கு”

          உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படவேண்டும் என்ற ஒரே நோக்கில் வாழும் மனிதர்கள் (அதிகாரிகள்) இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தியாக இருந்தாலும் அவர்கள் எப்படி எந்த வழியில் செயல்படுகிறார்கள் என்பது தான் நமக்கு இன்னமும் புரியாத புதிராக உள்ளது.

       அல்ஹம்துல்லாஹ்.! கடந்த 50 வருடங்கள் இல்லாத அளவிற்கு இப்போது உள்ள சில முஸ்லிம்கள், சில தலைவர்கள் தங்களுடைய கண்ணை திறந்து இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் சில விஷயங்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதை தெரிந்து கொள்ளத்தான் நாம் தயாராக இல்லை என்பதும் நிதர்சனமான உண்மை.

       “ஒரு நாட்டை ஆழ வேண்டுமானால் உன்னுடைய கலாச்சாரத்தை அவர்களுக்கு மத்தியில் பரப்பு” என்றான் ஒரு ஐரோப்பிய அறிஞன். அந்த விதத்தில் இந்திய தொல்லியல் துறை எந்த அளவுக்கு இஸ்லாமிய விரோத போக்கை கையாள்கிறது என்று சற்று பார்ப்போம். 

       இந்தியாவின் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியில் அவர்களுடைய பலத்தை காட்டுவதற்கும் தங்களுடைய கலை நயத்தை வெளிப்படுத்துவதற்கும் மாளிகைகள், கோட்டைகள், பள்ளிவாசல்கள் என்று பல கட்டி வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் வாழ்ந்த பிறகு அவருடைய கப்ருகளையும் சிலர் பாதுகாத்து வந்துள்ளனர்.

      முஸ்லிம்களின் கலாச்சாரதை வெளிப்படுத்தும் விஷயங்களை 1861ஆம் ஆண்டு முதல் மோர்டைமல் வீலர் தொடக்கி, B.B லால் போன்றோர் இன்று வரை கொஞ்சம் கொஞ்சமாக அளித்துகொண்டு இருக்கிறார்கள். அதில் ஒரு கட்டமாக தான் முஸ்லிம் கட்டிய கட்டிடங்கள் மேல் ஒரு போய் வரலாறுகளை சொருவி அதன் உண்மை நிலையை, உண்மை வரலாறை பொய் ஆக்குகிறார்கள். அதில் நான் படித்த இரண்டு மூன்று விஷயங்களை சொல்கிறேன்.

1.       பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தை இராம ஜென்ம பூமி என்றனர்.


2.       செர்ஷா ஷுரி கட்டிய கோட்டையை மகாபாரத்தில் வரும் இந்திய பிரசத்தா நகர் என்று கூறிகிறார்கள்.

3.       இஸ்லாத்தை புறக்கணித்து வாழ்ந்த அக்பர் கட்டிய ஃபத்தேபூர் சிக்ரி கோட்டை பள்ளிவாசல் ஒரு சமண மதக் கோயிலை இடித்துத்தான் கட்டினார் என்று 1990இல் தொல்லியல் துறை பொய்யை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

4.       1977 இல் பீகார் மாநிலத்தில் உள்ள சாசரம் கோட்டையை சேதப்படுத்தும் விதத்தில் 3 புதிய கோயில்களை கட்ட இந்திய தொல்லியல் துறை அனுபதி வழங்கியது.

5.       வேலூர் கோட்டையில் திப்பு சுல்தான் வாரிசுகளால் கட்டப்பட்ட பள்ளிவாசலை 1921 முதல் கையகப்படுத்திய தொல்லியல் துறை அங்கே தொழுகைக்கு அனுமதி மறுக்கிறது, ஆனால் திப்புவின் வாரிசுகளால் பாதுகாக்கப்பட்ட வேலூர் கோட்டையின் உள்ளே உள்ள ஜலகண்டேஷவரர் ஆலயத்திலும், கிருத்துவ ஆலயத்திலும் வழிபாடுகள் நடக்கின்றன.

6.       ஹைதராபாதில் அமைத்துள்ள சார்மினாரில் ஒரு தூன் ஓரத்தில் ஒரு சின்ன கோயிலை கட்டி வகுப்புவாத விஷத்தை கிளப்புகிறார்கள். 

      RSS, VHP காரர்கள் பல்வேறு பெயர்களில், பல்வேறு முகங்களில் எல்லா அரசியல் கட்சிகளிலும் ஊடுருவியுள்ளவர்களுக்கு முஸ்லிம் அடையாள சின்னங்களை, பாரம்பர்யமான வழிபாட்டுத் தலங்களையும் அழிப்பதற்கு தொல்லியல் துறையில் உள்ள காவிகள் எல்லா வகையிலும் உதவி செய்கிறது.

     பள்ளிவாசல்களில் சிலையை வைத்து சர்ச்சையை ஏற்படுத்துவது, முஸ்லிகளுக்கு சொந்தமான நிலங்களில் காவிக் கொடியை நடுவது, வேல் மற்றும் திரிசுலன்களை இரவோடு இரவாக நடுவது, வக்ஃபு சொத்துகளை அபகரிப்பது போன்ற தேச விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது RSS, VHP யின் தொலைதூர இலக்கு என்றாலும் கூட முஸ்லிங்களின் அலட்சியமும் தான் இதற்கு ஒரு முக்கிய காரணம்.

     இந்தியா முழுவதும் பரவிக்கிடக்கும் முஸ்லிம்களின் பாரம்பர்ய சின்னங்களான பள்ளிவாசல்கள், ஈத்கா மைதானங்கள், அடக்கஸ்தலங்கள், வக்ஃபு  சொத்துகள் போன்ற அனைத்தையும்  ஆதிக்க சக்திகளிடமிருந்து பாதுகாப்பது முஸ்லிமாக நம் அனைவரின் மீதும் தலையாய கடமை என்றும் அதற்காக அதிகமாக துஆ செய்யுங்கள் என்றும் அன்புடன் கேட்டுகொள்கிறோம்

      நமது பிள்ளைகளுக்கு வரலாறுகளின் முக்கியத்துவத்தை சொல்லி இஸ்லாமிய பாரம்பரியத்துடன் வளர்ப்பாம்.! இஸ்லாமிய வரலாறுகளையும், முஸ்லிம்களுக்கு செந்தமான பள்ளிவாசல்களின் வஃக்பு செத்துக்களை மீப்போம், பாதுகாப்போம். இன்ஷாஅல்லாஹ்..!

Saturday, December 5, 2015

ஓ, இந்திய முஸ்லிமே! நான் பாபரி மஸ்ஜித்.

 ஐநூறு ஆண்டுகள் நிலைத்து நின்றேன்!
என்னுள் நீங்கள் அல்லாஹ்வைத் தொழுது வந்தீர்கள்..
வரலாறாய் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
அமைதியாக நின்று கொண்டிருந்த என் மேல்
சில கழுகுப் பார்வைகள் விழத்தொடங்கின.
என்னை இந்தியாவின் அவமான சின்னம் என்றார்கள்,
நான் களங்கப் படுத்தபட்டேன்
என்னை இடித்துத் தரைமட்டம் ஆக்கினார்கள்!
நான் ஷஹீது ஆக்கபட்டேன்….
அல்லாஹுவைத் துதித்து வந்த என் இடத்தின்மேல்
காவிகளின் களியாட்டம் நடக்குதே!

ஓ, இந்திய முஸ்லிமே! நான் இந்தியாவின்
நினைவுச் சின்னம் மட்டும் அல்ல;
நான் ஜனநாயக இந்தியாவின் இதயம்…
என்னை நீ இழந்துவிடத் துணிந்துவிட்டால்
இந்தியா இன்னும் பல இறையில்லங்களை இழந்துவிடும்.
என்னை நீ மறந்து விட்டால் …
நீயும் மறக்கடிக்கப்படுவாய்!
ஓ, இந்திய முஸ்லிமே! நீ தூங்கிவிட்டால்
எதிரிகள் விழித்து கொள்வார்கள்
நீ உன் பணியை நிறுத்திக் கொண்டால்
நான் அவமானச் சின்னம் என்ற பொய்யை
உண்மை ஆக்கிவிடுவார்கள்.
ஓ! இந்திய முஸ்லிமே!
என்னுடைய அழுகை சப்தம்
உன் செவிகளை எட்டவில்லையா?
அநியாயக்காரர்களின் பிடியிலிருந்து
என்னை நீ மீட்டு எடுக்கும் காலம் எப்பொழுது?