Monday, November 16, 2015

இருண்ட காலம் என்ற பொற்க்காலம் (Golden Age)

        நமது பள்ளி மற்றும் கல்லூரிகளின் புத்தகத்தை புரட்டி பார்த்தல் நாகரிகம் என்றாலே அது கிரேக்க, ரோம் என்று தான் காதில் விழும். இதை தான் நானும் படித்தேன் நீங்களும் படித்து இருப்பீர்கள். நாம் மட்டுமா நம்முடைய பிள்ளைகளும் இதை தான் படிக்கிறார்கள். 

     குரானிலே ஏக இறைவனான அல்லாஹ் கூறுகிறான் “ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள். (30:2-3)” என்ற இவ்வசனம் வரலாற்று முக்கியமானது. ஆம்...!

       எப்போது உலகையே ஆண்ட ரோமம்பேரரசு விழ்ந்ததோ அன்றே உலக அழிவு ஆரம்பித்துவிட்டது, உலகில் பயனுள்ள எந்த செயலும் நடைபெறவில்லை, விழ்த்த பிறகு வாழ்ந்த மக்கள் எதற்கும் உதவாதவர்கள் என்றும் மீண்டும் உலகம் பிறந்து மறுமலர்ச்சி அடைய 800 வருடங்கள் ஆனது என்று நம்மையும் நம் பிள்ளைகளையும் படிக்கவைத்து நம்பவைகிறார்கள்.

         நாம் உலக வரலாற்றை சற்று உற்று நோக்கினால் இதன் உண்மை நிலையும் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று நமக்கு விளங்கும். கி.பி. 500 நேரங்களில் ரோம் பேரரசு விழ்ந்தது எண்ணமே உண்மைதான், ஆனால் அதன் பிறகு 800 ஆண்டுகள் உலகின் இருண்டகாலம் என்பது யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாத சொல் (பொய்).

        அவர்கள் கூறும் இந்த 800 ஆண்டுகள் உண்மையிலேயே இவ்வுலகின் பொற்க்காலமாக இருந்தது, அதை ஒப்புக்கொள்ள அவர்களுடைய மனம் மறுக்கிறது. ஏன் தெரியுமா? இந்த 800 ஆண்டுகள் இவ்வுலகம் பொற்க்காலமாக இருக்க முழுக்க முழுக்க முஸ்லிம்கள் மட்டுமே காரணம். அதனால்தான் அவர்கள் இங்கேயும் உண்மையை மறைத்து இஸ்லாமிய விரோதபோக்கை கையாள்கிறார்கள்.

கி.பி 500 முதல் கி.பி 1300 வரை இவ்வுலகில் நடந்த மாற்றங்கள்தான் என்ன..? ஏன் அதை இவர்கள் ஏற்க்க மறுக்கிறார்கள். அவற்றில் சில 

1. முஹம்மது (ஸல்) அவர்கள் பிறப்பு அதை தொடர்ந்து இஸ்லாம் மறு அறிமுகம் பின்பு இஸ்லாமிய ஆட்சி.

2. நான்கு கலிபாக்களில் ஆட்சியிலும் அதை தொடர்ந்த இஸ்லாமிய ஆட்சியிலும் இஸ்லாம் பல நாடுகளுக்கு பரவியது.

3. ஆசிய கண்டத்திலுருந்து ஆப்ரிக்கா கண்டத்திற்கும் பிறகு ஐரோப்பிய கண்டத்திற்கும் இஸ்லாம் சென்றடைத்தது (பரவியது).

4. இஸ்லாமிய மார்க்கம் கிழக்கே சீன தேசம் முதல் மேற்கே மொரோர்கோ மற்றும் ஸ்பெயின் வரை பரவி எங்குமே இஸ்லாம் என்ற அமைதி (மதம்) மார்க்கம் வாழ்ந்தது.

5. பாலஸ்தின் இஸ்லாமிய ஆட்சியில் கீழ் இருந்தது.

6. உலகின் பெரும் பெரும் அறிஞர்களாக, விஞ்ஞானிகளாக இஸ்லாமியர்களே விளங்கினர்.

7. கணிதம், வானவியல், கடலியல், சமுக அறிவியல் என அணைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் மிகவும் சிறந்து விளங்கினார்கள்.

8. விமானத்தின் ஆரம்ப சிந்தனை, எண்களின் வடிவம், உலக வரைபடம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு கண்டுப்பிடிப்புக்கு சொந்தகாரர்கள் இஸ்லாமியர்களே...!

        இப்படி உண்மையை சொன்னால் உலக மக்களுக்கு இஸ்லாமியர்கள் தான் சிறந்தவர்கள் இவர்கள் தான் இந்த உலகத்தை கட்டி எழுப்பியவர்கள் என்றும் நாம் (அமெரிக்க, ஐரோப்பிய) இதற்க்கு சொந்தமில்லை என்ற உண்மை தெரிந்துவிடும் என்ற ஒரே காரணத்திற்காக உண்மையை மறைக்க இந்த மானக்கேட்ட கேடுகெட்ட யூத, நசராணிகள் உலக அளவிலும், RSS, VHP  போன்ற காவி பயங்கரவாதிகள் இந்தியாவிலும் போய் பிரசாரங்களையும், போய் வரலாறுகளையும் எழுதி பரப்பிவருகிறார்கள். 

“வரலாறு தெரியாத சமுகம் வாழ்த்ததாக சரித்திரம் இல்லை”

அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் இன்ஷாஅல்லாஹ் இஸ்லாம் மார்க்கம் வெற்றிபெறும் என்றென்றும். நமது பிள்ளைகளுக்கு இது போன்ற வரலாறுகள் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Sunday, November 1, 2015

நபிமொழித் தொகுப்புகள் – ஒரு வரலாற்றுப் பார்வை!

                இஸ்லாத்தில் திருக்குர்ஆனுக்கு அடுத்த மூலாதாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கும் வாழ்வும் அடங்கிய ஹதீஸ் எனப்படும் நபிமொழிகள்தான். அரபி மொழியில் நூற்றுக்கணக்கான நபிமொழித் தொகுப்புகள் இருந்தும், தமிழில் அவை மொழிபெயர்க்கப்படாமலேயே நீண்ட காலம் கழிந்து விட்டது. அண்மை காலமாகவே இதில் தமிழ் முஸ்லிம்கள் கவனம் செலுத்திவருகின்றனர்.

            1954ஆம் ஆண்டு உத்தமபாளையம் எஸ்.எஸ். அப்துல் காதிர் பாகவி அவர்கள் ‘தஜ்ரீதுல் ஜாமிஇஸ் ஸஹீஹில் புகாரீ’ என்ற பெயரில் ஸஹீஹுல் புகாரீ நபிமொழித் தொகுப்பின் சுருக்கப் பிரதியைத் தமிழில் வெளியிட்டார்கள். இது ஹுசைன் பின் முபாரக் அஸ்ஸுபைதீ (ரஹ்) அவர்கள் அரபி மூலத்தைச் சுருக்கி வெளியிட்ட பிரதியின் தமிழாக்கமாகும்.

         அடுத்து 1989ஆம் ஆண்டு ஸஹீஹ் முஸ்லிம் நபிமொழித் தொகுப்பின் சுருக்கப் பதிப்பான ‘முக்தஸர் ஸஹீஹ் முஸ்லிம்’ தமிழாக்கத்தை மௌலவி, முஹம்மத் இக்பால் மதனீ அவர்கள் எழுதி வெளியிட்டார்கள். இதன் அரபி மூலத்தைச் சுருக்கித் தந்தவர் ஹாஃபிள், அப்துல் அழீம் அல் முன்திரீ (ரஹ்) அவர்கள் ஆவார். பின்னர் நாஸிருத்தீன் அல்பானீ அவர்களின் விளக்கக் குறிப்புடன் வெளிவந்தது. இந்தத் தமிழாக்கம் நான்கு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டு, இதுவரை இரண்டு பாகங்கள் வெளிவந்துள்ளன.


    அடுத்து 1964ஆம் ஆண்டு பிரபல தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் தொண்டி எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் அவர்கள், ‘ஹதீஸ் – பெருமானாரின் பொன்மொழிப் பேழை’ எனும் பெயரில் நபிமொழித் தொகுப்புகளின் திரட்டைத் தமிழில் தந்தார்கள். இது மூன்று பாகங்களில் வெளிவந்துள்ளது. பிரபல நபிமொழித் தொகுப்புகளான ஸஹீஹுல் புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, நஸயீ உள்ளிட்ட நூல்களிலிருந்து திரட்டப்பட்ட ஹதீஸ்களின் தமிழாக்கம் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

          ஹாஃபிள் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 773 – 852) தொகுத்த ‘புலூஃகுல் மராம்’ எனும் நபிமொழித் தொகுப்பு 1999ஆம் ஆண்டு மௌலவி, அப்துல் காதிர் உமரீ அவர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள்..

         இவையன்றி, உத்தமபாளையம் மௌலானா, முஹம்மது இப்ராஹீம் பாகவி அவர்கள் ‘ஷமாயிலுத் திர்மிதீ’ யைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். அவ்வாறே இமாம் யஹ்யா பின் ஷரஃப் அந்நவவீ (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 676; கி.பி. 1277) அரபி மொழியில் தொகுத்த ‘ரியாளுஸ் ஸாலிஹீன்’ எனும் நபிமொழித் தொகுப்பைத் தமிழில் பலர் மொழி பெயர்த்துள்ளனர்.

ஸிஹாஹ் சித்தா
           1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை ரஹ்மத் அறக்கட்டளை பிரபல நபிமொழித் தொகுப்புகளான புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, நஸயீ ஆகிய ஆறு ஆதாரபூர்வ ஏடுகளை (ஸிஹாஹ் சித்தா) தமிழில் கொண்டு வரும் அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரு தொகுப்புகளும் முழுமையாக வெளிவந்துள்ளன.

               ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம் 7 பாகங்களிலும், ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் 4 பாகங்களிலும் அரபி மூலம், தமிழாக்கம், அடிக் குறிப்பு விளக்கங்களுடன் வெளி வந்துள்ளன. எஞ்சிய நான்கு நபிமொழித் தொகுப்புகளின் மொழிபெயர்ப்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக ஏழு ஆலிம்களைக் கொண்ட ஒரு குழு முழுநேரப் பணியைத் தனியான அலுவலகத்தில் மேற்கொண்டுள்ளது.

மார்க்கச் சட்டவியல் (ஃபிக்ஹ்)
           ஃபிக்ஹ் எனப்படும் மார்க்கச் சட்டவியல் நூல்கள் அரபியிலும் பிற மொழிகளிலும் நிறைய உள்ளன. தமிழில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே சட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. 1968ஆம்ஆண்டில் உத்தமபாளையம் மௌலானா, S.S. அப்துல் காதிர் பாகவி அவர்கள் ‘கன்ஸுத் தகாயிக்’ எனும் அரபி நூலை அதே பெயரில் மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட்டார்கள். தேவதானப்பட்டி மௌலானா அப்துல்கரீம் நூரீ அவர்கள் ‘ஃபிக்ஹின் கலைக் களஞ்சியம்’ என்ற பெயரில் ஒரு நூல் எழுதினார்கள்.

       மௌலவி, ஆதம் முஹ்யித்தீன் பாகவி அவர்கள் ‘ஷாஃபிஈ ஃபிக்ஹின் சட்டக் களஞ்சியம்’ என்ற பெயரில் ஒரு நூல் எழுதியுள்ளார். `பத்ஹுல் முஈன்’ போன்ற அரபி நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் இரு பாகங்களில் வெளிவந்துள்ளது.

வரலாறு
         இஸ்லாமிய வரலாற்று நூல்கள் தமிழில் வெளி வந்திருந்தாலும், முழுமையான ஒரு வரலாற்றுத் தொகுப்புத் தமிழில் இல்லாதது பெரும் குறையே. அந்தத் தொகுப்பு ஆதாரபூர்வ வரலாற்று நூலாக இருக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாகும்.

         எகிப்து நாட்டு அறிஞர் முஹம்மத் ரிளா அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) வரலாற்றை ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற பெயரில் அரபியில் எழுதியதை இதே பெயரில் உத்தமபாளையம் மௌலானா, S.S அப்துல்காதிர் பாகவி அவர்கள் 1962ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள்.

         இந்தியரான மௌலானா ஸஃபிய்யுர் ரஹ்மான் முபாரக்பூரி அவர்கள் அரபியில் எழுதிய ‘அர்ரஹீகுல் மக்த்தூம்’ எனும் நபி (ஸல்) அவர்களின் முழு வரலாற்று நூல் பிரபலமான ஒன்று. இதை ‘ரஹீக்’ எனும் பெயிரல் ‘தாருல் ஹுதா’ நிறுவனத்தார் 2004ஆம் ஆண்டு தமிழில் வெளியிட்டனர். இந்நூலை மௌலவி, அ. உமர் ஷரீப் காசிமீ அவர்கள் தமிழில் மொழிபெயர்த்தார்.

      பேராசிரியர் சையித் இப்ராஹீம், எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம், இஸ்லாமிய நிறுவன டிரஸ்ட், ஜமால் முஹம்மத், இலங்கை அப்துல் ஜப்பார் முஹம்மத் ஸனீர், எழுத்தாளர் ஹசன், கவிஞர் மு. மேத்தா, வலம்புரிஜான், கவிஞர் பாப்ரியா உள்ளிட்டோர் இஸ்லாமிய வரலாற்று நூல்களைத் தமிழில் எழுதியுள்ளனர்.

    இந்த தகவல்கள் சென்னை ரஹ்மத் அறகட்டளையில் பணிபுரியும் முஹம்மது கான் பாகவி அவர்களின் கட்டுரையுள் இருந்து எடுத்தது. இன்னும் குர்ஆன் விளக்கவுரை முழுவதும் தமிழில் வரவில்லை என்பதும் இஸ்லாமிய நூல்கள் கால்வாசிகூட தமிழில் மொழிபெயர்ப்பு செய்யவில்லை என்பது வருத்தமான செய்திதான்