Tuesday, August 16, 2016

நீங்கள் சமூக ஆர்வளர்களா?

        நமது இஸ்லாமிய சமூதாயத்திற்க்காக தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்பனம் செய்பவர்களும் நம்மில் உண்டு,சமூதாயத்தை பற்றி கவலை படாமல் சுயநலமாக வாழ்பவர்களும் நம்மில் உண்டு. நாம் நமது பங்கிற்க்கு ஒரு முஸ்லிமாக நமது இஸ்லாமிய சமூதாயத்திற்க்கு என்ன செய்தோம் என்று சற்று சிந்தனை செய்து பார்ப்போம்….! வாழ்க்கை முழுவதையும் கொடுதோமா? அல்லது சுயநலமாக வாழ்கிறோமா? நம்மில் சிலர் ஏதோ ஒரு விதத்தில் சமூதாயத்திற்க்கு சேவை செய்கிறோம்.

        “எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.”(13:11)

“அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.”(39:9)

     சமூக சேவைகளில் ஒரு சிறந்த சேவையாக உள்ளது கல்வி, ஆம்! நிச்சயமாக கல்வி கற்று கொடுப்பது சிறந்த சேவைதான், அதுவும் குர்ஆன் ஓத கற்று கொடுப்பது என்பது மிகவும் உயர்ந்த சேவையாக உள்ளது.

    முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஊர்களை சுற்றி 5 முதல் 10 குடும்பங்கள் என பல கிராமங்களில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்று நாம் அறிந்த செய்திதான். அவர்களின் இஸ்லாமிய கல்விக்காக நாம் என்ன முயற்சி செய்தோம் என்பதுதான் இங்கு நமக்கு நாமே வைக்கும் கேள்வியாக உள்ளது. நமக்கு நாமே வைக்கும் வேண்டுகோள் என்னவெனில் நமது ஊர்களை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள முஸ்லிம் பிள்ளைகளுக்கு மக்தப், குர்ஆன் ஓத மற்றும் இஸ்லாத்தின் அடிப்படையை (இஸ்லாமிய கல்வியை) கற்றுகொடுக்க வேண்டும். 

        இதற்கு இஸ்லாமிய சிந்தனை, நல்ல கல்வியறிவு பெற்றவர்களின் தேவை அதிகமாக உள்ளது. ஒவ்வோருவரும் நமது ஊர்களை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள முஸ்லிம் பிள்ளைகளுக்கு வாரம் ஒருமுறை சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் அங்கு சென்று அவர்களுக்கு இஸ்லாமிய கல்வி கற்று கொடுப்போம். இன்ஷா அல்லாஹ்….,

Monday, August 1, 2016

அமல்களில் மூன்றைத் தவிர

     ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:
1. சதக்கத்துல் ஜாரியா
2. பலன் தரும் கல்வி
3. பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள்.                  -அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்

       ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.

    இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

     மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்