Tuesday, February 16, 2016

முஸ்லிம்களின் அயோக்கியன் அக்பர்

         நமது பள்ளி புத்தகத்தில் முகலாய சாம்ராட்சியம் என்றால் அக்பர் என்ற ஒரு அயோக்கியன் பெயர்தான் வரும் அவனுடைய காலத்தை சிறந்த காலம் என்று படித்தோம். “AKBER THE GREAT” என்ற தலைப்பில் இருக்கும். இதை தான் நானும் படித்தேன் நீங்களும் படித்து இருப்பிர்கள். நாம் மட்டுமா நம்முடைய பிள்ளைகள் கூட இதை தான் படிக்கிறார்கள்.  ஏன் மற்ற முகலாய அரசர்களுக்கு இல்லாத சிறப்பை நமது பள்ளி பாட புத்தகத்தில் அக்பருக்கு இருக்கு என்று சற்று ஆய்வு செய்து பார்த்தால் தான் நமக்கு உண்மை தெரிகிறது. அந்த உண்மைகள் இங்கு காண்போம்.

  “தீனே இலாஹி” இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்டு, அக்பர் இருந்தவரை உயிரோடு இருந்து அவர் இறந்தபோது அந்த புதிய மதமும் சேர்ந்தே இறந்து போனது. இறந்து போன மதத்தைப் பற்றி இப்போது என்ன பேச்சு என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? வேறு வழியில்லை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த ஒரு அயோக்கியனை சிறந்த அரசர் என்று நம்மை நம்ம வைக்கிறார்கள். நமது குழந்தைகளையும் அதை படிக்க வைக்கிறார்கள் இந்த இஸ்லாமிய விரோத போக்கு கொண்ட காவி அதிகார வர்கத்தினர்.

 முகலாயச் சம்ராஜ்யத்தைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காக இந்து, முஸ்லிம் கொள்கைகளை ஒன்றாகக் கலந்து ஒரு புதியதொரு சமயக் கொள்கை உருவாக்கப்பட்டது. இந்து அரசவைப் பிரதானிகள் சக்கரவர்த்தியை மகிழ்விப்பதற்காக இந்து வேதங்களிலிருந்து சில தீர்க்க தரிசனக் கூற்றுகளை எடுத்துக் காட்ட முற்பட்டனர். அதேபோல் நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல முஸ்லிம் அறிஞர்கள் சிலர் அக்பரே வாக்களிப்பட்ட மஹ்திஎன்றும் எல்லாவற்றுக்கும் மேலாக அக்பர் தான் இமாமுல் முஜ்தஹித்என்றும் நீருபிக்க முனைந்தனர். அரசவைப் பிரதானிகளில் ஒருவரான சூஃபி ஒருவர் அக்பரை பரிபூரண மனிதன் என்றும் தற்கால கலீஃபா என்றும் பூமியில் இறைவனின் அவதாரம் என்றும் பிரகடனப்படுத்தினார்.

 அதன் அடிப்படைக் கொள்கை லா இலாஹ இல்லல்லாஹ் அக்பர் கலீஃபத்துல்லாஹ்என்பதாகும். (அதாவது வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அக்பர் அவனது பிரதிநிதியாவார்). இஸ்லாத்தை வெளிப்படையாகத் துறந்து விட்டு, அக்பரின் “தீனே இலாஹி” யில் பக்தி சிரத்தையோடு நுழைய வேண்டும்.

இம்மதத்தைத் தழுவியவர்கள் “சேலர்” என அழைக்கப்பட்டனர். அரசனை வழிபடல் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும் என்றனர். இஸ்லாத்துக்கு முரணான செயல்களான காலில் விழுதல், தீ வழிபாடு, மாலைப் பொழுது கிரியைகள், அரண்மனையினர் எழுந்து நின்று மரியாதை செய்தல், மணி அடித்தல், மும்மூர்த்திகளை வழிபடல் போன்ற கிரியைகள் செய்தனர். பசுக்களை அறுப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது, அன்றாடம் நான்கு வேளை சூரிய வழிபாடு செய்தனர். இஸ்லாமிய போதனைகள் தட்டுத்தடங்கலின்றி நிராகரிக்கப்பட்டன.

வட்டி, சூதாட்டம், மதுவருந்துதல் ஆகியவை சட்டபூர்வமாக்கப்பட்டன. நவ்ரூஸ் பண்டிகையின்போது மதுவருந்துதல் கட்டாயமாக்கப்பட்டது. பட்டும் தங்கமும் அணிவது ஆண்களுக்கு சட்டமுறையாக்கப்பட்டது இஸ்லாமிய போதனைகளுக்கு மாறாக பன்றி தூய்மையான புனிதமான ஒரு விலங்காகக் கருதப்பட்டது. இறந்த உடல்கள் புதைப்பதற்குப் பதில் எரியூட்டப்பட்டன; அல்லது ஓடும் நதியில் எறியப்பட்டன.

அக்பரின் அரசாங்க கல்விக் கொள்கை இஸ்லாமிய மார்க்க கல்வியை ஒழிக்கும் நோக்கோடு அமைக்கப்பட்டது. அரபு மொழியில் இஸ்லாமியச் சட்டம், ஹதீஸ் ஆகிய பாடங்கள் போதிப்பதற்கு அனுமதிக்கவில்லை.. இக்கலைகளை கற்றோர் செல்லாக்காசுகளாகவும், கீழ்த்தரமானவர்களாகவும், கருதப்பட்டனர். மொழியை பொறுத்தவரை சமஸ்கிருதப்படுத்திய ஹிந்தியை வளர்ப்பதற்குப் பேராவல் காட்டப்பட்டது. அரபு மொழிச் சொற்கள் படிப்படியாகக் கைவிடப்பட்டன. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் மார்க்க கல்விகூடங்கள் கைவிடப்பட்டன. சரியான மார்க்க அறிஞர்கள் நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பொதுமக்களின் நிலை இதைவிட மோசமாயிற்று இந்தியாவிலேயே இஸ்லாத்தை ஏற்றிருந்தவர்களுக்கு இஸ்லாமிய போதனைகளிலும் பண்பாட்டிலும் போதிய பயிற்சி அளிக்கப் பட்டிருக்கவில்லை. தூய இஸ்லாத்தைப் பற்றி தெளிவு இல்லாதவர்களாக மாறி ஆதலால் அவர்களின் நடைமுறை வாழ்க்கை எல்லா விஷயங்களிலும் மார்க்கத்திற்கு முரண்பட்டதாகவே இருந்தது.

இந்த புதிய கொள்கையை ஒழித்து கட்ட அல்லாஹ் ஒரு மார்க்க அறிஞரை அனுப்பி அவனுடைய மார்க்கத்தை காத்தான். யார் அந்த அறிஞர் இன்ஷாஅல்லாஹ் விரைவில் பார்ப்போம்...

நமது பிள்ளைகளுக்கு வரலாறுகளின் முக்கியத்துவத்தை சொல்லி இஸ்லாமிய பாரம்பரியத்துடன் வளர்ப்பாம்.! இஸ்லாமிய உண்மையான வரலாறுகளை சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Monday, February 1, 2016

யர்முக் போர் களம் (Battle_of_Yarmouk)

              அணி வகுத்திருந்த கிருஸ்தவப் படையிலிருந்து வெளியே வந்த ஜூர்ஜா என்பவர், முஸ்லிம் படைத் தலைவர் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைச் சந்திக்கவேண்டும் என்று கோரினார். ஜூர்ஜாவை காலித் அவர்கள் சந்தித்தார். ஜூர்ஜா பேச ஆரம்பித்தார்.  

           ஜூர்ஜா : “காலித்! தாங்கள் உண்மையை மட்டுமே சொல்லவேண்டும். காரணம், தாங்கள் சுதந்திர மனிதர். சுதந்திர மனிதர்கள் பொய் சொல்வதில்லை. தாங்கள் ஏமாற்றவும் கூடாது. காரணம் கண்ணியமிக்கவர்கள் ஏமாற்றமாட்டார்கள். தங்களுக்கு அல்லாஹ் வானுலகிலிருந்து ஒருவாள் வழங்கியதாகவும், அதனை முஹம்மது அவர்கள் தங்களிடம் கொடுத்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். இது உண்மையா?”

காலித் இப்னுவலீத் (ரலி): “உண்மை இல்லை”

ஜூர்ஜா : “அப்படியானால் தங்களை ‘அல்லாஹ்வின் வாள்’ என்று அழைப்பதற்கு என்ன காரணம்?”

       காலித் (ரலி): “நாங்கள் இருளில் கிடந்தோம். இறைவன் எங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியை வழங்கினான். ஆனால் நாங்கள் அவரைப் புறக்கணித்தோம். பின்னர் நிறைய பேர் அவரது வார்த்தைகளைச் செவி மடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களையும் அவர்களை ஏற்றுக் கொண்டவர்களையும் நாங்கள் தொல்லைகளுக்கு ஆட்படுத்தினோம். எங்களுக்கிடையில் சண்டைகளும் நடந்தன. கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் மீது இறைத்தூதர் அவர்களின் பிடி இறுகியது. எங்களுடைய இதயங்களும் தலைகளும் அல்லாஹ்வுக்கு அடி பணிந்தன. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மூலமாக அல்லாஹ் எங்களை நேர்வழியில் ஆக்கினான். அவர்களோடு சேர்ந்து நாங்களும் தீமைகளுக்கெதிராகப் போராடினோம்.

        ஒரு தடவை அண்ணலார் அவர்கள், ‘அல்லாஹ் வெளியில் எடுத்த நிறைய வாள்களில் ஒரு வாள் நீ’ என்று கூறினார்கள். அதற்கு பிறகுதான் நான் ‘அல்லாஹ்வின் வாள்’ என்று அழைக்கப்பட்டேன்.”

ஜூர்ஜா: “என்ன விஷயத்திற்காக எங்களை நீங்கள் அழைக்கிறீர்கள்?”

காலித் : “வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற சத்தியத்தை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் வாழ்ந்திடவும் வேண்டும்.”

ஜூர்ஜா: ”இன்று உங்களோடு சேர்பவர்களுக்கு என்ன அந்தஸ்து வழங்குவீர்கள்?”

காலித்: “இஸ்லாமில் எங்களுக்கு என்ன அந்தஸ்து உள்ளதோ அதே அந்தஸ்து உங்களுக்கும் கிடைக்கும். அல்லாஹ் எங்களுக்குக் கடமையாக்கிய காரியங்கள் உங்களுக்கும் கடமையாகும். எங்களுக்கிடையில் பிரமுகர்கள், சாதாரண மனிதர்கள், முதலில் வந்தவர், கடைசியில் வந்தவர் என்ற வித்தியாசம் இல்லை.”

ஜூர்ஜா: “இப்பொழுது வருபவர்களுக்கும் அதே பிரதிபலனும் அனுகூலங்களும் கிடைக்குமா?”

காலித்: “ஆம். கிடைக்கும். ஒரு வேளை எங்களை விட அதிகமாகவே அவர்களுக்குக் கிடைக்கும்.”

ஜூர்ஜா: “காரணம்…?”

காலித்: “நாங்கள் நிறைய தியாகங்கள் செய்திருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் இறைத்தூதர் அவர்கள் வாழ்ந்திருந்த சமயத்தில் நாங்கள் இஸ்லாமினுள் நுழைந்தோம். அவர்களுக்கு இறைச்செய்தி (வஹீ) வருவதை நாங்கள் நேரில் கண்டோம். இறை அத்தாட்சிகள் பலவற்றை அவர்கள் எங்களுக்குக் காண்பித்துத் தந்தார்கள். ஆனால் நீங்கள் அப்படியல்ல. அனைத்தையும் கேட்கும் வாய்ப்பு மட்டுமே உங்களுக்கு உள்ளது. அதனால் மனதறிந்து இஸ்லாமினுள் நுழைபவர்கள் உண்மையில் எங்களை விடச் சிறந்தவர்கள்.”

ஜூர்ஜா: “தாங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.”

ஜூர்ஜா இதனைச் சொல்லிவிட்டு முஸ்லிம் அணியில் வந்து நின்றார். கலிமாவை உரக்க மொழிந்தார்.  பின்னர் முஸ்லிம்களோடு சேர்ந்து கொண்டு எதிரிகளை எதிர்த்துப் போராடினார். ஒரு தடவை மட்டும்தான் அவர் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களோடு தொழுதார். அல்லாஹு அக்பர்! அன்று மாலையே அவர் ஷஹீதானார்.

          காலித் இப்னு வலீத் (ரலி) பற்றி படிக்க நீரைய வரலாற்று செய்திகள் உள்ளன. இவர்கள் இஸ்லாத்திற்க்கு வருவதற்கு முன்பு இருந்த நிலையும் சேர்ந்து படிப்பது சிறந்தது. நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும் இஸ்லாமிய அரசியல் முறையும் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!