Friday, January 16, 2015

உலகின் கருப்பு நாள் (World Black Day)

 அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

      இந்தியாவின் கருப்பு நாள் தெரியும், அது என்ன உலகின் கருப்பு நாள் என்று நம்மில் மெரும்பாலருக்கு புதியதாக தெரியும் ஆனால் இது புதுசு இல்லை. யூத, நசரானிகளின் 300 ஆண்டின் திட்டத்தின் பதில்தான் இந்த நாள். ஆம்!

       1924 மார்ச் 3ஆம் தேதி உலக முஸ்லிம்களின் உள்ளத்தில் பிரளயம் ஏற்ப்பட்ட நாள். தங்களது மார்க்க, சமுக வாழ்விற்கு பொறுப்பேற்று இருந்த முஸ்லிம்களின் உலகத் தலைமையான (உதுமானிய) கிலாஃபத் கலைக்கப்பட்ட நாள்.
       ஒரு ஊரில் இரண்டே இரண்டு முஸ்லிம்கள் இருந்தால் கூட அதில் தகுதியுள்ள ஒருவரின் தலைமையில் தான் அடுத்தவர் தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமிய சமுக அரசியல் கோட்பாடு. வரலாறு முழுக்க எதாவது ஒரு வகையில் தங்களுக்காக ஒரு ஒருங்கிணைந்த தலைமையை உருவாக்கிக் கொண்டு வாழ்ந்த உலக முஸ்லிம் சமுகம், 1924 இல் தலைமையே இல்லாத சமுகமாக, தாறுமாறாக பிளவுப்பட்ட சமுகமாக மாற்றப்பட்ட நாள்.

       முஸ்லிம்களின் உலகத் தலைமையை விழ்த்த வேண்டும் என்ற இலக்கோடு யுத, நசரானிகள் மூன்று நூற்றாண்டுகளாக உண்ணாமல், உறங்காமல் அதற்காகவே உழைத்து பலவிதமான சதித்திட்டங்களை நிறைவேற்றி கிலாஃபத்தை வீழ்த்திய நாள்....

        நமது பிள்ளைகளுக்கு இது போன்ற வரலாறுகள் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!


Thursday, January 1, 2015

அட்மிரல் செங்ஹி (Admiral Zheg He)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

        மனிதனின் அறிவும், ஆற்றலும், வீரமும், இறைவன் அவனுக்கு வழங்கியுள்ள மாபெரும் அருட்கொடையாகும். கடல் வழிப் பயணம் என்பது சாதாரணது கிடையாது, அது எல்லோராலும் முடிவதும் கிடையாது. அப்படிப்பட்ட கடல் வழிப் பயணத்தில் உலக சாதனை என்பது நினைத்து கூட பார்க்க இயலாத அளவிற்கு மிக ஆபத்தானது.

        1969 இல் மனிதன் நிலவில் கால்பதித்தான் என்று சொன்ன போது உலக மக்கள் எப்படி புருவம் உயர்த்தி வியந்தார்களே, அதே போல ஒரு சம்பவம் கி.பி.1405 ஆம் ஆண்டு தொடங்கி  கி.பி.1433 வரை  28 ஆண்டுகள் நடைப்பெற்று உலகின் கவனத்தைப் புரட்டிப் போட்டது.

        கி.பி 1371 ஆம் ஆண்டு சீனாவின் யுனான் மாகாணத்தில் பிறந்தவர்தான் செங்ஹி. இளம் வயதிலேயே வீரமும் விவேகமும் நிறைந்து காணப்பட்ட செங்ஹி  ஆரம்பமாக இஸ்லாமிய கல்வியைப் பயின்று பிறகு சீனாவின் தற்காப்புக் கலைகளையும் பயின்றார். அதே போல் சிறு வயதிலேயே தனது தந்தையோடு நெடுந்தூரம் பயணம் செய்து ஹஜ் செய்யும் வாய்ப்பையும் பெற்றார்.

         வாழ்நாளில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதையே தனது உயிர் முச்சாக்க கொண்டிருந்த செங்ஹியின் ஆர்வத்திற்கு சீனாவின் யுனான் மாகாணத்தை ஆண்ட மிங் பேரரசின் மன்னர் ஸுடி ஆதரவு அளித்தார். இந்தியப் பெருங்கடலில் உலகமே ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு பிரம்மாண்டமான கடல் பயணத்தை துவங்குமாறு அட்மிரல் செங்ஹிக்கு மன்னர் உத்தரவு பிறப்பித்தார்.

         சாதிக்க வேண்டும் என்ற துடிப்போடு இருந்த செங்ஹிக்கு மன்னரின் உத்தரவு அளவில்லா மகிழ்சியைத் தந்தது. இன்றைய சீனாவின் வர்த்தக தலைநகராகத் திகழும் ஷாங்காய்லிருந்து 40 கி.மி. தொலைவில் உள்ள “தாய்காய்” என்ற கப்பல் கட்டும் தளம் உள்ளது. அங்கே சென்ற அட்மிரல் செங்ஹி தனது மேற்ப்பார்வையில் அதுவரையிலும் உலகம் கண்டிராத, ஏன் கடலே கண்டிராத மிகப் பெரிய அளவிலான 62 கப்பல்களைக் கட்டுவதில் ஈடுபட்டார்.
              
        62 கப்பல்களும் கட்டி முடிக்கப்பட்டு கி.பி 1405 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கப்பல் கடலில் இறக்கப்பட்டது. ஒவ்வொரு கப்பலிலும் கடல் பயணிகள், மொழிபெயற்ப்பாளர்கள், மருத்துவர், தொழில் அதிபர், சமையல் கலைஞர்கள் என மொத்தம் 30 ஆயிரதிர்ற்கும் அதிகமானோர் இருந்தனர். ஒரு மாபெரும் நகரமே கடலில் மிதந்து வந்தது. உலகத்தில் ஒரு அதிர்வு ஏற்ப்பட்டது. உலகமே அட்மிரல் செங்ஹியின் கடல் பயணத்தை பற்றி பேசியது.
         இதன் மூலம் சீனாவின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. சீனாவை நோக்கி வர்த்தகர்கள் படைதிரண்டு வந்தனர். செங்ஹியின் கப்பல் அளவில் பெரிய கப்பல்களைக் கட்டுவதற்கான வர்த்தக ஒப்பந்தங்கள் சீனாவில் குவிந்தன. சீன வர்த்தகர்கள் வெளிநாடுகளில் பொருட்களை விற்ப்பதர்க்கும் வாங்குவதற்கும் இந்த வாய்பை பயன்படுத்திக்கொண்டனர்.

         பிரம்மாண்டமான கப்பல்கள் மூலம் உலகையே அதிசயிக்க வைத்த அட்மிரல் செங்ஹி தனது 7வது பயணத்தின் போது கப்பலிலேயே மரணமடைதார். அவருடைய உடல் சீனாவின் நாஞ்சியாங் நகரில் அடக்கம் செய்யப்பட்டு அங்கேயே அவருடைய அருங்காட்சியமும் உள்ளது.

         ஐரோப்பியர்களான கொலம்பஷும், வாஷ்கோடகாமாவும் தான் புதிய கடல் வழித்தடங்களைக் கண்டறிந்ததாக பச்சை பொய்களை வெட்கமில்லாமல் சொல்லி வருகின்றனர் சில ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள். அந்த அயோக்கியர்கள் கடலில் கால் வைப்பதற்கு 70, 80 ஆண்டுகளுக்கு முன்பே செங்ஹி உலகை வலம் வந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்க அந்த வஞ்சகர்களில் உள்ளம் மறுக்கிறது.

         கொலம்பஷும், வாஷ்கோடகாமாவும் புதிய நாடுகளுக்கு சென்று அந்த மண்ணில் வாழ்ந்த மக்களை எல்லாம் கொலைசெய்து கொன்று குவித்துவிட்டு அங்கே கொள்ளையடித்து  ஐரோப்பாவிற்கு சென்றார்கள். ஆனால் இவ்வளவு பெரிய படையுடன் உலகை வலம் வந்த செங்ஹி அல்லாஹ்வுக்கும் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்ட மனிதராக மிங் பேரரசின் சமாதன துதராகவே வலம் வந்தார் என்பது தான் வரலாற்று உண்மை.


         நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற சாதனையாளர்களின் வரலாறுகள் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!