Friday, December 2, 2016

அல் குவாரிஜிமி (கி.பி 780 - கி.பி 850) Al-Khawarizmi

அபு அப்துல்லாஹ் முஹம்மது இப்னு முஸா அல் குவாஜிரிமி தலைசிறந்த கணித மேதையாவார். 1, 2, 3  என்ற எண்முறைக் கணிதம் இவரது பெயராலேயே ஐரோப்பாவிற்கு அறிமுகமானது. இதனை ஆங்கிலத்தில்  (Algorithm) என்று அழைக்கின்றோம். அல் குவாரிஜிமி என்ற பெயரே மாறி அல்கோரிதம் என்று அழைக்கப்படுகிறது. இவர் அல்ஜிப்ரா என்ற கணிதவியலில் தந்தை என அழைக்கப்படுகிறார்.

இவர் கிதாப் அல்-ஜபர் வல் முகாபலா Al-Kitab al-Jabr wal mugabala” (Book on calculations by completion and balancing) என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். அல்-ஜபர் என்ற அரபி சொல்லே இன்று அல்ஜிப்ரா (Algebra) என்று சொல்லப்படுகிறது. இவரது கணித முறைகள் கிரேக்க இந்திய அறிவுதொகுதிகளுடன் இணைக்கப் பட்டுயிருந்தன.

மத்திய கால மேதைகளுள் எவரும் கைகொள்ளாத கணிதவியலின் புதிய சிந்தனைகளை இவர் கொண்டுயிருந்தார் என்று “பிலிப் ஹிட்டி“ எனும் அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கணித மேதையான பிரகுப்தாவின் 0 புஜ்ஜியதையும் அரபு எங்களையும் ஒன்று இணைத்து இவர் கண்டுபிடித்த எங்கள் தான் இன்று உலக முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இதனாலேயே இந்த எண்களுக்கு இந்டோ-அரப் எண்கள் என்று பெயர் வந்தது.


இவர் இதை கண்டுபிடிக்கவில்லை என்றால் நாம் 1984 என்ற என்னை MCMLXXIV  என்று எழுதியிருக்க வேண்டும்.

Wednesday, November 16, 2016

மக்கா வரலாறு சிலவரி செய்தியாக.

 ஒவ்வொரு முஸ்லிம் மீதும் 5 கடமைகள் உள்ளது, இதைதான் இஸ்லாத்தின் 5 தூண்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் 4 தூண்களை அதாவது 4 கடமைகளை அவரவர்கள் இருக்கும் இடத்திலேயே அல்லது வசிக்கும் இடத்திலேயே நிறைவேற்றலாம். அனால் 5வது கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற கண்டிப்பாக அவர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மக்கா என்ற புனித இடத்திற்கு செல்ல வேண்டும். இன்ஷா அல்லாஹ் இந்நகரம் பற்றி அடுத்த சில நாட்களுக்கு நம்பக்கதில் சிலவரி செய்தியாக காணலாம்.

ஹரம்_எல்லைகள்.
1.       மக்காவில் உள்ள அல்லாஹ்வின் முதல் வணக்கஸ்தளத்தை, கிப்லா பள்ளிவாசலை “ஹரம்” என்று அழைப்பார்கள்.
இந்த ஹரத்திற்கு எல்லைகள் உண்டு, முதலில் ஹரத்தின் எல்லைகள் ஜிப்ரஹில் (அலை) உதவியுடம் நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் இதை அமைத்தார்கள். பிறகு நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தமிம் பின் ஆசாத் அல்-குஜை அவர்களை அனுப்பி எல்லைகளை புதுபிக்க சொன்னார்கள். அதன் பிறகு உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷ் வம்சத்தை சென்ற நான்கு நமர்களை அனுப்பி அதை மறுபடியும் புதுபிக்க சென்னார்கள். இந்த எல்லைகள் தான் இன்று வரை மக்காவில் உள்ளது. பிறகு சவுதி அரசு அதை வளைவாகவும், துனாகவும் அழகுப்படுத்து உள்ளது.


ஹரத்தின் பெயர்கள்.
இந்த மக்காவிற்கு அதிகபடியாக  50 பெயர்கள் உண்டு, அல்லாஹ் அல்- குர்ஆனில் 5 பெயர்களில் அழைக்கின்றான்.. மக்கா (48:24), பக்கா (3:96), அல்-பலத் (90:1), அல்-குர்யாஹ் (16:112), உம்முல்குரா (6:92).

காபாவின் கட்டிடம் மற்றும் பராமரிப்பு.
காபா சிலமுறை கட்டப்பட்டதுள்ளது அல்லது பலமுறை பராமரிப்பு செய்யப்பட்டது, இதில் 5 முறை முழுவதும் தரையிலிருந்து கட்டப்பட்டது.
1.        மலக்குமார்களை கொண்டு முதலில் அல்லாஹ் இதை கட்டினான்.
2.        இரண்டாம் முறை ஆதம் (அலை) அவர்கள் இதை கட்டினார்கள்.
(இந்த இரண்டு முறையும் மண் முட்டுகலாகதான் அமைத்தார்கள் என்பது மார்க்க அறிகர்களின் கருத்து)
3.        நூஹ் நபிகாலத்து வெள்ள பெருக்காள் அழிந்த காபாவை ஒரு வடிவில் (இப்போது உள்ள) நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டினார்கள்.
4.        இஸ்லாம் மறு அறிமுகம் செய்யவதற்கு முன்பு சரியாக நபி (ஸல்) அவர்களுக்கு 25 வயது இருந்த போது குறைஷிகள் கட்டினார்கள்.
5.        ஐதாவது முறையாக அப்துல்லா இப்னு ஜுபைர் (ரலி) என்ற சஹாபி கட்டினார்கள்.


இப்ராஹிம் (அலை) கட்டிய காபா

இப்ராஹீம் (அலை) கூறினார்கள்: “ஒ இஸ்மாயிலேயே! அல்லாஹ் எனக்கு அவனை வணங்க ஒரு வீடுகட்ட கட்டளையிட்டுள்ளான் என்று சொல்லி ஒரு மண் மூட்டை காட்டினார்கள்”. பிறகு இஸ்மாயில் (அலை) கற்களை கொண்டுவர இப்ராஹீம் (அலை) காபாவை கட்டினார்கள். ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு பிறகு இப்ராஹீம் (அலை) உயரம் எட்டாததால் அல்-மகாம் என்ற கல்லின் மீது நின்றபடி கட்டிட வேலைகளை தொடர்தார்கள். பிறகு முழுவதையும் முடித்துவிட்டு இருவரும் இவ்வாறு கூறினார்கள் “ ....எங்கள் இறைவனே! எங்களிடமிருத்து இப்பணியை ஏற்றுக் கொள்வாயாக......(2:127)


நபி (ஸல்) அவர்களின் 25வயது சம்பவம்.
நாம் அதிகமாக கேள்வி பட்டதுதான், ஆனால் இங்கு அதையும் சுருக்கி சொல்கிறோம். நபி (ஸல்) 25 வது வயது வரை காபா நான்கு சுவராக இப்ராஹிம் (அலை) அவர்கள் கட்டியது போல தான் இருந்தது. பிறகு குறைஷிகள் மேல் தளம் (Roof) போட்டு கட்ட முடிவு செய்து ரோம் நாட்டு வணிகருடைய கப்பல் ஒன்று சிதலமடைத்து கிடப்பதை அறிந்து அந்த பலகைகளை எடுத்து மேல் தளம் (Roof) கட்ட முடியு செய்தார்கள். ஆனால் யார் அதை முதலில் இடிப்பது என்று பயந்து நின்றார்கள், பிறகு அல்-வலித் பின் அல்-முகரா என்பவர் காபாவை இடிக்க ஆரம்பித்தார்கள். அவருக்கு ஏதும் ஆகாததால் அவரை தொடர்ந்து மற்றவர்களும் இடித்த பிறகு முதல் தரம் (Roof) போட்டு காபாவை கட்டினார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு.

ஒரு போரின் போது காபாவின் அருகில் அப்துல்லா பின் ஜுபைரின் படை கூடாரம் அமைத்து இருந்ததனர். அப்போது கூடாரத்தில் ஏற்பட்ட தீ காபாவின் துணி மேல்பட்டு காபா பலகினமாகிவிட்டது. இதனாலும் இன்னும் சில காரணங்கலாழலும் போர் நிறுத்தப்பட்டது. பிறகு அப்துல்லா பின் ஜுபைர் காபா மிகவும் பலகினமாகி விட்டதால் சில எதிர்ப்புக்கு மத்தியில் காபாவை முழுவதும் இடித்துவிட்டு சில மாற்றங்களுடன் கட்டினார்.


காபாவின் தோற்றம் மற்றும் மாற்றங்கள்.
அதம் (அலை) முதல் இப்னு மர்வான் வரை.
1.   மலக்குமார்கள்: மணல் மூட்டுகள்.
2.   அதம் (அலை): மணல் மூட்டுகள்.
3.   இப்ராஹீம்(அலை):நான்கு சுவர்கள் மட்டும்.(மற்றும் நின்று கட்டிய கல்).
4.   குறைஷிகள்: நான்கு சற்று உயரமான சுவர்களுடன் ஒரு உயர்ந்த கதவு மற்றும் மேல் தளமுடன் (Roof).
5.   இப்னு ஜுபைர் (ஹிஜ்ரி 64) : இரண்டு வாசலுடன் வாசலை தரையுடன் ஒட்டி, ஒரு ஜன்னலும் வைத்தார்கள். கட்டடம் (Square) வடிவில் இல்லாமல் வேறு மாதிரி கட்டினார்கள் இந்த முறையில் தான் நபி இப்ராஹிம் (அலை) கட்டினார்களாம். இவர் கட்டிய முறைதான் நபி (ஸல்) அவர்களும் விருப்பியதாகவும் காபாவின் வடிவை குறைஷிகள் மாற்றியதாக சில ஹதிஸ்கள் உள்ளது. ஆனால் நபி (ஸல்) தங்களுடைய வாழ்நாளில் அதை மாற்றவில்லை.
6.   இறுதியாக அப்துல்லாஹ் இப்னு மர்வான் என்பவர் காலத்தில் மீண்டும் காபாவை முழுவதும் இடிக்காமல் சிறு மாற்றங்களுடன் மறுபடியும் நபி (ஸல்) வாழ்ந்த காலத்தில், இப்போது உள்ளது போல் மாற்றினார். இந்த வடிவம் தான் இன்று வரை உள்ளது.


காபாவில் துணி.
Tubba என்பவருடைய கனவில் காபா மூடி இருப்பது போல் தோற்றம் ஏற்பட்டது. அதனால் அவரே தோளை கொண்டும், பிறகு யமன் தேசத்து சிவந்த துணியால் மறைத்தார். அவருடைய மறைவுக்கு பிறகு விருப்பியவர்கள் காபாவை மறைத்தார்கள்.

உமர் பின் மக்ஜும் என்ற செல்வந்தர் அடுத்த ஒரு வருடத்திற்கு காபாவை மறைக்கும் பொறுப்பேற்று யமன் தேசத்து மிக உயர்ந்த மதிப்புள்ள துணியால் காபாவை மறைத்தார். இவரை தொடர்ந்து மற்ற செல்வந்தர்களும் கலிபா அட்சி வரும் வரை அவர்களே அதை தொடர்ந்து செய்தனர்.

மக்கா வெற்றிக்கு பிறகு கலிபாக்கள் ஆட்சியை தொடர்ந்து இன்று வரை வருடத்திற்கு இரண்டு முறை காபாவை துணியை மாற்றுகிறார்கள்.


 மகாம் இப்ராஹீம்:
காபாவை கட்டும்பொழுது இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு உயரம் எட்டவில்லை, ஆகையால் அவர் இந்த கல்லின் மீது நின்றுக்கொள்ள நபி இஸ்லாமில் (அலை) கல்லை எடுத்து கொடுத்தார்கள்.

அவர்கள் நின்று கட்டிய கல் இன்று வரை நமக்கு அத்தாட்சியாக அல்லாஹ் பாதுகாத்து வருகின்றான். இந்த கல் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் காலம் முதல் உமர் (ரலி) காலம் வரை காபாவை ஒட்டித்தான் இருந்தது. மக்கள் தவாப் செய்ய மிகவும் கஷ்டப்பட்டதால் உமர் (ரலி) அவர்கள் இந்த கல்லை சற்று பின் பக்கமாக இழுத்து இப்போது உள்ள இடத்தில் வைத்தார்கள்.

அல் ஹிஜ்ர்:
காபாவில் பக்கத்தில் “C“ வடிவில் சிறிய சுவருடன் இருக்கும் இடம்தான் ஹிஜ்ர். சரியாக இந்த இடத்தில்தான் அன்னை ஹாஜிராவையும் அவருடைய மகன் இஸ்மாயிலையும் நபி இப்ராஹீம் (அலை) விட்டு சென்றார்கள்.

நாம் ஏற்கனவே பார்த்த காபாவில் மாற்றம் இங்கு உண்டு. இந்த “ C” வடிவத்தில் உள்ள இடமும் காபாவை சேர்த்ததுதான். ஆகையால் தான் அப்துல்லாஹ் பின் ஜுபைர் இந்த இடத்தை சேர்த்து காபா கட்டினார்கள். பிறகு மீண்டும் அது இப்போது உள்ள வடிவில் மாற்றப்பட்டது.

காபாவின் உள்ளே செல்ல விருப்புபவர் இங்கு செல்லாம், காபாவின் உள்ளே தொழ விருப்புபவர் இங்கு தொழாம். நபி (ஸல்) காபாவில் மாற்றங்கள் செய்ய விருப்பினார்கள், ஆனால் எந்த மாற்றமும் செய்யவில்லை.

கருப்பு கல் ஹஜ்ருல் அஸ்வத்:
இந்த கல்லை பற்றி நாம் நிறைய ஹதிஸ் கேள்விப்பட்டு இருப்போம் (நபியின் 25 வயது சப்பவம்). நபி இப்ராஹிம் (அலை) காபா கட்டும்பொழுது கட்டிமுடிக்க ஒரு கல் தேவைப்பட்ட பொழுது நபி இஸ்மாயில் (அலை) தேட சென்றுவிட்டார்கள். அவர்கள் ஒரு கல் கொண்டு வந்தார், ஆனால் அதற்கு முன் நபி இப்ராஹீம் (அலை) அங்கு ஒரு கருப்பு கல்லை (ஹஜ்ருல் அஸ்வத்) வைத்தார்கள். அப்போது இவர் கேட்டார் தந்தையே இந்த கல் எப்படி வந்தது என்று, அவர் இது சொர்க்கத்திலிருந்து ஜிப்ரில் மூலம் வந்தது என்று கூறினார்.

மகாம் இப்ராஹிம் மற்றும் ஹஜ்ருல் அஸ்வத் ஆகிய இரண்டு கல்லும்   சொர்கத்திலிருந்து வந்தது என்று சில ஹதிஸ்கள் உள்ளது. 


ஜம்ஜம் நீர்:
ஜம்ஜம் உருவான வரலாறு நாம் அனைவருக்கும் தெரியும், அதிகமான பயான்களில் ஜம்ஜம் நீர் நபி இப்ராஹிம் (அலை) முதல் தொடர்ந்து தண்ணிர் தருகிறது என்று கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் அன்னை ஹாஜிரா அவர்கள் நபி இஸ்மாயிலுக்கு (அலை) நீர் கொடுத்து விட்டு தங்களுடைய நீர் பையில் தேவைக்கு ஏற்ப தண்ணிர் எடுத்த பிறகு ஜம்ஜம் நீர் நின்றுவிட்டது.
அதன் பிறகு ஜம்ஜம் இருக்கும் இடம் யாரு கண்ணுக்கும் தெரியவில்லை மறைக்கப்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்களின் தாத்த அப்துல் முத்தளிப் ஹஜ் பயணிக்கு தண்ணிர் கொடுக்கும் பொறுப்பில் இருந்த போது அவருடைய கணவில் ஜம்ஜம் தண்ணிர் இருக்கும் இடம் காண்பிக்கப்பட்டது. அதன் பிறகே கிணறு வெட்டப்பட்டு இன்று வரை தொடர்ந்து தண்ணிர் கொடுக்கிறது. இன்ஷால்லாஹ் மறுமை நாள் வரை கொடுக்கும்.

ஹிரா குகை:
ஜபழல் நூர் என்று அழைக்கப்படும் இந்த மலைமேல் தான் ஹிரா குகை அமைத்துள்ளது. உண்மையில் இந்த மலையும் அல்லாஹ்வின் பரகத் பெற்ற மலைதான் என்று  சொல்லவேண்டும்.
இந்த மலையில் உயரத்தில் உள்ள குகை தான் “ஹிரா”. இந்த குகையில்தான் நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்தது. இந்த மலை நபியுடைய வீடு என்று சொல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 12 கி.மி. தொலைவில் அமைத்துள்ளது.

இந்த குகையில் நபி (ஸல்) பலமுறை, பல நாட்கள் தங்கியும் உள்ளார்கள். இப்போது மேலே செல்ல பாதை உள்ளது, ஆனால் நிச்சயம் சொல்ல முடியும் அன்று எந்த பாதையும் இல்லாத பொழுது அவ்வளவு உயரத்தில் உள்ள குகைக்கு சென்றார்கள் என்பது சாதாரண விஷயமில்லை.

மேலே சென்று அதை பார்த்தவன் என்ற முறையில் என்னுடைய தனிப்பட்ட கருத்து “40 வயது கொண்ட ஒருவர் இவ்வளவு உயரம் சென்றார்கள் என்றால் நிச்சயம் நபி (ஸல்) சாதாரண நபராக இருக்கமுடியாது . தன்னுடைய சிறு வயது முதல் சுறு சுறுப்பாக, (well active, adventure) ஆச்சரியமான செயல்களில் ஈடுபடுபவராக தான் இருந்துருக்க வேண்டும்”.

அரபா மைதானம்:
ஜபழல் ரஹ்மான் – “ ரஹ்மத் மிக்க மலை”
பெரும்பாலும் ஒரு அளவுக்கு மார்க்கம் தெரிந்தவர் இந்த பெயரை கேள்விப்பட்டு இருப்பார்கள். நபி (ஸல்) ஹஜ்ஜின் போது மக்களை இந்த மைதானத்திற்கு அழைத்து சென்று ஒரு பெரும் உரை ஆற்றினார்கள், அந்நேரத்தில் ஒரு வசனம் வந்தது அந்த வசனமே குரானின் இறுதி வசம் அத்துடன் இஸ்லாமும் குரானும் முழுமை பெற்றது.
அப்போது நபி (ஸல்) ஆற்றிய அவ்வுரைதான் நபியின் “இறுதி பேருரை” ஆகும். ஹஜ் செய்ய செல்பவர் அனைவரும் அந்த குறிப்பிட்ட நாளில் கட்டாயமாக இந்த மைதானத்தில் இருக்க வேண்டும், இல்லையேல் அவருடைய ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படாது.


மொழிபெயர்ப்பு:
கடந்த ஒரு சில நாட்களாக நமது பக்கத்தில் வந்த தகவல் அனைத்தும் History of Makkah  (மக்காவில் வரலாறு) என்ற புத்தகத்தில் இருந்து எடுத்தது. நாம் மிகவும் சுருக்கி மக்கள் படிப்பதற்காக பதிவு செய்தோம். முழுவிபரமும் இந்த புத்தகத்தில் உள்ளது.
அரபி: ஷெய்க் சபியுர் ரஹ்மான் முபாரக்புரி
ஆங்கிலம்: நசுறிதின் அல்-கத்தாப்
தமிழ்: இஸ்லாம் ஆசிக்
ISBN: 9960-892-02-6


Tuesday, November 1, 2016

இஸ்லாமிய நாள்காட்டி (Islamic Calender)

     நாம் ஹிஜ்ரி 1436 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளோம். ஹிஜ்ரி என்ற சொல்லை, இஸ்லாமிய ஆண்டுக்குத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியுண்டு. அவ்வரலாற்று நிகழ்ச்சியை சற்று சுருக்கமாக செல்ல முயற்சி செய்கிறேன்.

ஹிஜ்ரி 17 ஆம் ஆண்டு வரை இப்படி ஒரு நாள்காட்டியே இல்லை. அதுவரை அரேபியர்கள் வருடங்களுக்கு பெயர்வைத்து ஆண்டுகளை கணக்கிட்டுக்கொண்டனர் (அ) யானை ஆண்டு என்று குறிப்பிட்டு வந்தனர்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிகாலத்தில் பஸ்ராவின் கவர்னர் அபு மூஸா அல்-ஷேஹ்ரி (ரலி) அவர்களிடமிருந்து கடிதம் வந்தது, அதில் நீங்கள் அனுப்பும் கடிதங்களில் ஷாபான் என்று தான் உள்ளது, அது முடிந்த மாதமா இல்லை அடுத்து வரும் ஷபானா என்று தெரியவில்லை, ஆகவே இனி அனுப்பும் கடிதங்களின் ஆண்டும் சேர்த்து அனுப்புக்கள் என்று இருந்தது.

ஆண்டின் தேவையை உணர்ந்த உமர் (ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து "வருடத்தை எந்த நாளிலிருந்து எந்த ஆண்டுலிருந்து துவங்கலாம்?' என்று ஆலோசனை கேட்டார்கள். மக்களிடம் இருந்து நபிகளாரின் பிறப்பு, இறைத்தூதராக ஆன ஆண்டு, ஹிஜ்ரத் செய்த ஆண்டு, இறப்பு போன்ற பல கருத்துக்கள் வந்தது.

நபி (ஸல்) அவர்களின் உயிருக்கு ஆபத்து வந்த போது, உயிர், உடமை, உறவு என அனைத்தையும் துறந்து, பிறந்த மண்ணையும் விட்டு, வெளியேறிய தியாகத்திற்கும், செயலுக்கும் முன்பாக வேறெந்தச் செயலையும் நபித் தோழர்கள் உயர்வாகக் கருதவில்லை. இந்த வெளியேற்றமே (ஹிஜ்ரத்) இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்பட வரலாற்றில் ஓர் திருப்புமுனையாகவும் அமைந்தது. அத்துடன் அலீ (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பு பூமியை விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்' என்றதால் உமர் (ரலி) அவர்களும் அதையே துவங்க ஆண்டாக முடிவு செய்தார்கள்.

பிறகு எந்த மாதத்தை முதல் மாதமாகக் கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் சிலர் ரமலான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் முஹர்ரம் என்று கூறினார்கள். "ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம் போர் தடை செய்யப்பட்ட மாதம் மேலும் மக்கள் ஹஜ் செய்து விட்டுத் திரும்பும் போது வரும் முதல் மாதம்'' என்று குறிப்பிட்டார்கள். இந்த கருத்தே தேர்வு செய்யப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது.

இறுதியாக உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி 17 ஆம் ஆண்டு ஜாமதுல் ஆகிர் பிறை 20 (06-07-638) அன்று இஸ்லாமிய நாள்காட்டி அறிமுகம் செய்யப்பட்டது. ஹிஜ்ரி 1-1-1 =  ஈசவி 16-07-622.

நாம் ஹிஜ்ரி நாள்காட்டியை முழுவதும் நடைமுறைபடுத்த இனி சாந்திய கூறுகள் இல்லை என்ற வாதம் பரவலாக பேசபட்டாலும் அது முற்றிலும் உண்மையில்லை. முயற்சி செய்யலாம் என்பது என்னுடைய கருந்தாக நான் இங்கு பதிய வைக்கிறேன். இஸ்லாமிய நாள்காட்டிதான் பயன்படுத்த வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லையேன்ற போதிலும் நமெக்கென சொந்தமாக உள்ள நாள்காட்டியை பயன்படுத்த முயற்சி செய்வோம். இன்ஷாஅல்லாஹ்!

கி.பி 16ஆம் நூற்றாண்டில் கத்தோலியர்களின் போப்பாக க்ரகேரி என்பவரின் தலைமையில் கி.பி.1582இல் வடிவமைக்கப்பட்டதே நாம் இப்போது பயன்படுத்தும் இந்த ஈசவி காலாண்டர். போப் ஆரம்பித்து வைத்த காலாண்டர் என்பதால் ஐரோப்பாவில் அரசர்கள் வாதம் பண்ணாமல், ஐரோப்பியர்கள் அனைவரும் போப் வடிவமைத்த காலாண்டரையே உபயோகித்தனர். 18ஆம் நூற்றாண்டில் பிரிடிஸ் ஆதிக்கம் ஆசியநாடுகளில் பரவியபோது இந்த க்ரகேரியன் காலாண்டறும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்று அதுவே உலகப் பொதுக் காலாண்டராக்கப்பட்டுவிட்டது.