Tuesday, November 1, 2016

இஸ்லாமிய நாள்காட்டி (Islamic Calender)

     நாம் ஹிஜ்ரி 1436 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளோம். ஹிஜ்ரி என்ற சொல்லை, இஸ்லாமிய ஆண்டுக்குத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியுண்டு. அவ்வரலாற்று நிகழ்ச்சியை சற்று சுருக்கமாக செல்ல முயற்சி செய்கிறேன்.

ஹிஜ்ரி 17 ஆம் ஆண்டு வரை இப்படி ஒரு நாள்காட்டியே இல்லை. அதுவரை அரேபியர்கள் வருடங்களுக்கு பெயர்வைத்து ஆண்டுகளை கணக்கிட்டுக்கொண்டனர் (அ) யானை ஆண்டு என்று குறிப்பிட்டு வந்தனர்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிகாலத்தில் பஸ்ராவின் கவர்னர் அபு மூஸா அல்-ஷேஹ்ரி (ரலி) அவர்களிடமிருந்து கடிதம் வந்தது, அதில் நீங்கள் அனுப்பும் கடிதங்களில் ஷாபான் என்று தான் உள்ளது, அது முடிந்த மாதமா இல்லை அடுத்து வரும் ஷபானா என்று தெரியவில்லை, ஆகவே இனி அனுப்பும் கடிதங்களின் ஆண்டும் சேர்த்து அனுப்புக்கள் என்று இருந்தது.

ஆண்டின் தேவையை உணர்ந்த உமர் (ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து "வருடத்தை எந்த நாளிலிருந்து எந்த ஆண்டுலிருந்து துவங்கலாம்?' என்று ஆலோசனை கேட்டார்கள். மக்களிடம் இருந்து நபிகளாரின் பிறப்பு, இறைத்தூதராக ஆன ஆண்டு, ஹிஜ்ரத் செய்த ஆண்டு, இறப்பு போன்ற பல கருத்துக்கள் வந்தது.

நபி (ஸல்) அவர்களின் உயிருக்கு ஆபத்து வந்த போது, உயிர், உடமை, உறவு என அனைத்தையும் துறந்து, பிறந்த மண்ணையும் விட்டு, வெளியேறிய தியாகத்திற்கும், செயலுக்கும் முன்பாக வேறெந்தச் செயலையும் நபித் தோழர்கள் உயர்வாகக் கருதவில்லை. இந்த வெளியேற்றமே (ஹிஜ்ரத்) இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்பட வரலாற்றில் ஓர் திருப்புமுனையாகவும் அமைந்தது. அத்துடன் அலீ (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பு பூமியை விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்' என்றதால் உமர் (ரலி) அவர்களும் அதையே துவங்க ஆண்டாக முடிவு செய்தார்கள்.

பிறகு எந்த மாதத்தை முதல் மாதமாகக் கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் சிலர் ரமலான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் முஹர்ரம் என்று கூறினார்கள். "ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம் போர் தடை செய்யப்பட்ட மாதம் மேலும் மக்கள் ஹஜ் செய்து விட்டுத் திரும்பும் போது வரும் முதல் மாதம்'' என்று குறிப்பிட்டார்கள். இந்த கருத்தே தேர்வு செய்யப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது.

இறுதியாக உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி 17 ஆம் ஆண்டு ஜாமதுல் ஆகிர் பிறை 20 (06-07-638) அன்று இஸ்லாமிய நாள்காட்டி அறிமுகம் செய்யப்பட்டது. ஹிஜ்ரி 1-1-1 =  ஈசவி 16-07-622.

நாம் ஹிஜ்ரி நாள்காட்டியை முழுவதும் நடைமுறைபடுத்த இனி சாந்திய கூறுகள் இல்லை என்ற வாதம் பரவலாக பேசபட்டாலும் அது முற்றிலும் உண்மையில்லை. முயற்சி செய்யலாம் என்பது என்னுடைய கருந்தாக நான் இங்கு பதிய வைக்கிறேன். இஸ்லாமிய நாள்காட்டிதான் பயன்படுத்த வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லையேன்ற போதிலும் நமெக்கென சொந்தமாக உள்ள நாள்காட்டியை பயன்படுத்த முயற்சி செய்வோம். இன்ஷாஅல்லாஹ்!

கி.பி 16ஆம் நூற்றாண்டில் கத்தோலியர்களின் போப்பாக க்ரகேரி என்பவரின் தலைமையில் கி.பி.1582இல் வடிவமைக்கப்பட்டதே நாம் இப்போது பயன்படுத்தும் இந்த ஈசவி காலாண்டர். போப் ஆரம்பித்து வைத்த காலாண்டர் என்பதால் ஐரோப்பாவில் அரசர்கள் வாதம் பண்ணாமல், ஐரோப்பியர்கள் அனைவரும் போப் வடிவமைத்த காலாண்டரையே உபயோகித்தனர். 18ஆம் நூற்றாண்டில் பிரிடிஸ் ஆதிக்கம் ஆசியநாடுகளில் பரவியபோது இந்த க்ரகேரியன் காலாண்டறும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்று அதுவே உலகப் பொதுக் காலாண்டராக்கப்பட்டுவிட்டது.

No comments:

Post a Comment