Friday, April 15, 2016

பள்ளிவாசல்களில் சுதந்திர தினமா?

வரலாறு என்பது என்றும் மாறாது, அப்படி மாறினால் அது வரலாறாக இருக்க முடியாது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் கடந்த 65 வருடங்களாக பல வழிகளில் சோதனைக்கு ஆழக்கப்படுகிறோம்.

 இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான வேலைகளின் ஒன்றுதான் கல்வியிலும், இந்திய சுதந்திர வரலாறுகளிலும் காவியில் கையாடல். R.S.S யின் மேதாவிகள் கடந்த 50 வருடங்களாக முயற்ச்சி செய்து இந்திய சுதந்திரத்திற்கும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களுக்கு துளி கூட பங்கு இல்லாததது போல் வரலாறுகளை மாற்றி எழுதியுள்ளார்.

உண்மையில் இந்தியாவை செழிப்பாக ஆண்டவர்களும், இந்திய சுதந்திர போரில் அதிகமாக பங்கு பெற்றவர்களும் இந்திய முஸ்லிம்களே. பள்ளிகூட புத்தகங்களில் இந்திய முஸ்லிம்களை பற்றி தவறாக இருந்தாலும் இப்போது உள்ள முஸ்லிம்கள் தங்களுடைய கண்ணை திறந்து இந்திய முஸ்லிம்களின் தியாகம், வரலாறு என்று நிறைய தலைப்புகளில் தலைவர்களின் பேச்சாலும், வரலாற்று புத்தகங்களாலும் உண்மையான இந்திய சுதந்திர முஸ்லிம் வீரர்களின் வரலாறுகளை நாம் ஒரு அளவுக்கு தெரிந்து கொண்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்..!

உண்மையில் இந்திய சுதந்திர போரில் பள்ளிவாசல்களும், மதரஷாகளும் தான் மக்களுக்கு அதிகமாக சுதந்திர உணர்வை ஏற்ப்படுத்தியது. இதன் காரணாமாகவே முஸ்லிம்கள் இந்திய சுதந்திர போரில் அதிகமாக கலந்து கொண்டனர். நிச்சயமாக இந்திய சுதந்திர போரில் முஸ்லிம்கள் பங்கு பெறவில்லையெனில், இன்று வரை நம் இந்திய நாடு அந்நியர்களிடம் அடிமை பட்டுதான் இருக்கும் என்பதில் மாற்று கருந்துயில்லை.

சரி இந்திய விடுதலை பெற்று விட்டது. நமக்கு எதிராக காவிகள் செயலாற்றினாலும், இப்பொழுது ஒரு அளவுக்கு நாம் சுதந்திர வரலாறுகள் தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் இந்திய விடுதலைக்காக முழுக்கு முழுக்க களத்தில் இறங்கிய பள்ளிவாசல்களிலும், மதரஷாகளிலும் அதன் நிலை என்ன?

ஏன் நாம் இந்திய சுதந்திர தினத்தை பள்ளிவாசல்களிலும், மதரஷாகளிலும் நினைவு படுத்துவதில்லை? இந்திய சுதந்திர போருக்காக தனது உயிரையே கொடுக்க நமது முஸ்லிம் வீரர்கள் இங்கு இருந்துதானே புறப்பட்டார்கள்? பிறகு ஏன் நமக்கு அதில் தயக்கம்?

உண்மையில் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாட முழு தகுதி பெற்றவர்கள் நாம் மட்டும் தான் அதற்க்கான சரியான இடம் பள்ளிவாசல்களும், மதரஷாகளும் தான். நாம் நமது பள்ளிவாசல்களிலும், மதரஷகளிலும் இந்திய சுதந்திர தினத்தன்று சிறப்பு பயான் வைத்து அந்த நாளை ஒவ்வொரு வருடமும் நினைவு படுத்தினால் இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் RSS மட்டும் இல்லை இது போல இன்னும் 100 இயங்கங்கள் வந்தாலும் இந்திய முஸ்லிம்களின் வராலாறுகளை அழிக்கமுடியாது. 

  இன்ஷாஅல்லாஹ் அதற்க்கான முயற்சியில் மதராஷாகளின் பொருப்பாளிகளும், பள்ளிவாசல்களின் முத்தவல்லிகளும் முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இஸ்லாமிய இயக்கங்களும் தங்களுடைய தலைமை மற்றும் கிளை அலுவலகத்திலும் சுதந்திர தின சிறப்பு பயான் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி வைத்தால் வரும் தலைமுறைக்கு இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்கள் பங்கு பற்றி எப்போதும் நினைவில் இருக்கும். இன்ஷாஅல்லாஹ்..!

No comments:

Post a Comment