இஸ்லாமிய அறிவை உயிர்ப்போடு எப்போதெல்லாம் முஸ்லிம் சமுதாய மக்களும்,
தலைவர்களும், கொண்டிருந்தனரோ அப்போதெல்லாம் உலகின் உயரிய சமூகமாக இறைவன்
முஸ்லிம்களை ஆக்கினான். இஸ்லாமிய அறிவில் குறைவு ஏற்பட்டால் வீழ்ச்சி நிச்சயம்
என்பதை வரலாற்று சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
மாவீரன் சுல்தான் சலாவுதீன்
அய்யூபி, சுலைமான் அல் கானூனி, ஹஜ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் போன்ற ஒரு சில
உயிப்புள்ள கலிபாக்கள், சுல்தான்கள், அரசர்கள் தங்களுக்குப் பிறகு தங்களை போன்ற
திறனுடைய அடுத்த தலைவர்களை உருவாக்காமல் சென்றதுதான் உலகின் பல பாகங்களில் ஆட்சி
செய்த முஸ்லிம்களின் அரசுகள் சரிந்து வீழ்ந்ததற்கான மிக முக்கிய காரணம் என்பதை
நாம் எப்பொழுதும் நினைவில் கொண்டு நமது இலட்சிய பயணத்தை தொடருவோமாக.. நமது
வெற்றிக்கு அல்லாஹ்விடம் அதிகமாக துஆ செய்வோமாக.! ஆமீன்.!