Tuesday, March 1, 2016

புனிதப் போராளியின்...

   இன்றுடன் (28.01.2016) சமுதாயப்போராளி பழனிபாபா இறந்து 19 ஆண்டுகள் கடந்து விட்டது. அவரை பற்றி நான் படித்த வரிகளில் உங்களுக்காக சில.

அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டிய அல்ஹாஜ் பழனிபாபா அவர்களது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும். 

சொந்த ஊர்:  பழனியிலிருந்து  4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ள புது ஆயக்குடியில் பழனிபாபா  பெற்றொருக்கு  இரண்டாவது குழந்தையாக  14/11/1950ல் பிறந்தார்.

ஆரம்பக் கல்வி:  குன்னூரில் உள்ள செயின்ல் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் ஆரம்பக்கல்வியை தொடங்கினார். அடுத்து மேல்நிலைக்கல்வியை புது ஆயக்குடியில் உள்ள ஐ.டி.ஒ (I.D.O) மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.

 பட்டப்படிப்பு: பழனியில் உள்ள பழனி ஆண்டவர் கலைக் கல்லுரியில் ஆங்கில இலக்கியம் பட்டம் பயின்று முடித்தார். அதன் பிறகு டெல்லியில் 10 ஆண்டுகள் இருந்தப்போது முதுகலை மற்றும் முனைவர் (Phd.,) பட்டம் பெற்றார்.

 பொது வாழ்க்கை: நைனா முஹம்மது என்பவர் தலைமையில் புது ஆயக்குடியில் முஸ்லிம் லீக் சார்பில் நடந்த கூட்டம்தான் பழனிபாபாவின் முதல் பொதுக்கூட்டம் அதன் பின் ஆயிரக்கணக்கான மேடைகளில் அடைமழையென,  புயலென,  அழகான அற்புதமான  புள்ளிவிபரங்களுடன் பேசி இஸ்லாமிய சமுதாயத்தின் எழுச்சிக்கு வித்திட்டார். அவரது பேச்சுக்கள் இஸ்லாமிய இளைஞர்களின் தேசிய கீதமானது.  பாபா தனது வாழ்நாளில் பேசிய மொத்தக் கூட்டங்களின் எண்ணிக்கை 13201 ஆகும். இறுதியாக அவர் பேசிய கூட்டம் நாகை மாவட்டம் திட்டச்சேரியில்  07/12/1996  அன்று  நடைபெற்றப் பொதுக்கூட்டமாகும்.

முதன் முறையாக எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற சில காலங்களிலேயே சென்னைக் கோட்டைக்குள் நுழைய பழனிபாபாவிற்கு தடை என அரசானை வெளியானது. “யார் இந்த பழனிபாபா?” என்று தமிழக மக்கள் பார்க்கத் தொடங்கினர்.

 எம்.ஜி. இராமச்சந்திரன் அவரது ஆட்சிக் காலத்தில்,  ‘பழனிபாபா  பொது கூட்டங்களில் பேசக்கூடாது எனத் தடை உத்தரவு போட்டிருந்தார். இதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் எருமை மாடுகளை கட்டிவைத்து,  மைக் வைத்து புள்ளி விபரங்களுடன் தனது கருத்துகளை பேசிய பாபா, "மக்கள் கிட்ட பேசுறதும்உங்க கிட்ட பேசுறதும் ஒன்றுதான்" என்று காமண்ட் அடித்தார்.

  வழக்குகள்:  பழனிபாபா மீது 136 வழக்குகள்125 முறை சிறைவாசம். பாபா மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் கருணாநிதி ஆட்சியில்  2 முறை போடப்பட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி திரு. ஆர்.வெங்கட்ராமன் பதவி வகித்த காலத்தில் அரசு பணத்தில் (240 கோடி ரூபாய்) திருப்பதி கோவிலுக்கும்காஞ்சி சங்கர மடத்துக்கும் அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரிசென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து பலரது புருவத்தை உயர வைத்தார். அதன்பின்  “சென்னை உயர்நீதிமன்றம்”  தள்ளுபடி செய்தது. பழனிபாபா மனம் தளராமல் டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு சாதனை சரித்திரமானது இவ்வழக்கு!.

எழுத்துப்பணி:  இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ஹிந்துஸ்தானத்திற்கு ஹிந்துவுக்கு ஆபத்துஎன்ற இராம.கோபாலனுடைய நூலுக்கு மறுப்புரை நூலையும் எழுதினார்.  மறுப்புரை நூல் பரபரப்பாக பேசப்பட்டது. அரசால் தடைசெய்யப்பட்டது. கிறிஸ்துவம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார், அதன் வெளிப்பாடே "பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதாஎன்ற நூல். பாபர் மஸ்ஜித் தொடர்பாக ஆங்கிலத்தில் பாபா எழுதிய நூல் தான்  Who Is Law Abiding On The Issue Of Babri Masjid? நூலாகும். இவ்வாறு நூல்களை எழுதியதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கைகளையும் தொடங்கினார். பாபா நடத்திய  “அல்முஜாஹித்”,  “முக்குல முரசு”, “புனிதப்போராளி”,  ஆகிய பத்திரிக்கை ஆகும்.


வெளிநாட்டு பயணம்:  இலங்கைமலேசியாசிங்கப்பூர் மற்றும் பல நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை பேசினார்.  1988ம் ஆண்டு அமெரிக்காவில் பைபிள் பற்றிய பல சர்ச்சைகளுக்கும் குர்ஆனின் விஞ்ஞான விளக்கங்களும் என்ற தலைப்பில் பிலடெல்பியா மாகாணம் பெல்லொஷிப் பல்கலைக் கழகத்தில் 13 மணி நேரம் தொடர் உரையாற்றி அமெரிக்க விஷயதாரிகளை வியப்புக்கு உள்ளாக்கியவர். அந்தப் பிரச்சாரத்தில் ஏராளமான அயல்நாட்டினர் அமெரிக்கர் உட்பட அல்லாஹ்வின் மார்க்கமாம் இஸ்லாத்தை அப்படியே துணிந்து ஏற்றனர்.

 மறைவு: 1997 ஜனவரி 28ந் தேதி நண்பர் தனபால் வீட்டிற்கு சென்றார். அவருடன் பேசிக் கொண்டிருந்த பாபா பின்னர் சுமார்  இரவு 9:30மணிக்கு அங்கிருந்து வெளியே வந்துதனது ஜீப்பில் ஏறி அமர்ந்தார். அப்போது ஏதோ விசாரிக்க வந்தவன் போல் வந்த ஒருவன்,  ஒரு கோடாரியால் பாபாவின் வயிற்றில் வெட்டினான். அசைய முடியாத நிலையில் இருந்த பாபாவின் குடல் சரிந்ததும் கழுத்திலும்முகத்திலுமாக 18 வெட்டுகள் விழுந்தன. அந்த இடத்திலேயே பாபா ஷஹித் ஆனார்.  மறுநாள் 29-ம் தேதி புது ஆயக்குடிக்கு பாபாவின் ஜனாஸா (உடல்) கொன்டுவரப்பட்டு அன்று மாலை 5:30 மணிக்கு ஐ.டி.ஒ. (IDO) மேல்நிலைப்பள்ளி எதிரில் அடக்கம் செய்யப்பட்டது.. 

  நமது பிள்ளைகளுக்கு இந்திய வரலாறுகளையும், இந்திய அரசியல் சாசனங்களையும் சொல்லி, இஸ்லாமிய முறைப்படி வளர்ப்போம். இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

No comments:

Post a Comment