Saturday, August 1, 2015

ஜிப்ரடில் மலை அடிவாரம் (கி.பி. 711 ஜூலை 13)

      இன்று (கி.பி. 711. ஜூலை 13) தாரிக் இப்னு ஜியாத் அவர்கள் இன்றைய ஸ்பெயின் உள்ள ஜிப்ரடில் மலை அருகில் போர் துவங்குவதற்கும் சிறிது நேரத்திற்கு முன்பாக ஆற்றிய உரை.

அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் துணை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.
       “எனதருமை வீரர்களே! உங்களுக்கு பின்னால் கடல் இருக்கிறது. முன்புறம் நவீன ஆயுதங்களோடு எதிரிகள் அணிவகுத்து நிற்கின்றனர். அல்லாஹ்வின் மீதும், தனித்துவமிக்க உங்களின் தன்னம்பிக்கையின் மீதும், மன உறுதிப்பாட்டின் மீதும், தான் நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக நிற்கிறீர்கள். எதிரிகளை வீழ்த்தி உடனடி வெற்றியைப் பெறவில்லை என்றால் உங்களது நம்பிக்கையான எதிர்க்கலாம் பாழாகிவிடும்.

       எதிரிகளின் உள்ளங்களில் பதற்றமும், பீதியும் நிறைந்துள்ளது. அவர்கள் வயிறு முட்டக் குடித்துவிட்டு நிற்கின்றனர். வீரர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அதிகமதிகம் வணக்கங்களில் ஈடுபடுங்கள். அல்லாஹ்விடம் மனமுருகி துஆ செய்யுங்கள். “ஷஹிது” என்ற உன்னதமான நிலையை அடைய மனதில் “நிய்யத்” செய்யுங்கள்.

       இந்தப் போரில் உங்களை வழிநடத்தும் நான் உங்களில் முதல் நபராக உங்கள் எதிரிகளை சந்திப்பேன் என்று உறுதி கூறுகிறேன். உங்களுக்கு ஏற்ப்படும் எந்த அபாயமும் எனக்கும் சொந்தமானது. உங்களில் இருந்து எந்த சுழலிலும் நான் விலகி செல்ல மாட்டேன். இது அல்லாஹ்வின் மீது ஆணை! சத்தியத்தை நிலைநிறுத்துவதே நமது குறிக்கோள்.

       உங்களில் யாராவது உயிருக்கு பயந்து புறமுதுகிட்டு ஓடினால் அவர்களுக்கு பரிசு மரண தண்டனையே! இன்ஷாஅல்லாஹ் போரில் வெற்றி பெரும் நமக்கு இந்த நாட்டில் சிறப்பான பரிசுகள் காத்திருக்கின்றன. அமீருல் முஃமினின் கலிஃபா வலிது இப்னு அப்துல் மாலிக் அவர்கள் தங்களின் அரபு இன வீரர்களில் இருந்து தனித்திறன் பெற்ற உங்களை இந்த புனிதப் போரில் முதல் நிலை வீரர்களாகத் தேர்வு செய்துள்ளார். அல்லாஹ்வின் வார்த்தைகள் ஐரோப்பிய மண்ணில் ஓங்கி ஒலித்திட வேண்டும் என்பதே கலிஃபா அவர்களின் விருப்பம்.

விஷிகோத் மன்னன் ரோட்ரிக்ஷை நேருக்கு நேர் சந்திக்கும் முன்பாக நான் விழ்ந்தால் எனது இந்த உத்தரவுகளை இரட்டிப்பாக்கி வீறுகொண்டு எழுந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை இந்த மண்ணில் நிலை நிறுத்துங்கள். ரோட்ரிக்ஸ் விழ்ந்தால் அவனோடு அவனது வீரர்களையும் வெற்றி கொள்வீர்கள்.”

      என்று வீரத்தளபதி தாரிக் பின் ஜியாத் அவர்கள் உணர்ச்சி பொங்க உரை நிகழ்த்தி முடித்தவுடன் அதனால் உரமேற்றபட்ட வீரர்களின் உள்ளத்திலிருந்து “அல்லாஹு அக்பர்” “அல்லாஹு அக்பர்” “அல்லாஹு அக்பர்” என்ற உயிரின் உயிரான முழக்கம் விண்ணையும் மண்ணையும் அதிரச் செய்தது.


இவரைபோன்ற இஸ்லாமிய போர் தளபதிகளின் வரலாறுகளை நமது பிள்ளைகளுக்கு சொல்லி அவர்களை அறிவுஜீவிகளாக வளர்த்து இஸ்லாமிய உண்மையான வரலாறுகளை அழியாமல் காப்போம். இன்ஷாஅல்லாஹ்...!

No comments:

Post a Comment