Sunday, May 3, 2015

சீன தேசமும் ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) அவர்களும்.

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

      பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் ஏராளமானோர் இருந்தாலும் அவர்களில் ஒரு சிலரின் தனித்துவமிக்க தியாகமும் அர்ப்பணிப்பும் துணிச்சலான செயல்களும் அவர்களின் பெயர்களை வரலாற்று ஏடுகளில் உயர்த்திப் பிடிக்க காரணமாக இருத்தது. குறிப்பாக உலகம் முழுவதும் இஸ்லாமிய மார்க்கத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேட்கையில் ஆபத்தான பல பயணங்கள் மேற்கொண்டவரின் இவர் முக்கியதுவம் வாய்த்தவர்.

      அபிசினியா நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்த மக்களில் இடம்பெற்ற இவர் அங்கு சிறுது காலம் வாழ்ந்தார். இவரோ இளம் சஹாபி இவரால் அங்கேயே இருக்க முடியவில்லை இஸ்லாம் மார்க்கத்தை இன்னும் பல தேசங்களுக்கு கொண்டு செல்லவேண்டும் என்று ஆர்வத்தில் தனது தந்தையின் வியாபார நாடுகளான சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளை தேர்வுசெய்து அபிசினியாவிலிருந்து புறப்பட்டார்.

     பாய்மரப் படகு செங்கடலில் இருந்து புறப்பட்டு இந்தியப் பெருங்கடலின் வழியாக தமிழகத்திற்க்கும் இலங்கைக்கும் இடையே புகுந்து வங்கக்கடல் வழியாக கல்கத்தா அருகில் உள்ள உலகப் புகழ்பெற்ற சிட்டாகாங் துறைமுகத்தை அடைந்து நங்கூரம் பாய்ச்சி நிறுத்திய சஹாபிதான் ஹஜ்ரத் ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) அவர்கள். 

       சிறுது காலம் சிட்டாகாங் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தை எத்திவைத்து பிறகு சற்று மேலே உள்ள இடங்களான மணிப்பூர், மேகாலய, அஸ்ஸாம் அதன் தொடர்ச்சியாக சீனா சென்றடைத்தார்கள். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஹஜ்ரத் ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) மக்காவில் பெருமானாரை விட்டுப் பிரிந்து அபிசினியாவிற்கு சென்ற ஆண்டு கி.பி 615 அதாவது அல்-குரான் வசனங்கள் இறங்கத் துவங்கி 5 ஆண்டுகள் கூட முழுமை பெறவில்லை. 

       கி.பி. 616--618 க்கும் இடைப்பட்ட காலத்தில் சீனா சென்று சீன மக்களிடையே பெருகியிருந்த மூட நம்பிக்கைகளையும் தவறான உணவுப் பழக்க வழக்கங்களையும் தவறு என விளக்கிக் கூறி பெருமானாரைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தை சீன மக்களிடையே விதைத்தார்கள். கி.பி 623 ஆம் ஆண்டு அரபு வணிகர்கள் மூலம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு போய்விட்டதாக செய்தி வருகிறது. உடனடியாக ஸஅத் (ரலி) சீனாவிலிருந்து மதீனா திரும்பிவிட்டார்கள்.

      மதினா திரும்பிய ஸஅத் (ரலி) பத்ரு, உஹது போன்ற போர்களில் கலந்து தன்னுடைய வாழ்வை மதீனாவிலேயே தொடர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களில் மறைவுக்குப்பிறகு தொடர்ந்து அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களில் ஆட்சியில் இஸ்லாமிய இராணுவத்தில் பணியாற்றினார். 

       கி.பி. 650 இல் உதுமான் (ரலி) அவர்களின் இஸ்லாமிய அரசின்போது உலகில் மிகப்பெரும் பேரரசுகளின் ஒன்றான சீனாவிற்கு ஸஅத் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசின் தூதராக அனுப்பப்பட்டார்கள். ஏற்கனவே சீனாவிற்கு வந்திருந்த அனுபவமும் சீனா மக்களின் பழக்க வழக்கங்களையும் நன்றாக அறிந்துருந்த ஸஅத் (ரலி) அவர்கள் இப்போது இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ தூதராக கி.பி. 650 இல் மீண்டும் சீனா வந்தார்கள். 

       இந்த முறை முழு குரானுடன் வந்த ஸஅத் (ரலி) அவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் அதன் பிறகு அரபு வணிகர்களின் அழைப்புப் பனியின் காரணமாக சீனாவின் பல பாகங்களிலும் ஆழமாக வேருர்று இருந்ததை கண்டார்கள். சீனாவில் வாழ்ந்த முஸ்லிம்களை ஒருங்கிணைத்து இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பை உருவாக்கிடும் விதமாக டாங் பேரரசின் மன்னர் குவாசானகிடம் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கான அனுமதி கேட்டு “கேன்டன்” நகரில் அன்றைக்கு கட்டப்பட்ட பள்ளிவாசல் தான் இன்றைக்கும் அந்நகரில் “ஹஜ்ரத் ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) மெமோரியல் மஸ்ஜித்” என்றும் “Huaisheng Mosque” என்றும் அழைகப்படுகிறது.

      சீனர்களுக்கு அரபி பெயர்களை உச்சரிக்க கடினமாக இருந்ததால் “ஹசன்” என்ற பெயரை “ஹாய்” என்றும் “ஹுசைன்” என்பதை “ஹுய்” என்றும் சுருக்கி அழைத்தனர். இதே போல இப்பள்ளியையும் சுருக்கி  Huaisheng Si என்று அழைக்கின்றனர்.  

நம் குழந்தைகளும், நாமும் கண்டிப்பாக தெரிந்து வைத்து இருக்கவேண்டிய வரலாறு.

No comments:

Post a Comment