அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
30,000 மேற்பட்ட இஸ்லாமியர்கள் வாழும் நமது லால்பேட்டையில் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் 14,000 த்திற்க்கும் மேற்பட்டவர்கள், ஆனால் அரசு படிவேட்டில் 9,592 நபர்கள் மட்டும் தான் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் என பதிவாகியுள்ளது. கடந்த 19/10/2011 அன்று நடந்த நமதூர் பேரூராட்சி மன்ற தேர்தலில் வாக்களித்த மக்கள் வெறும் 6229, அதாவது மொத்த மக்கள் தொகையில் 20.7%, வாக்களிக்க தகுதியுள்ளவர்களில் 44.5%, அரசு படிவேட்டிலில் உள்ளவர்களில் 64.9%.
இந்த தேர்தலின் முடிவு கடந்த 21/10/11 அன்று வெளியானது, இதில் 2,200 வாக்குகள் பெற்று (ADMK)அ.தி.மு.க வின் சபியுல்லா வெற்றி பெற்றார், இரண்டாம் இடம் (M.M.K)ம.ம.க வின் யாசர் அரஃபாத், மூண்றாம் இடம் முருகேசன்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது நான்கு விஷயங்களை, ஒன்று வெற்றி பெற்ற வேட்பாளர் வாங்கிய ஓட்டு 2,200 அதாவது மொத்த மக்கள் தொகையில் 7.3%, வாக்களிக்க தகுதியுள்ளவர்களில் 15.7%, வாக்களித்தவர்களில் வெறும் 22.9% தான். வெறும் 22.9% ஓட்டுக்கள் மட்டும் பெற்று வெற்றி பெற்ற ஒருவர் 30,000 மக்களுக்கு தலைவர், அதாவது 77.1% மக்களுக்கு பிடிக்காதவர் (அல்லது)
77.1% மக்கள் இவருக்கு ஆதரவு தரவில்லை. இரண்டாவது 30,000 மேற்பட்ட முஸ்லிம்கள் வாழும் நமது ஊரில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களில் 3ஆம் இடத்தை பிடித்தது இந்து மத சகோதரர், மூண்றாவது காலம் காலமாக ஒற்றுமையுடன் நம் மக்கள் பள்ளிவாசல் மூலமாகவும், ஜமாத் மூலமாக தேர்ந்தெடுத்த மக்களாட்சி சென்று ஆளும் அரசாட்சி வந்துவிட்டது, நான்காவது 15வார்டுகள் கொண்ட நமது லால்பேட்டையில் 4வார்டுகளை இந்து மதத்தை சார்ந்தவர்கள் கைப்பற்றிவிட்டார்க்கள்.
இதற்கு காரணம் என்ன என்று நாம் சிந்தனை செய்து பார்த்தோமா!!! ஒற்றுமை இல்லாமையும், தெருவுக்கு ஒரு வேட்பாளர் என களத்தில் இறங்கியதுதான் காரணமாக இருக்கமுடியும். இஸ்லாம் மார்க்கத்தில் பிறந்த நாம் சிறு, சிறு விஷயங்களுக்கொல்லாம் மோதி இப்போது எந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டோம் என்று தயவு செய்து சிந்தியுங்கள். இனிவரும் காலங்களிளாவது சிந்தித்து செயல்படுவோம்.... இன்ஷா அல்லாஹ்....
www.imdtime.org