Saturday, October 15, 2016

சமுதாயத்தின் பெண்

          சமுதாயம் என்பது ஆணையும், பெண்ணையும் கொண்டது இதில் சரி பாதி பெண் மற்றொரு சரிபாதியான ஆணை பெற்றெடுப்பதும் பெண்தான். எனவே பெண்ணே சமுதயனாகும். -இப்னு தைமிய்யா

         ஒரு ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டும் தான் பயன் தரும். அனால் ஒரு பெண் கல்வி கற்றால் அது முழு சமுதாயத்தையே மாற்ற உதவும் என்பது அறிஞர்களின் வாக்கு....

Saturday, October 1, 2016

நாம்தான் இதற்கு காரணம்

   இஸ்லாமிய அறிவை உயிர்ப்போடு எப்போதெல்லாம் முஸ்லிம் சமுதாய மக்களும், தலைவர்களும், கொண்டிருந்தனரோ அப்போதெல்லாம் உலகின் உயரிய சமூகமாக இறைவன் முஸ்லிம்களை ஆக்கினான். இஸ்லாமிய அறிவில் குறைவு ஏற்பட்டால் வீழ்ச்சி நிச்சயம் என்பதை வரலாற்று சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.


       மாவீரன் சுல்தான் சலாவுதீன் அய்யூபி, சுலைமான் அல் கானூனி, ஹஜ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் போன்ற ஒரு சில உயிப்புள்ள கலிபாக்கள், சுல்தான்கள், அரசர்கள் தங்களுக்குப் பிறகு தங்களை போன்ற திறனுடைய அடுத்த தலைவர்களை உருவாக்காமல் சென்றதுதான் உலகின் பல பாகங்களில் ஆட்சி செய்த முஸ்லிம்களின் அரசுகள் சரிந்து வீழ்ந்ததற்கான மிக முக்கிய காரணம் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொண்டு நமது இலட்சிய பயணத்தை தொடருவோமாக.. நமது வெற்றிக்கு அல்லாஹ்விடம் அதிகமாக துஆ செய்வோமாக.! ஆமீன்.!

Thursday, September 15, 2016

கல்வி மற்றும் மருத்துவம்...

இந்த பூமியில் பயனுள்ள ஒரு மனித சமுதாயத்தை முறைப்படி உருவாக்கிடும் ஆற்றல் இறைக்கல்வி மற்றும் மருத்துவத்திற்கு இருக்கிறது. கல்வியும், மருத்துவமும் இறைவனின் அருள் பெற்ற துறைகள். முஸ்லிம்களின் ஆட்சியில் இந்த இரண்டும் அரசாங்கத்தால் இலவசமாக உயர்த்ரத்துடன் வழங்கப்பட்டது.


ஆனால் இன்றைய மேற்கத்திய யூத, நசராநிகளின் சிந்தனை கொண்ட ஆட்சியில் இந்த இரண்டு துறைகளும் உலகம் முழுவதும் உள்ள பெரும் பணக்காரர்களின் தொழில் நுட்ப உதவியுடன் பொதுமக்களை சுரண்டிக், கொள்ளையடிக்கும் துறைகளாக மாறிவிட்டன. இந்தியாவில் மருத்துவ செலவு செய்தே வறுமைக்கோட்டிற்கும் கிழே சென்றவர்கள் அதிகமாம்.!

Thursday, September 1, 2016

இறைவன் படைத்த இயற்கையை பாதுகாப்போம்

         அல்லாஹ்வையும் அல்லாஹ் படைத்த இயற்கையும் மனிதன் மறந்தான். அதனால் பெரும் துன்பங்களுக்கு மனித சமுதயாம் ஆளாகிக் கொண்டு இருக்கிறது.

   மரங்கள் அல்லாஹ் படைத்த இயற்கையின் அருட்கொடைகள், மரம் வளர்ப்பவர்களுக்கு உடனடி நன்மைகள் இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் சிறந்த பலன்கள் அவர்கள் அடையலாம். இந்த சமுதாயத்துக்கு நிரந்தர நன்மைகளையும் கிடைக்கும்படி செய்யலாம். மனிதன் தான் வளர்ந்த மரங்களின் மூலம் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றதா என கற்பனை செய்து கூட பார்க்க முடியாத விதத்தில் அல்லாஹ் மரம் வளர்ப்பின் மூலம் நன்மைகள் கிடைக்க செய்கின்றான்.

நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும். அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது; மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான். (அல்-குர்ஆன் 14:24,25)

“மரங்கள் அல்லாஹ் படைந்த இயற்கையின் வரங்கள்”
“மனித நேயம் மலர மண் வளம் காக்க மரங்களை வளருங்கள்”

. அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது; அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன. (அல்-குர்ஆன் 16:10)

“தண்ணிர் சிக்கனம் தன்னலமற்ற சேவையாகும்”
“மழைநீர் சேமிப்பு மனிதர்களுக்கு பாதுகாப்பாகும்”
“எனவே மரம் வளர்ப்போம்-உயிரினங்களைப் பாதுகாப்போம்”

     நமது வீடுகளிலும், தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும், மானாவாரி நிலத்திலும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மரம் வளர்ப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவோம். இயற்கயை பாதுகாப்போம், இனிய சுகத்தை அனுபவிப்போம்! இன்ஷா அல்லாஹ்….

Tuesday, August 16, 2016

நீங்கள் சமூக ஆர்வளர்களா?

        நமது இஸ்லாமிய சமூதாயத்திற்க்காக தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்பனம் செய்பவர்களும் நம்மில் உண்டு,சமூதாயத்தை பற்றி கவலை படாமல் சுயநலமாக வாழ்பவர்களும் நம்மில் உண்டு. நாம் நமது பங்கிற்க்கு ஒரு முஸ்லிமாக நமது இஸ்லாமிய சமூதாயத்திற்க்கு என்ன செய்தோம் என்று சற்று சிந்தனை செய்து பார்ப்போம்….! வாழ்க்கை முழுவதையும் கொடுதோமா? அல்லது சுயநலமாக வாழ்கிறோமா? நம்மில் சிலர் ஏதோ ஒரு விதத்தில் சமூதாயத்திற்க்கு சேவை செய்கிறோம்.

        “எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.”(13:11)

“அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.”(39:9)

     சமூக சேவைகளில் ஒரு சிறந்த சேவையாக உள்ளது கல்வி, ஆம்! நிச்சயமாக கல்வி கற்று கொடுப்பது சிறந்த சேவைதான், அதுவும் குர்ஆன் ஓத கற்று கொடுப்பது என்பது மிகவும் உயர்ந்த சேவையாக உள்ளது.

    முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஊர்களை சுற்றி 5 முதல் 10 குடும்பங்கள் என பல கிராமங்களில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்று நாம் அறிந்த செய்திதான். அவர்களின் இஸ்லாமிய கல்விக்காக நாம் என்ன முயற்சி செய்தோம் என்பதுதான் இங்கு நமக்கு நாமே வைக்கும் கேள்வியாக உள்ளது. நமக்கு நாமே வைக்கும் வேண்டுகோள் என்னவெனில் நமது ஊர்களை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள முஸ்லிம் பிள்ளைகளுக்கு மக்தப், குர்ஆன் ஓத மற்றும் இஸ்லாத்தின் அடிப்படையை (இஸ்லாமிய கல்வியை) கற்றுகொடுக்க வேண்டும். 

        இதற்கு இஸ்லாமிய சிந்தனை, நல்ல கல்வியறிவு பெற்றவர்களின் தேவை அதிகமாக உள்ளது. ஒவ்வோருவரும் நமது ஊர்களை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள முஸ்லிம் பிள்ளைகளுக்கு வாரம் ஒருமுறை சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் அங்கு சென்று அவர்களுக்கு இஸ்லாமிய கல்வி கற்று கொடுப்போம். இன்ஷா அல்லாஹ்….,

Monday, August 1, 2016

அமல்களில் மூன்றைத் தவிர

     ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:
1. சதக்கத்துல் ஜாரியா
2. பலன் தரும் கல்வி
3. பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள்.                  -அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்

       ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.

    இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

     மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்

Saturday, July 16, 2016

திருக்குர்ஆன் தமிழ் விரிவுரைகள்

       திருக்குர்ஆன், நபிமொழி, இஸ்லாமியச் சட்டம் ஆகிய மூலாதார நூல்கள் அரபியிலிருந்து உர்து, ஆங்கிலம், பாரசீகம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாக மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு முன்புதான் திருக்குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.

    அதையடுத்து திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழி, சட்ட நூல், வரலாறு ஆகிய மூலாதார நூல்கள் படிப்படியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன. இன்னும் நிறைய வெளிவர வேண்டியிருக்கிறது.

திருக்குர்ஆன் தமிழ் விரிவுரைகள்:
  திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்புடன், வசனங்களுக்கான நீண்ட விளக்கவுரைகள் (தஃப்சீர்) அரபி மொழியில் ஏராளமாக உள்ளன. அவற்றில் தஃப்சீர் தபரீ, தஃப்சீர் குர்துபீ, தஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் கபீர், தஃப்சீர் பஹ்ருல் முஹீத், தஃப்சீர் அல்ஜவாஹிர், தஃப்சீர் அல்மனார் ஆகியவை குறிப்பிடத் தக்கவை ஆகும். அரபியல்லாத பிற மொழிகளிலும் விரிவுரைகள் வெளிவந்துள்ளன.

   தமிழில் திருக்குர்ஆன் விரிவுரைகள் சமீப காலத்தில் தான் வெளிவந்தன. உத்தமபாளையம் மௌலானா, எஸ்.எஸ். அப்துல் காதிர் பாகவி அவர்கள் ‘தப்ஸீருல் ஹமீத் ஃபீ தஃப்சீரில் குர்ஆனில் மஜீத்’ எனும் பெயரில் தமிழில் திருக்குர்ஆன் விரிவுரை ஒன்றை எழுதி வெளியிட்டார்கள். ‘ரூஹுல் பயான்’ எனும் அரபி விரிவுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த விரிவுரை 1937ஆம் ஆண்டு தொடங்கி, 1961வரை 7 பாகங்களில் வெளிவந்தது.
அன்வாருல் குர்ஆன்கூத்தாநல்லூர் ஆதம் டிரஸ்ட் நிறுவனத்தார் 1955ஆம் ஆண்டு முதல் ‘அன்வாருல் குர்ஆன்’ எனும் தமிழ் விரிவுரையை வெளியிட்டார்கள். தென்காசி மௌலானா, இ.எம். அப்துர் ரஹ்மான் ஃபாஸில் பாகவி அவர்கள் எழுதிய இந்த விரிவுரை, குர்ஆனின் 30 பாகங்களுக்கும் தொடர்ந்து பல ஆண்டுகளில் வெளிவந்து நிறைவடைந்தது.

தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆன்
    வேலூர் ஜாமிஆ அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி 1992ஆம் ஆண்டு முதல் ‘தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆன்’ எனும் பெயரில் திருக்குர்ஆன் விளக்கவுரை ஒன்றை தமிழில் வெளியிட்டுவருகிறது. பாக்கியாத் பேராசிரியர்களைக் கொண்ட குழுவினர் இந்த விரிவுரையை உருவாக்குவதில் ஈடுபட்டுவருகின்றனர். கைக்கு அடக்கமான வடிவில் இதுவரை 5 தொகுதிகள் வெளி வந்துள்ளன. கல்லூரி நிர்வாகம் இந்த விளக்கவுரையை முழுமையாக வெளியிடுவதில் தீவிர அக்கறை காட்டிவருகிறது.

தஃப்சீர் இப்னு கஸீர்
    சிரியா நாட்டைச் சேர்ந்த இமாம் இஸ்மாயீல் பின் உமர் பின் கஸீர் (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 700-774; கி.பி. 1300-1372) அரபி மொழியில் எழுதிய முதல் தரமான திருக்குர்ஆன் விரிவுரையே ‘தஃப்சீர் இப்னு கஸீர்’ என அறியப்படுகிறது. நான்கு பாகங்களில் வெளிவந்த இந்த விரிவுரையை பேராசிரியர் முஹம்மத் அலீ அஸ்ஸாபூனி அவர்கள் மூன்று பாகங்களில் சுருக்கித் தந்துள்ளார்.

      இந்தச் சுருக்கப் பதிப்பைத் தமிழில் கொண்டு வரும் பெரு முயற்சியில் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. மொத்தம் எட்டு பாகங்களில் வெளியிடத் திட்டமிட்டு, முதலாவது பாகம் 2003ஆம் ஆண்டு வெளிவந்தது. இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன.

      வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் பல்லாண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றிய மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி தலைமையில் மார்க்க அறிஞர்கள் குழு ஒன்று இத்திருப்பணியை மேற்கொண்டுள்ளது.

   இந்த தகவல்கள் சென்னை ரஹ்மத் அறகட்டளையில் பணிபுரியும் முஹம்மது கான் பாகவி அவர்களின் கட்டுரையுள் இருந்து எடுத்தது. இன்னும் குர்ஆன் விளக்கவுரை முழுவதும் தமிழில் வரவில்லை என்பது வருத்தமான செய்திதான்.

Friday, July 1, 2016

சமூகத்தை உயர்த்த அறிவாற்றலுடன் களமிறங்குவோம்!

    உலக வரலாற்றில் பல்வேறு காலங்களில் வாழ்ந்த மக்களின் சமூக வாழ்க்கை பலவிதமான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தே வந்துள்ளது. பலநூறு ஆண்டுகளாக தங்களுக்குள் மோதிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டிருந்த ஐரோப்பியர்கள் ஒரு கட்டத்தில் விழித்துக் கொண்டு தங்கள் போக்கை மாற்றிக் கொண்டனர்.

   அதே போல வரலாறு முழுவதும் வேட்டையாடப்பட்ட யூதர்கள் ஒரு கட்டத்தில் முஸ்லிம்களின் நிலத்தை அபகரித்து தங்களுக்காக ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டனர். அதே போல மதத்தின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டு மிருகங்களைக் காட்டிலும் கேவலமாக நடத்தப்பட்ட தலித் சமூகம் அம்பேத்கர், தந்தைபெரியார் போன்றோர் வழிகாட்டபட்டதின் விளைவாக இந்தியா விடுதலை பெற்று 63 ஆண்டுகளுக்குள் அவர்கள் இந்திய அரசுத் துறையின் அனைத்துப் பொறுப்புகளிலும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

  ஆனால் வரலாறு முழுவதும் வாழ்வாங்கு வாழ்ந்த நமது முஸ்லிம் சமூதாயம் 1857 க்குப் பிறகான பிரிட்டிஷ் ஆட்சியிலும் பிறகு 1947 க்குப் பிறகான குடியரசு இந்தியாவிலும் புரந்தள்ளபட்ட மக்களாக மாறிப் போய் விட்டனர். தலித் சமூகத்தைக் காட்டிலும் கீழான நிலையில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்று நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தனது ஆய்வரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    முஸ்லிம்களின் இந்த சமூக பின்னடைவை மாற்றுவதற்கு அரசு எந்தவித நிலையான திட்டத்தையும் வகுக்காத நிலையில் முஸ்லிம்களின் வாழ்வை மேம்படுத்திட அவர்களாகவே தங்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அதற்கு முஸ்லிம் சமூகத்தில் உள்ள கல்வியாளர்களும் அறிவார்ந்த மக்களும் முஸ்லிம்களுக்கு முறையான திட்டத்தின் அடிப்படையில் வழிகாட்ட வேண்டும்.

    வாழ்வின் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவதற்குத் தேவையான வழிகாட்டுதலை இஸ்லாமிய அடிப்படையில் மக்களிடம் எடுத்துச் செல்லும் போது அவற்றை முறையாகப் பின்பற்றும் மக்கள் மட்டுமே வரலாற்றில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழக முஸ்லிம் சமூதாயம் அடுத்த 20 ஆண்டுகளில் தங்களது கல்வியிலும், பொருளாதார முறைகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று அதிகமாக துஆ செய்யுங்கள் என்றும்,அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Friday, June 17, 2016

சகோதரர் அஹமது தீதாத் (1918-1942)

            “அஹமது ஹுசைன் தீதாத்” அவர்கள் ஜுலை 1, 1918 நில் குஜராத் (இந்தியா) தில் பிறந்து பிறகு தென் ஆப்பிக்காவில் தனது பெற்றோர்களுடன் வசித்தார். 1936-ம் ஆண்டு பர்னிச்சர் சேல்ஸ்மேன் ஆகா தனது வாழ்க்கைப் பயனத்தை துவங்கினார். அக்கால கட்டத்தில் நசாராக்களால் இஸ்லாம் வாலால்பரப்பபட்டது என்ற சில சர்ச்சைகள் வெளிவந்தன இந்த சர்ச்சைகளை கண்டு மனம் துவலாமல் நசாராக்களின் வேதங்களை ஆய்வு செய்ய துவங்கினார். இதன்மூலம் இவர் இஸ்லாத்தின் தாவா பணிகளுக்குள் தம்மை அற்பணித்துக்கொண்டார்!

சகோதரர் அஹமது தீதாத் அவர்களது தாவாபணி 1942 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் என்ற இடத்தில் துவங்கிய போது வெறும் 15 நபர்களே கலந்துக் கொண்டார்களாம். தனது முதல் கூட்டத்தில் வெறும் 15 பேர்களுக்கு சொற்பொழிவாற்றுகிறோம் என்று இவர் கவலைப்படவில்லை. சில காலங்களுக்குப் பின்னர் இவரது சொற்பொழிவுகள் தென்ஆப்ரிக்காவில் உள்ள ஜோஹனஸ்பர்க், கேப்-டவுன் நகரங்களில் அரங்கேரியது அப்போது மக்கள் கூட்டம் ஆயிரத்தை தாண்டியது (அல்ஹம்துலில்லாஹ்).  இவர் துண்டுப்பிரச்சுரம், ஜும்ஆ பேருரை போன்ற சொற்பொழிவுகளால் இஸ்லாத்திற்கும், கிருஸ்தவத்திற்கும் இடையே ஒறு இணைப்பு பாலத்தை அதாவது சகோதரத்துவத்தை வளர்த்தார்.

இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர்  1956-1986:
இவரது பேச்சாற்றலையும், தாவா சொற்பொழிவுகளையும் கேட்ட மக்கள் கூட்டத்தையும் அவர்களது ஆவலையும், இஸ்லாத்தைப்பற்றிய கேள்விகளையும் கருத்தில்கொண்டு “இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர்” என்ற அமைப்பை 1956ஆம் ஆண்டு இவர் துவங்கினார்! இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள் இஸ்லாமிய புத்தகங்களை பிரசுரிப்பது, புதிதாக இஸ்லாத்ததை ஏற்றவர்களுக்கு இஸ்லாமிய வகுப்புகள் நடத்துவது போன்றவைகளேயாகும்! 1958ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களால் அஸ்-ஸலாம் எஜிகேஷனல் இன்ஸ்டியுட்” என்ற அமைப்பு பெரேமர் என்ற பகுதியில் சுமார் 75 ஏக்கர் நிலத்தில் உருவானது.

இந்த அமைப்பு இவருக்கு 30 வருடங்கள் மிகவும் பக்கபலமாக அமைந்தது. இவர் “பிப்லிகள் தியோலஜி” பற்றி ஆராய்ந்து அதிக இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்தார். மேலும் மக்களை இஸ்லாத்தின்பால் அழைப்புவிடுத்தார். இந்த செயல் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.  பிறகு இவர் தனது கைப்பட பல இஸ்லாமிய நூல்களை இயற்றினார், இஸ்லாமிய பிட்நோட்டீஸ்கள், பேம்ப்லட் போன்றவற்றை இலவசமாக அனைத்து மக்களுக்கும் வினியோகிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டார்!  இது மட்டுமல்லாமல் பைபிள் பற்றி இஸ்லாமிய வகுப்புகளையும் நடத்தினார்!  இதன்மூலம் இவருக்கு இஸ்லாம், கிருஸ்தவம் மற்றும் ஜுதயிஷ மக்கள் கூட்டம் பெருகியது!

1980 ஆம் ஆண்டிற்குப்பிறகு சகோதரர் தீதாத் தென் ஆப்ரிக்காவிற்கு வெளியேயும் தாவா பணிகளை துவங்க எண்ணினார். 1985-ஆம் ஆண்டு இலண்டன் நகரில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹால்என்ற அரங்கில் 2 இஸ்லாமிய சொற்பொழிவு பிரச்சாரம் நிகழ்த்தினார். 1986-ஆம் ஆண்டு இவருக்கு இஸ்லாத்தை அழகிய முறையில் பரப்பியதற்கு கிங் பைஷல் அவார்டுகிடைத்தது!. இந்த அவார்டு இவருக்கு சர்வதேச அளவில் நற்பெயரை தேடித்தந்தது!

இவர் தனது 66-ஆம் வயதிலிருந்து புதுப்பொழிவுடன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கோண்டு மீண்டும் ஒரு 10 ஆண்டுகள் அயராது தனது இஸ்லாமிய தாவா பணிகளை நசாராக்களிடம் மேற்கொண்டார்! இவர் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தனது பயணத்தை தொடர்ந்தார்!

இஸ்லாமிய தாவா பணிக்காக இவர் சவுதி ஆரேபியா, எகிப்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மாலத்தீவுகள், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், டென்மார்க், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பயணித்தார்.

மே மாதம் 1996 ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களுக்கு வலது கையின் ஏற்பட்டது. இதனால் சகோதரர் பேச முடியாமலும் எதையும் விழுங்கக்கூட முடியாமலும் அவதிப்பட்டார்!  இவருக்கு ஏற்பட்ட இந்த நிலையைக்கண்டு உடனடியாக இவரை ரியாத் நகரில் உள்ள கிங் பைஷல் ஸ்பெஷலிஸ்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.  இவரது இந்த நிலைமை 9 ஆண்டுகள் நீடித்தது. இக்காலகட்டத்தில் இவர் தென் ஆப்ரிக்காவில் தனது வீட்டில் படுக்கையாகவே தனது கடினமான இறுதி 9 ஆண்டுகளை கழித்தார்.

இவர் இந்த இக்கட்டான நிலையில் தனது மனைவியின் கவனிப்பில் இருந்துவந்தார். அன்னார் அவர்கள் ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு தனது இல்லத்திலேயே இயற்கை எய்தினார்! (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்).  இவரது மண்ணரை தற்போது வெர்குளம் என்ற தென்ஆப்ரிக்க நகரில் உள்ளது!

சகோதரர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் மார்க்கத்தை ஒழுங்குபடுத்தி அதை நசாராக்கள் முன் நிறுத்தி தாவா பணிகளை மேற்கொண்ட இந்த சகோதரர் உண்மையில் நமக்காக பாடுபட்டுச்சென்றார்! இவரது பாணியில் நாமும் நமது வாழ்க்கைப்பயணத்தை துவக்குவோம்! பிரிந்துகிடக்கும் நம் ஜமாஆத் மக்களிடம் இணைப்பை ஏற்படுத்துவோம் மரணம் வரை முஸ்லிம் என்று சொல்வோம். இன்ஷாஅல்லாஹ்.!!

Wednesday, June 1, 2016

தேடுவோம் அந்த நாளை.!

நபர் 1: உனக்கு விசயம் தெரியுமா? ஒரு நாளில் 83 வருடம் செய்யும் நன்மைக்கு சமமான நன்மை கிடைக்குமாம்?
நபர் 2: என்ன ஆச்சரியம் நாம் 83 வருடம் வாழ்வதே அறிதாக உள்ளது. ஒரு நாளில் செய்யும் நன்மை 83 வருடம் 4 மாதம் செய்த கூலி (நன்மை)க்கு சமமாக கிடைக்குதா….. என்ன ஆச்சரியம் சரி அந்த நாள் எப்பவரும், சிக்கிரம் செல்லு..?

நபர் 1: சொல்லுறேன்.! அது நமக்கு மிகவும் அருகில் உள்ளது..!
நபர் 2: சரி சொல்லுங்க,எந்த நாள் அது? யார் அவ்வளவு கூலி (நன்மை)தரேன்னு சென்னா…!

நபர் 1: இது மனிதன் சொன்ன வாக்கு இல்ல மாறி பொசுறதுக்கு, மாறாக நம்மை படைத்த ஏக இறைவனான அல்லாஹ் தன்னுடைய குர்ஆனில் கூறியுள்ளான்….
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். [ஸூரத்துல் கத்ரி 97:1-5].
நபர் 2: அட ஆம்மா அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்ததா…! நாம் வாழ்நாள் முழுவதும் செய்தாள் கூட இவ்வளவு சிறந்த இரவுடைய நன்மையை அடைய முடியாது பொலருக்கே….! அந்த நாள் எப்பங்க வரும் சிக்கிரம் சொல்லுங்க எனக்கு தலையே வெடிச்சிடம் போலருக்கு அந்த நாளை நலுவவிட கூடாது.
நபர் 1: அந்த நாளா சொல்லுற கேழுங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ……..எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் (ரமளானின்) கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்!…… இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி தமிழாக்கம் 2016)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்! இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி தமிழாக்கம் 2017)

நபர் 2: சரி நல்ல விசயம் சொன்ன… இன்ஷாஅல்லாஹ் நான் இந்த ஐந்து இரவுகளிலும் லைலத்துல் கத்ரைத் தேடுறேன், அதிகமாக அல்லாஹ்வை வனங்குகிறேன், திக்ர் செய்ற, அதிகமாக குர் ஆனை ஒதுறேன்.. சரி பிறகு சந்திப்போம். அல்லாஹ் உனக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றியை கொடுப்பானாக!

Monday, May 16, 2016

பத்ர் போர் (Battle of Badr)

         பத்ர் போர் என்றதும் நம்மில் பலருக்கு நினைவில் வருவது ரமலான் 17லும், குறைந்த படையைகொண்டு பெரும்படையை முஸ்லிம்கள் வென்றார்கள் என்பதும்தான். இதில் தவறேதும் இல்லை.

    ஆனால் அல்லாஹ் பத்ர் போரின் மூலம் இதற்கும் அதிகமான பல விஷயங்களை உலக மக்களுக்கு சொல்கிறான். குறைந்த அளவிலான படையை வைத்து பெரும்படையை வெற்றிக்கொள்ளும் பயிற்சியை முஹம்மது நபி (ஸல்) சஹாபாக்களுக்கு கற்றுகொடுக்கவில்லை. மாறாக அவர்களுக்கு இஸ்லாம் என்ற மார்க்கத்தை கற்று கொடுத்தார்கள்.

     பத்ர் போரில் 82 மக்காவாசிகளும் (முஹாஜிர்கள்) 231 மதினாவாசிகளும் (அன்சாரிகள்) இருந்தார்கள். முஹாஜிர்கள் தங்கள் ஊர் மற்றும் சொந்தங்களுக்கு எதிராக இஸ்லாத்திற்காக போர் புரிந்தார்கள். தங்களின் மேல் மட்டும் முழு நம்பிக்கை கொல்லாமல் அல்லாஹ் உதவி செய்வான் என்ற முழு மனதோடு போர்புரிந்தார்கள். அதுபோல் அல்லாஹ் உதவியுடன் வெற்றி கிடைத்தது.

பதர் வெற்றிக்கான காரணங்கள் சில....

1. தங்கள்மீதோ, ஆயுதங்கள்மீதோ நம்பிக்கை வைக்காமல் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தார்கள்.

2. இஸ்லாத்திற்காக சொந்த பந்தங்கள் என்று பார்க்காமல் போர் புரிந்தார்கள்.

3. தங்கள் உயிரையும் தீனுல் இஸ்லாத்திற்காக தியாகம் செய்ய முன்வந்தார்கள்.

4. அமீர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் (தலைமையின்) கட்டளைகளுக்கு கட்டுபட்டார்கள்.

5. சிறப்பான திட்டமிடுதல்.

6. போர் ஒழுக்கமுறைகளை சரியாக பின்பற்றினார்கள் பெண்கள், குழந்தைகள், பெரியோர்களை தாக்காமலும். மரங்கள், கட்டிடங்களை தகர்க்காமலும் போர் புரிந்தார்கள்

Sunday, May 1, 2016

ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள்.

5. குவாடிலட் போர்:
        ஸ்பெயினின் கொடுமையான ஆட்சி புரிந்த விசிகோத் மன்னனுக்கு எதிராக மொரோக்கோவில் அடிமை வம்சத்தில் பிறந்த பெர்பர் இனத்தை சேர்ந்த தாரிக் பின் ஜியாத் தலைமையில் ஸ்பெயின் மீது மிகவும் குறைந்த வீரர்களை கொண்டு பெரும்படையை வெற்றி கண்டு ஐரோப்பிய கண்டமே நடுங்கிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடந்தது ஹிஜ்ரி 92ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான். இவ்வெற்றிக்கு பிறகு சுமார் 800 ஆண்டுகள் ஸ்பெயினை (அண்டலூசியவை) முஸ்லிம்கள் ஆட்சிபுரிந்தார்கள்.

4. ஹைதீன் போர்:
        உலக யூத, கிறிஸ்தவர்கள் எல்லாம் திரும்பி பார்க்கவைத்த, நடுங்கவைத்த சுல்தான் சலாஹுதீன் அய்யுபி தனது பெரும் படையுடன் ஜெருசலம் நகரை (பைதுல் முகத்தஸ்) கைப்பற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிராக படையெடுத்து வெற்றிபெற்றதும் இப்புனிதமிகு ரமலான் (ஹிஜ்ரி 583) மாதத்தில்தான். இவ்வெற்றிக்கு பிறகு நமது முதல் கிப்லா இஸ்லாமியகளின் கையில் 700 ஆண்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு சலாஹுதீன் அய்யுபியை போன்ற ஒரு மாவீரனை இவ்வுலகிற்கு அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்...

3. அன்-ஜாலித் போர்:
      உலகத்தையே ஆளவேண்டும் என்ற வெறிகொண்ட எண்ணத்தோடு அப்பாஸிய கிலாபத்தையே அடித்து நொறுக்கிய மங்கோலிய படைகளை தடுத்து நிறுத்தி, அவர்களின் வெறித்தனத்தை அடக்கவேண்டும் என்று எகிப்து மம்லுக் சுல்தான் தலைமையில் அவர்களுக்கு எதிராக போர் செய்து முஸ்லிம்கள் வெற்றிகண்டதும் ஹிஜ்ரி 658 ரமலான் மாதத்தில்தான்.

2. மக்கா வெற்றி :
    குறைசிகளின் வசமிருந்த முஸ்லிம்களின் முதல் வணக்கஸ்தலமாகிய மஸ்ஜிதுல் ஹரம் ஷரீபை நமது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் மீட்கபட்டு அங்குள்ள சிலைகளை தகர்த்தெரிந்து உலக வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த இம்மாபெரும் நிகழ்வு நடந்தும் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான்.

1. பத்ர் போர் :
    இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அன்று அம்முன்நூறு சஹாபாக்கள் தங்களின் உயிரையும் அல்லாஹ் உடைய பாதையில் தியாகம் செய்வதற்கு முன்வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிகளை வீழ்த்தி இஸ்லாம் என்றும் நிலைத்திருக்க வித்திட்ட அப்போரும் இப்புனிதமிகு ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 17 இல்தான்.

இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Friday, April 15, 2016

பள்ளிவாசல்களில் சுதந்திர தினமா?

வரலாறு என்பது என்றும் மாறாது, அப்படி மாறினால் அது வரலாறாக இருக்க முடியாது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் கடந்த 65 வருடங்களாக பல வழிகளில் சோதனைக்கு ஆழக்கப்படுகிறோம்.

 இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான வேலைகளின் ஒன்றுதான் கல்வியிலும், இந்திய சுதந்திர வரலாறுகளிலும் காவியில் கையாடல். R.S.S யின் மேதாவிகள் கடந்த 50 வருடங்களாக முயற்ச்சி செய்து இந்திய சுதந்திரத்திற்கும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களுக்கு துளி கூட பங்கு இல்லாததது போல் வரலாறுகளை மாற்றி எழுதியுள்ளார்.

உண்மையில் இந்தியாவை செழிப்பாக ஆண்டவர்களும், இந்திய சுதந்திர போரில் அதிகமாக பங்கு பெற்றவர்களும் இந்திய முஸ்லிம்களே. பள்ளிகூட புத்தகங்களில் இந்திய முஸ்லிம்களை பற்றி தவறாக இருந்தாலும் இப்போது உள்ள முஸ்லிம்கள் தங்களுடைய கண்ணை திறந்து இந்திய முஸ்லிம்களின் தியாகம், வரலாறு என்று நிறைய தலைப்புகளில் தலைவர்களின் பேச்சாலும், வரலாற்று புத்தகங்களாலும் உண்மையான இந்திய சுதந்திர முஸ்லிம் வீரர்களின் வரலாறுகளை நாம் ஒரு அளவுக்கு தெரிந்து கொண்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்..!

உண்மையில் இந்திய சுதந்திர போரில் பள்ளிவாசல்களும், மதரஷாகளும் தான் மக்களுக்கு அதிகமாக சுதந்திர உணர்வை ஏற்ப்படுத்தியது. இதன் காரணாமாகவே முஸ்லிம்கள் இந்திய சுதந்திர போரில் அதிகமாக கலந்து கொண்டனர். நிச்சயமாக இந்திய சுதந்திர போரில் முஸ்லிம்கள் பங்கு பெறவில்லையெனில், இன்று வரை நம் இந்திய நாடு அந்நியர்களிடம் அடிமை பட்டுதான் இருக்கும் என்பதில் மாற்று கருந்துயில்லை.

சரி இந்திய விடுதலை பெற்று விட்டது. நமக்கு எதிராக காவிகள் செயலாற்றினாலும், இப்பொழுது ஒரு அளவுக்கு நாம் சுதந்திர வரலாறுகள் தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் இந்திய விடுதலைக்காக முழுக்கு முழுக்க களத்தில் இறங்கிய பள்ளிவாசல்களிலும், மதரஷாகளிலும் அதன் நிலை என்ன?

ஏன் நாம் இந்திய சுதந்திர தினத்தை பள்ளிவாசல்களிலும், மதரஷாகளிலும் நினைவு படுத்துவதில்லை? இந்திய சுதந்திர போருக்காக தனது உயிரையே கொடுக்க நமது முஸ்லிம் வீரர்கள் இங்கு இருந்துதானே புறப்பட்டார்கள்? பிறகு ஏன் நமக்கு அதில் தயக்கம்?

உண்மையில் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாட முழு தகுதி பெற்றவர்கள் நாம் மட்டும் தான் அதற்க்கான சரியான இடம் பள்ளிவாசல்களும், மதரஷாகளும் தான். நாம் நமது பள்ளிவாசல்களிலும், மதரஷகளிலும் இந்திய சுதந்திர தினத்தன்று சிறப்பு பயான் வைத்து அந்த நாளை ஒவ்வொரு வருடமும் நினைவு படுத்தினால் இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் RSS மட்டும் இல்லை இது போல இன்னும் 100 இயங்கங்கள் வந்தாலும் இந்திய முஸ்லிம்களின் வராலாறுகளை அழிக்கமுடியாது. 

  இன்ஷாஅல்லாஹ் அதற்க்கான முயற்சியில் மதராஷாகளின் பொருப்பாளிகளும், பள்ளிவாசல்களின் முத்தவல்லிகளும் முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இஸ்லாமிய இயக்கங்களும் தங்களுடைய தலைமை மற்றும் கிளை அலுவலகத்திலும் சுதந்திர தின சிறப்பு பயான் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி வைத்தால் வரும் தலைமுறைக்கு இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்கள் பங்கு பற்றி எப்போதும் நினைவில் இருக்கும். இன்ஷாஅல்லாஹ்..!

Friday, April 1, 2016

இப்னு பதூதா (Ibn Battuta)

         முஸ்லிம்களின் மார்கோ போலோ என்று அழைக்கப்படும் இவர் கி.பி 13௦4 ஆம் ஆண்டு மொரோக்கோ நாட்டில் பிறந்தவர். தன்னுடைய 21 ஆம் வயதில் ஹஜ்ஜிக்கு சென்றபோது ஏற்பட்ட அனுபவத்தால் உலகில் உள்ள முஸ்லிம்கள் வாழும் அனைத்து நாடுகளுக்கும் செல்லவேண்டும் என்று முடிவு செய்தார்.

                தன்னுடைய இந்த என்னத்தை நிறைவேற்ற தொடர்ந்து 29 ஆண்டுகள் தொடர் பிரயாணம் மேற்கொண்டு 44 நாடுகளுக்கு படகு, குதிரை, ஒட்டகம் மற்றும் கால்நடையாக பயணம் மேற்கொண்டார்.

                   தன்னுடைய பயணத்தின் முடிவாக 29 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய சொந்த நாடான மொரோக்கோவில் இறுதிகாலத்தை கழித்த போது தான் சென்ற நாடுகளின் வாழ்ந்த மக்கள், கலாச்சாரம் மற்றும் அந்த நாடுகளை பற்றிய குறிப்புகளை புத்தகங்களாக (The Rihla) பதிவு செய்தார். இந்த புத்தகம் பிற்காலத்தில் வாழ்த்த வணிகர்களுக்கும் பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

                    விமானம், இரயில், பிரமாண்டமான கப்பல் போன்ற எதுவும் இல்லாத அந்த 13ஆம் நூற்றாண்டில் இவர் பயணம் செய்த தூராம் எவ்வளவு தெரியுமா? சுமார் 1,17,000 கி.மி...! சற்று சிந்தனை செய்து பாருங்கள். இவருடைய நினைவாகத்தான் துபாயில் உள்ள ஒரு பிரமாண்டமான  மாலுக்கு இப்னு பதூதா மால் (Ibn Battuta Mall) என்று பெயர் வைத்துள்ளார்கள்.....
   
   நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற சாதனையாளர்களின் வரலாறுகள் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Tuesday, March 15, 2016

ஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல..

“இஸ்லாமியர்களின் வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல” என்று நல்ல மனிதர்கள் சொன்னாலும் கேர்க்கமாட்டோம்.

“நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;” (அல்-குர்ஆன் 3:103) என்று அல்லாஹ் சொன்னலும் கேர்க்க மாட்டோம்.

     ஒற்றுமையாலும், இஸ்லாமிய கலாச்சரத்தினாலும் (குர்ஆன், ஹதிஸ் முறைப்படி வாழ்ந்ததாலும்) முஸ்லிம்களுக்கு உலகில் பல இடங்களில் பல வெற்றிகளை அல்லாஹ் கொடுத்தான். ஸ்பெயின் நாட்டில் 700 வருட இஸ்லாமிய ஆட்சி, இந்தியாவில் 700 வருட முகலாய ஆட்சி, ஸ்பெயின் முதல் சினா வரை கி.பி. 700 முதல் கி.பி. 1500 வரை முஸ்லிம்களுக்கு விஞ்ஞான அறிவியல், அரசாட்சி என பல வெற்றிகளை முஸ்லிம்கள் ஒற்றுமை மற்றும் இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றியதால் கொடுத்த அல்லாஹ்….

     பிறகு அவர்களிடம் ஏற்ப்பட்ட ஒற்றுமையின்மை, சிறு சிறு குழுச்சன்டை, கலாச்சார மாற்றம் போன்ற காரனங்களால் அவர்களிடமிருந்து ஆட்சியை பிடிங்கி முஸ்லிம் அல்லாதவர்களிடம் கொடுத்தான். முஸ்லிம்களின் கலாச்சார மாற்றத்தால் நம்முடைய அறிவியல் கண்டுபிடிப்பு, ஆட்சி அதிகாரம், அறிவுத்திறன் போன்ற அனைத்தும் முஸ்லிம் அல்லாதவர்களின் கையில் சென்றதால் உலகில் பெரும் பகுதிகளில் முஸ்லிம்மாகிய நாம் கஷ்டப்படுகிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது…

     நமக்குள் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் அதை அல்லாஹ்வுக்காக மறந்து இஸ்லாம் சொல்லும் முறைப்படி வாழ்ந்து ஒற்றுமையுடன் இஸ்லாமிய காலாச்சாரத்தை காப்போம், வெற்றி பெறுவோம்..
இன்ஷா அல்லாஹ்…..

“வரலாறு தெரியாத சமுகம் வாழ்த்ததாக சரித்திரம் இல்லை”

Tuesday, March 1, 2016

புனிதப் போராளியின்...

   இன்றுடன் (28.01.2016) சமுதாயப்போராளி பழனிபாபா இறந்து 19 ஆண்டுகள் கடந்து விட்டது. அவரை பற்றி நான் படித்த வரிகளில் உங்களுக்காக சில.

அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டிய அல்ஹாஜ் பழனிபாபா அவர்களது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும். 

சொந்த ஊர்:  பழனியிலிருந்து  4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ள புது ஆயக்குடியில் பழனிபாபா  பெற்றொருக்கு  இரண்டாவது குழந்தையாக  14/11/1950ல் பிறந்தார்.

ஆரம்பக் கல்வி:  குன்னூரில் உள்ள செயின்ல் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் ஆரம்பக்கல்வியை தொடங்கினார். அடுத்து மேல்நிலைக்கல்வியை புது ஆயக்குடியில் உள்ள ஐ.டி.ஒ (I.D.O) மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.

 பட்டப்படிப்பு: பழனியில் உள்ள பழனி ஆண்டவர் கலைக் கல்லுரியில் ஆங்கில இலக்கியம் பட்டம் பயின்று முடித்தார். அதன் பிறகு டெல்லியில் 10 ஆண்டுகள் இருந்தப்போது முதுகலை மற்றும் முனைவர் (Phd.,) பட்டம் பெற்றார்.

 பொது வாழ்க்கை: நைனா முஹம்மது என்பவர் தலைமையில் புது ஆயக்குடியில் முஸ்லிம் லீக் சார்பில் நடந்த கூட்டம்தான் பழனிபாபாவின் முதல் பொதுக்கூட்டம் அதன் பின் ஆயிரக்கணக்கான மேடைகளில் அடைமழையென,  புயலென,  அழகான அற்புதமான  புள்ளிவிபரங்களுடன் பேசி இஸ்லாமிய சமுதாயத்தின் எழுச்சிக்கு வித்திட்டார். அவரது பேச்சுக்கள் இஸ்லாமிய இளைஞர்களின் தேசிய கீதமானது.  பாபா தனது வாழ்நாளில் பேசிய மொத்தக் கூட்டங்களின் எண்ணிக்கை 13201 ஆகும். இறுதியாக அவர் பேசிய கூட்டம் நாகை மாவட்டம் திட்டச்சேரியில்  07/12/1996  அன்று  நடைபெற்றப் பொதுக்கூட்டமாகும்.

முதன் முறையாக எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற சில காலங்களிலேயே சென்னைக் கோட்டைக்குள் நுழைய பழனிபாபாவிற்கு தடை என அரசானை வெளியானது. “யார் இந்த பழனிபாபா?” என்று தமிழக மக்கள் பார்க்கத் தொடங்கினர்.

 எம்.ஜி. இராமச்சந்திரன் அவரது ஆட்சிக் காலத்தில்,  ‘பழனிபாபா  பொது கூட்டங்களில் பேசக்கூடாது எனத் தடை உத்தரவு போட்டிருந்தார். இதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் எருமை மாடுகளை கட்டிவைத்து,  மைக் வைத்து புள்ளி விபரங்களுடன் தனது கருத்துகளை பேசிய பாபா, "மக்கள் கிட்ட பேசுறதும்உங்க கிட்ட பேசுறதும் ஒன்றுதான்" என்று காமண்ட் அடித்தார்.

  வழக்குகள்:  பழனிபாபா மீது 136 வழக்குகள்125 முறை சிறைவாசம். பாபா மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் கருணாநிதி ஆட்சியில்  2 முறை போடப்பட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி திரு. ஆர்.வெங்கட்ராமன் பதவி வகித்த காலத்தில் அரசு பணத்தில் (240 கோடி ரூபாய்) திருப்பதி கோவிலுக்கும்காஞ்சி சங்கர மடத்துக்கும் அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரிசென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து பலரது புருவத்தை உயர வைத்தார். அதன்பின்  “சென்னை உயர்நீதிமன்றம்”  தள்ளுபடி செய்தது. பழனிபாபா மனம் தளராமல் டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு சாதனை சரித்திரமானது இவ்வழக்கு!.

எழுத்துப்பணி:  இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ஹிந்துஸ்தானத்திற்கு ஹிந்துவுக்கு ஆபத்துஎன்ற இராம.கோபாலனுடைய நூலுக்கு மறுப்புரை நூலையும் எழுதினார்.  மறுப்புரை நூல் பரபரப்பாக பேசப்பட்டது. அரசால் தடைசெய்யப்பட்டது. கிறிஸ்துவம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார், அதன் வெளிப்பாடே "பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதாஎன்ற நூல். பாபர் மஸ்ஜித் தொடர்பாக ஆங்கிலத்தில் பாபா எழுதிய நூல் தான்  Who Is Law Abiding On The Issue Of Babri Masjid? நூலாகும். இவ்வாறு நூல்களை எழுதியதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கைகளையும் தொடங்கினார். பாபா நடத்திய  “அல்முஜாஹித்”,  “முக்குல முரசு”, “புனிதப்போராளி”,  ஆகிய பத்திரிக்கை ஆகும்.


வெளிநாட்டு பயணம்:  இலங்கைமலேசியாசிங்கப்பூர் மற்றும் பல நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை பேசினார்.  1988ம் ஆண்டு அமெரிக்காவில் பைபிள் பற்றிய பல சர்ச்சைகளுக்கும் குர்ஆனின் விஞ்ஞான விளக்கங்களும் என்ற தலைப்பில் பிலடெல்பியா மாகாணம் பெல்லொஷிப் பல்கலைக் கழகத்தில் 13 மணி நேரம் தொடர் உரையாற்றி அமெரிக்க விஷயதாரிகளை வியப்புக்கு உள்ளாக்கியவர். அந்தப் பிரச்சாரத்தில் ஏராளமான அயல்நாட்டினர் அமெரிக்கர் உட்பட அல்லாஹ்வின் மார்க்கமாம் இஸ்லாத்தை அப்படியே துணிந்து ஏற்றனர்.

 மறைவு: 1997 ஜனவரி 28ந் தேதி நண்பர் தனபால் வீட்டிற்கு சென்றார். அவருடன் பேசிக் கொண்டிருந்த பாபா பின்னர் சுமார்  இரவு 9:30மணிக்கு அங்கிருந்து வெளியே வந்துதனது ஜீப்பில் ஏறி அமர்ந்தார். அப்போது ஏதோ விசாரிக்க வந்தவன் போல் வந்த ஒருவன்,  ஒரு கோடாரியால் பாபாவின் வயிற்றில் வெட்டினான். அசைய முடியாத நிலையில் இருந்த பாபாவின் குடல் சரிந்ததும் கழுத்திலும்முகத்திலுமாக 18 வெட்டுகள் விழுந்தன. அந்த இடத்திலேயே பாபா ஷஹித் ஆனார்.  மறுநாள் 29-ம் தேதி புது ஆயக்குடிக்கு பாபாவின் ஜனாஸா (உடல்) கொன்டுவரப்பட்டு அன்று மாலை 5:30 மணிக்கு ஐ.டி.ஒ. (IDO) மேல்நிலைப்பள்ளி எதிரில் அடக்கம் செய்யப்பட்டது.. 

  நமது பிள்ளைகளுக்கு இந்திய வரலாறுகளையும், இந்திய அரசியல் சாசனங்களையும் சொல்லி, இஸ்லாமிய முறைப்படி வளர்ப்போம். இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Tuesday, February 16, 2016

முஸ்லிம்களின் அயோக்கியன் அக்பர்

         நமது பள்ளி புத்தகத்தில் முகலாய சாம்ராட்சியம் என்றால் அக்பர் என்ற ஒரு அயோக்கியன் பெயர்தான் வரும் அவனுடைய காலத்தை சிறந்த காலம் என்று படித்தோம். “AKBER THE GREAT” என்ற தலைப்பில் இருக்கும். இதை தான் நானும் படித்தேன் நீங்களும் படித்து இருப்பிர்கள். நாம் மட்டுமா நம்முடைய பிள்ளைகள் கூட இதை தான் படிக்கிறார்கள்.  ஏன் மற்ற முகலாய அரசர்களுக்கு இல்லாத சிறப்பை நமது பள்ளி பாட புத்தகத்தில் அக்பருக்கு இருக்கு என்று சற்று ஆய்வு செய்து பார்த்தால் தான் நமக்கு உண்மை தெரிகிறது. அந்த உண்மைகள் இங்கு காண்போம்.

  “தீனே இலாஹி” இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்டு, அக்பர் இருந்தவரை உயிரோடு இருந்து அவர் இறந்தபோது அந்த புதிய மதமும் சேர்ந்தே இறந்து போனது. இறந்து போன மதத்தைப் பற்றி இப்போது என்ன பேச்சு என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? வேறு வழியில்லை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த ஒரு அயோக்கியனை சிறந்த அரசர் என்று நம்மை நம்ம வைக்கிறார்கள். நமது குழந்தைகளையும் அதை படிக்க வைக்கிறார்கள் இந்த இஸ்லாமிய விரோத போக்கு கொண்ட காவி அதிகார வர்கத்தினர்.

 முகலாயச் சம்ராஜ்யத்தைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காக இந்து, முஸ்லிம் கொள்கைகளை ஒன்றாகக் கலந்து ஒரு புதியதொரு சமயக் கொள்கை உருவாக்கப்பட்டது. இந்து அரசவைப் பிரதானிகள் சக்கரவர்த்தியை மகிழ்விப்பதற்காக இந்து வேதங்களிலிருந்து சில தீர்க்க தரிசனக் கூற்றுகளை எடுத்துக் காட்ட முற்பட்டனர். அதேபோல் நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல முஸ்லிம் அறிஞர்கள் சிலர் அக்பரே வாக்களிப்பட்ட மஹ்திஎன்றும் எல்லாவற்றுக்கும் மேலாக அக்பர் தான் இமாமுல் முஜ்தஹித்என்றும் நீருபிக்க முனைந்தனர். அரசவைப் பிரதானிகளில் ஒருவரான சூஃபி ஒருவர் அக்பரை பரிபூரண மனிதன் என்றும் தற்கால கலீஃபா என்றும் பூமியில் இறைவனின் அவதாரம் என்றும் பிரகடனப்படுத்தினார்.

 அதன் அடிப்படைக் கொள்கை லா இலாஹ இல்லல்லாஹ் அக்பர் கலீஃபத்துல்லாஹ்என்பதாகும். (அதாவது வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அக்பர் அவனது பிரதிநிதியாவார்). இஸ்லாத்தை வெளிப்படையாகத் துறந்து விட்டு, அக்பரின் “தீனே இலாஹி” யில் பக்தி சிரத்தையோடு நுழைய வேண்டும்.

இம்மதத்தைத் தழுவியவர்கள் “சேலர்” என அழைக்கப்பட்டனர். அரசனை வழிபடல் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும் என்றனர். இஸ்லாத்துக்கு முரணான செயல்களான காலில் விழுதல், தீ வழிபாடு, மாலைப் பொழுது கிரியைகள், அரண்மனையினர் எழுந்து நின்று மரியாதை செய்தல், மணி அடித்தல், மும்மூர்த்திகளை வழிபடல் போன்ற கிரியைகள் செய்தனர். பசுக்களை அறுப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது, அன்றாடம் நான்கு வேளை சூரிய வழிபாடு செய்தனர். இஸ்லாமிய போதனைகள் தட்டுத்தடங்கலின்றி நிராகரிக்கப்பட்டன.

வட்டி, சூதாட்டம், மதுவருந்துதல் ஆகியவை சட்டபூர்வமாக்கப்பட்டன. நவ்ரூஸ் பண்டிகையின்போது மதுவருந்துதல் கட்டாயமாக்கப்பட்டது. பட்டும் தங்கமும் அணிவது ஆண்களுக்கு சட்டமுறையாக்கப்பட்டது இஸ்லாமிய போதனைகளுக்கு மாறாக பன்றி தூய்மையான புனிதமான ஒரு விலங்காகக் கருதப்பட்டது. இறந்த உடல்கள் புதைப்பதற்குப் பதில் எரியூட்டப்பட்டன; அல்லது ஓடும் நதியில் எறியப்பட்டன.

அக்பரின் அரசாங்க கல்விக் கொள்கை இஸ்லாமிய மார்க்க கல்வியை ஒழிக்கும் நோக்கோடு அமைக்கப்பட்டது. அரபு மொழியில் இஸ்லாமியச் சட்டம், ஹதீஸ் ஆகிய பாடங்கள் போதிப்பதற்கு அனுமதிக்கவில்லை.. இக்கலைகளை கற்றோர் செல்லாக்காசுகளாகவும், கீழ்த்தரமானவர்களாகவும், கருதப்பட்டனர். மொழியை பொறுத்தவரை சமஸ்கிருதப்படுத்திய ஹிந்தியை வளர்ப்பதற்குப் பேராவல் காட்டப்பட்டது. அரபு மொழிச் சொற்கள் படிப்படியாகக் கைவிடப்பட்டன. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் மார்க்க கல்விகூடங்கள் கைவிடப்பட்டன. சரியான மார்க்க அறிஞர்கள் நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பொதுமக்களின் நிலை இதைவிட மோசமாயிற்று இந்தியாவிலேயே இஸ்லாத்தை ஏற்றிருந்தவர்களுக்கு இஸ்லாமிய போதனைகளிலும் பண்பாட்டிலும் போதிய பயிற்சி அளிக்கப் பட்டிருக்கவில்லை. தூய இஸ்லாத்தைப் பற்றி தெளிவு இல்லாதவர்களாக மாறி ஆதலால் அவர்களின் நடைமுறை வாழ்க்கை எல்லா விஷயங்களிலும் மார்க்கத்திற்கு முரண்பட்டதாகவே இருந்தது.

இந்த புதிய கொள்கையை ஒழித்து கட்ட அல்லாஹ் ஒரு மார்க்க அறிஞரை அனுப்பி அவனுடைய மார்க்கத்தை காத்தான். யார் அந்த அறிஞர் இன்ஷாஅல்லாஹ் விரைவில் பார்ப்போம்...

நமது பிள்ளைகளுக்கு வரலாறுகளின் முக்கியத்துவத்தை சொல்லி இஸ்லாமிய பாரம்பரியத்துடன் வளர்ப்பாம்.! இஸ்லாமிய உண்மையான வரலாறுகளை சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!