Friday, April 15, 2016

பள்ளிவாசல்களில் சுதந்திர தினமா?

வரலாறு என்பது என்றும் மாறாது, அப்படி மாறினால் அது வரலாறாக இருக்க முடியாது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் கடந்த 65 வருடங்களாக பல வழிகளில் சோதனைக்கு ஆழக்கப்படுகிறோம்.

 இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான வேலைகளின் ஒன்றுதான் கல்வியிலும், இந்திய சுதந்திர வரலாறுகளிலும் காவியில் கையாடல். R.S.S யின் மேதாவிகள் கடந்த 50 வருடங்களாக முயற்ச்சி செய்து இந்திய சுதந்திரத்திற்கும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களுக்கு துளி கூட பங்கு இல்லாததது போல் வரலாறுகளை மாற்றி எழுதியுள்ளார்.

உண்மையில் இந்தியாவை செழிப்பாக ஆண்டவர்களும், இந்திய சுதந்திர போரில் அதிகமாக பங்கு பெற்றவர்களும் இந்திய முஸ்லிம்களே. பள்ளிகூட புத்தகங்களில் இந்திய முஸ்லிம்களை பற்றி தவறாக இருந்தாலும் இப்போது உள்ள முஸ்லிம்கள் தங்களுடைய கண்ணை திறந்து இந்திய முஸ்லிம்களின் தியாகம், வரலாறு என்று நிறைய தலைப்புகளில் தலைவர்களின் பேச்சாலும், வரலாற்று புத்தகங்களாலும் உண்மையான இந்திய சுதந்திர முஸ்லிம் வீரர்களின் வரலாறுகளை நாம் ஒரு அளவுக்கு தெரிந்து கொண்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்..!

உண்மையில் இந்திய சுதந்திர போரில் பள்ளிவாசல்களும், மதரஷாகளும் தான் மக்களுக்கு அதிகமாக சுதந்திர உணர்வை ஏற்ப்படுத்தியது. இதன் காரணாமாகவே முஸ்லிம்கள் இந்திய சுதந்திர போரில் அதிகமாக கலந்து கொண்டனர். நிச்சயமாக இந்திய சுதந்திர போரில் முஸ்லிம்கள் பங்கு பெறவில்லையெனில், இன்று வரை நம் இந்திய நாடு அந்நியர்களிடம் அடிமை பட்டுதான் இருக்கும் என்பதில் மாற்று கருந்துயில்லை.

சரி இந்திய விடுதலை பெற்று விட்டது. நமக்கு எதிராக காவிகள் செயலாற்றினாலும், இப்பொழுது ஒரு அளவுக்கு நாம் சுதந்திர வரலாறுகள் தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் இந்திய விடுதலைக்காக முழுக்கு முழுக்க களத்தில் இறங்கிய பள்ளிவாசல்களிலும், மதரஷாகளிலும் அதன் நிலை என்ன?

ஏன் நாம் இந்திய சுதந்திர தினத்தை பள்ளிவாசல்களிலும், மதரஷாகளிலும் நினைவு படுத்துவதில்லை? இந்திய சுதந்திர போருக்காக தனது உயிரையே கொடுக்க நமது முஸ்லிம் வீரர்கள் இங்கு இருந்துதானே புறப்பட்டார்கள்? பிறகு ஏன் நமக்கு அதில் தயக்கம்?

உண்மையில் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாட முழு தகுதி பெற்றவர்கள் நாம் மட்டும் தான் அதற்க்கான சரியான இடம் பள்ளிவாசல்களும், மதரஷாகளும் தான். நாம் நமது பள்ளிவாசல்களிலும், மதரஷகளிலும் இந்திய சுதந்திர தினத்தன்று சிறப்பு பயான் வைத்து அந்த நாளை ஒவ்வொரு வருடமும் நினைவு படுத்தினால் இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் RSS மட்டும் இல்லை இது போல இன்னும் 100 இயங்கங்கள் வந்தாலும் இந்திய முஸ்லிம்களின் வராலாறுகளை அழிக்கமுடியாது. 

  இன்ஷாஅல்லாஹ் அதற்க்கான முயற்சியில் மதராஷாகளின் பொருப்பாளிகளும், பள்ளிவாசல்களின் முத்தவல்லிகளும் முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இஸ்லாமிய இயக்கங்களும் தங்களுடைய தலைமை மற்றும் கிளை அலுவலகத்திலும் சுதந்திர தின சிறப்பு பயான் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி வைத்தால் வரும் தலைமுறைக்கு இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்கள் பங்கு பற்றி எப்போதும் நினைவில் இருக்கும். இன்ஷாஅல்லாஹ்..!

Friday, April 1, 2016

இப்னு பதூதா (Ibn Battuta)

         முஸ்லிம்களின் மார்கோ போலோ என்று அழைக்கப்படும் இவர் கி.பி 13௦4 ஆம் ஆண்டு மொரோக்கோ நாட்டில் பிறந்தவர். தன்னுடைய 21 ஆம் வயதில் ஹஜ்ஜிக்கு சென்றபோது ஏற்பட்ட அனுபவத்தால் உலகில் உள்ள முஸ்லிம்கள் வாழும் அனைத்து நாடுகளுக்கும் செல்லவேண்டும் என்று முடிவு செய்தார்.

                தன்னுடைய இந்த என்னத்தை நிறைவேற்ற தொடர்ந்து 29 ஆண்டுகள் தொடர் பிரயாணம் மேற்கொண்டு 44 நாடுகளுக்கு படகு, குதிரை, ஒட்டகம் மற்றும் கால்நடையாக பயணம் மேற்கொண்டார்.

                   தன்னுடைய பயணத்தின் முடிவாக 29 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய சொந்த நாடான மொரோக்கோவில் இறுதிகாலத்தை கழித்த போது தான் சென்ற நாடுகளின் வாழ்ந்த மக்கள், கலாச்சாரம் மற்றும் அந்த நாடுகளை பற்றிய குறிப்புகளை புத்தகங்களாக (The Rihla) பதிவு செய்தார். இந்த புத்தகம் பிற்காலத்தில் வாழ்த்த வணிகர்களுக்கும் பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

                    விமானம், இரயில், பிரமாண்டமான கப்பல் போன்ற எதுவும் இல்லாத அந்த 13ஆம் நூற்றாண்டில் இவர் பயணம் செய்த தூராம் எவ்வளவு தெரியுமா? சுமார் 1,17,000 கி.மி...! சற்று சிந்தனை செய்து பாருங்கள். இவருடைய நினைவாகத்தான் துபாயில் உள்ள ஒரு பிரமாண்டமான  மாலுக்கு இப்னு பதூதா மால் (Ibn Battuta Mall) என்று பெயர் வைத்துள்ளார்கள்.....
   
   நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற சாதனையாளர்களின் வரலாறுகள் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Tuesday, March 15, 2016

ஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல..

“இஸ்லாமியர்களின் வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல” என்று நல்ல மனிதர்கள் சொன்னாலும் கேர்க்கமாட்டோம்.

“நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;” (அல்-குர்ஆன் 3:103) என்று அல்லாஹ் சொன்னலும் கேர்க்க மாட்டோம்.

     ஒற்றுமையாலும், இஸ்லாமிய கலாச்சரத்தினாலும் (குர்ஆன், ஹதிஸ் முறைப்படி வாழ்ந்ததாலும்) முஸ்லிம்களுக்கு உலகில் பல இடங்களில் பல வெற்றிகளை அல்லாஹ் கொடுத்தான். ஸ்பெயின் நாட்டில் 700 வருட இஸ்லாமிய ஆட்சி, இந்தியாவில் 700 வருட முகலாய ஆட்சி, ஸ்பெயின் முதல் சினா வரை கி.பி. 700 முதல் கி.பி. 1500 வரை முஸ்லிம்களுக்கு விஞ்ஞான அறிவியல், அரசாட்சி என பல வெற்றிகளை முஸ்லிம்கள் ஒற்றுமை மற்றும் இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றியதால் கொடுத்த அல்லாஹ்….

     பிறகு அவர்களிடம் ஏற்ப்பட்ட ஒற்றுமையின்மை, சிறு சிறு குழுச்சன்டை, கலாச்சார மாற்றம் போன்ற காரனங்களால் அவர்களிடமிருந்து ஆட்சியை பிடிங்கி முஸ்லிம் அல்லாதவர்களிடம் கொடுத்தான். முஸ்லிம்களின் கலாச்சார மாற்றத்தால் நம்முடைய அறிவியல் கண்டுபிடிப்பு, ஆட்சி அதிகாரம், அறிவுத்திறன் போன்ற அனைத்தும் முஸ்லிம் அல்லாதவர்களின் கையில் சென்றதால் உலகில் பெரும் பகுதிகளில் முஸ்லிம்மாகிய நாம் கஷ்டப்படுகிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது…

     நமக்குள் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் அதை அல்லாஹ்வுக்காக மறந்து இஸ்லாம் சொல்லும் முறைப்படி வாழ்ந்து ஒற்றுமையுடன் இஸ்லாமிய காலாச்சாரத்தை காப்போம், வெற்றி பெறுவோம்..
இன்ஷா அல்லாஹ்…..

“வரலாறு தெரியாத சமுகம் வாழ்த்ததாக சரித்திரம் இல்லை”

Tuesday, March 1, 2016

புனிதப் போராளியின்...

   இன்றுடன் (28.01.2016) சமுதாயப்போராளி பழனிபாபா இறந்து 19 ஆண்டுகள் கடந்து விட்டது. அவரை பற்றி நான் படித்த வரிகளில் உங்களுக்காக சில.

அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டிய அல்ஹாஜ் பழனிபாபா அவர்களது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும். 

சொந்த ஊர்:  பழனியிலிருந்து  4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ள புது ஆயக்குடியில் பழனிபாபா  பெற்றொருக்கு  இரண்டாவது குழந்தையாக  14/11/1950ல் பிறந்தார்.

ஆரம்பக் கல்வி:  குன்னூரில் உள்ள செயின்ல் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் ஆரம்பக்கல்வியை தொடங்கினார். அடுத்து மேல்நிலைக்கல்வியை புது ஆயக்குடியில் உள்ள ஐ.டி.ஒ (I.D.O) மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.

 பட்டப்படிப்பு: பழனியில் உள்ள பழனி ஆண்டவர் கலைக் கல்லுரியில் ஆங்கில இலக்கியம் பட்டம் பயின்று முடித்தார். அதன் பிறகு டெல்லியில் 10 ஆண்டுகள் இருந்தப்போது முதுகலை மற்றும் முனைவர் (Phd.,) பட்டம் பெற்றார்.

 பொது வாழ்க்கை: நைனா முஹம்மது என்பவர் தலைமையில் புது ஆயக்குடியில் முஸ்லிம் லீக் சார்பில் நடந்த கூட்டம்தான் பழனிபாபாவின் முதல் பொதுக்கூட்டம் அதன் பின் ஆயிரக்கணக்கான மேடைகளில் அடைமழையென,  புயலென,  அழகான அற்புதமான  புள்ளிவிபரங்களுடன் பேசி இஸ்லாமிய சமுதாயத்தின் எழுச்சிக்கு வித்திட்டார். அவரது பேச்சுக்கள் இஸ்லாமிய இளைஞர்களின் தேசிய கீதமானது.  பாபா தனது வாழ்நாளில் பேசிய மொத்தக் கூட்டங்களின் எண்ணிக்கை 13201 ஆகும். இறுதியாக அவர் பேசிய கூட்டம் நாகை மாவட்டம்.  திட்டச்சேரியில்  07/12/1996  அன்று  நடைபெற்றப் பொதுக்கூட்டமாகும்.

முதன் முறையாக எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற சில காலங்களிலேயே சென்னைக் கோட்டைக்குள் நுழைய பழனிபாபாவிற்கு தடை என அரசானை வெளியானது. “யார் இந்த பழனிபாபா?” என்று தமிழக மக்கள் பார்க்கத் தொடங்கினர்.

 எம்.ஜி. இராமச்சந்திரன் அவரது ஆட்சிக் காலத்தில்,  ‘பழனிபாபா  பொது கூட்டங்களில் பேசக்கூடாது’ எனத் தடை உத்தரவு போட்டிருந்தார். இதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் எருமை மாடுகளை கட்டிவைத்து,  மைக் வைத்து புள்ளி விபரங்களுடன் தனது கருத்துகளை பேசிய பாபா, "மக்கள் கிட்ட பேசுறதும்,  உங்க கிட்ட பேசுறதும் ஒன்றுதான்" என்று காமண்ட் அடித்தார்.

  வழக்குகள்:  பழனிபாபா மீது 136 வழக்குகள், 125 முறை சிறைவாசம். பாபா மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் கருணாநிதி ஆட்சியில்  2 முறை போடப்பட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி திரு. ஆர்.வெங்கட்ராமன்,  பதவி வகித்த காலத்தில் அரசு பணத்தில் (240 கோடி ரூபாய்) திருப்பதி கோவிலுக்கும், காஞ்சி சங்கர மடத்துக்கும் அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து பலரது புருவத்தை உயர வைத்தார். அதன்பின்  “சென்னை உயர்நீதிமன்றம்”  தள்ளுபடி செய்தது. பழனிபாபா மனம் தளராமல் டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு சாதனை சரித்திரமானது இவ்வழக்கு!.

எழுத்துப்பணி:  இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்,  ஹிந்துஸ்தானத்திற்கு ஹிந்துவுக்கு ஆபத்து? என்ற இராம.கோபாலனுடைய நூலுக்கு மறுப்புரை நூலையும் எழுதினார்.  மறுப்புரை நூல் பரபரப்பாக பேசப்பட்டது. அரசால் தடைசெய்யப்பட்டது. கிறிஸ்துவம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார், அதன் வெளிப்பாடே "பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா? என்ற நூல். பாபர் மஸ்ஜித் தொடர்பாக ஆங்கிலத்தில் பாபா எழுதிய நூல் தான்  Who Is Law Abiding On The Issue Of Babri Masjid? நூலாகும். இவ்வாறு நூல்களை எழுதியதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கைகளையும் தொடங்கினார். பாபா நடத்திய  “அல்முஜாஹித்”,  “முக்குல முரசு”, “புனிதப்போராளி”,  ஆகிய பத்திரிக்கை ஆகும்.


வெளிநாட்டு பயணம்:  இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை பேசினார்.  1988ம் ஆண்டு அமெரிக்காவில் பைபிள் பற்றிய பல சர்ச்சைகளுக்கும் குர்ஆனின் விஞ்ஞான விளக்கங்களும் என்ற தலைப்பில் பிலடெல்பியா மாகாணம் பெல்லொஷிப் பல்கலைக் கழகத்தில் 13 மணி நேரம் தொடர் உரையாற்றி அமெரிக்க விஷயதாரிகளை வியப்புக்கு உள்ளாக்கியவர். அந்தப் பிரச்சாரத்தில் ஏராளமான அயல்நாட்டினர் அமெரிக்கர் உட்பட அல்லாஹ்வின் மார்க்கமாம் இஸ்லாத்தை அப்படியே துணிந்து ஏற்றனர்.

 மறைவு: 1997 ஜனவரி 28ந் தேதி நண்பர் தனபால் வீட்டிற்கு சென்றார். அவருடன் பேசிக் கொண்டிருந்த பாபா பின்னர் சுமார்  இரவு 9:30மணிக்கு அங்கிருந்து வெளியே வந்து,  தனது ஜீப்பில் ஏறி அமர்ந்தார். அப்போது ஏதோ விசாரிக்க வந்தவன் போல் வந்த ஒருவன்,  ஒரு கோடாரியால் பாபாவின் வயிற்றில் வெட்டினான். அசைய முடியாத நிலையில் இருந்த பாபாவின் குடல் சரிந்ததும் கழுத்திலும்,  முகத்திலுமாக 18 வெட்டுகள் விழுந்தன. அந்த இடத்திலேயே பாபா ஷஹித் ஆனார்.  மறுநாள் 29-ம் தேதி புது ஆயக்குடிக்கு பாபாவின் ஜனாஸா (உடல்) கொன்டுவரப்பட்டு அன்று மாலை 5:30 மணிக்கு ஐ.டி.ஒ. (IDO) மேல்நிலைப்பள்ளி எதிரில் அடக்கம் செய்யப்பட்டது.. 

  நமது பிள்ளைகளுக்கு இந்திய வரலாறுகளையும், இந்திய அரசியல் சாசனங்களையும் சொல்லி, இஸ்லாமிய முறைப்படி வளர்ப்போம். இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Tuesday, February 16, 2016

முஸ்லிம்களின் அயோக்கியன் அக்பர்

         நமது பள்ளி புத்தகத்தில் முகலாய சாம்ராட்சியம் என்றால் அக்பர் என்ற ஒரு அயோக்கியன் பெயர்தான் வரும் அவனுடைய காலத்தை சிறந்த காலம் என்று படித்தோம். “AKBER THE GREAT” என்ற தலைப்பில் இருக்கும். இதை தான் நானும் படித்தேன் நீங்களும் படித்து இருப்பிர்கள். நாம் மட்டுமா நம்முடைய பிள்ளைகள் கூட இதை தான் படிக்கிறார்கள்.  ஏன் மற்ற முகலாய அரசர்களுக்கு இல்லாத சிறப்பை நமது பள்ளி பாட புத்தகத்தில் அக்பருக்கு இருக்கு என்று சற்று ஆய்வு செய்து பார்த்தால் தான் நமக்கு உண்மை தெரிகிறது. அந்த உண்மைகள் இங்கு காண்போம்.

  “தீனே இலாஹி” இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்டு, அக்பர் இருந்தவரை உயிரோடு இருந்து அவர் இறந்தபோது அந்த புதிய மதமும் சேர்ந்தே இறந்து போனது. இறந்து போன மதத்தைப் பற்றி இப்போது என்ன பேச்சு என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? வேறு வழியில்லை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த ஒரு அயோக்கியனை சிறந்த அரசர் என்று நம்மை நம்ம வைக்கிறார்கள். நமது குழந்தைகளையும் அதை படிக்க வைக்கிறார்கள் இந்த இஸ்லாமிய விரோத போக்கு கொண்ட காவி அதிகார வர்கத்தினர்.

 முகலாயச் சம்ராஜ்யத்தைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காக இந்து, முஸ்லிம் கொள்கைகளை ஒன்றாகக் கலந்து ஒரு புதியதொரு சமயக் கொள்கை உருவாக்கப்பட்டது. இந்து அரசவைப் பிரதானிகள் சக்கரவர்த்தியை மகிழ்விப்பதற்காக இந்து வேதங்களிலிருந்து சில தீர்க்க தரிசனக் கூற்றுகளை எடுத்துக் காட்ட முற்பட்டனர். அதேபோல் நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல முஸ்லிம் அறிஞர்கள் சிலர் “அக்பரே வாக்களிப்பட்ட மஹ்தி” என்றும் எல்லாவற்றுக்கும் மேலாக “அக்பர் தான் இமாமுல் முஜ்தஹித்” என்றும் நீருபிக்க முனைந்தனர். அரசவைப் பிரதானிகளில் ஒருவரான சூஃபி ஒருவர் அக்பரை பரிபூரண மனிதன் என்றும் தற்கால கலீஃபா என்றும் பூமியில் இறைவனின் அவதாரம் என்றும் பிரகடனப்படுத்தினார்.

 அதன் அடிப்படைக் கொள்கை ‘லா இலாஹ இல்லல்லாஹ் அக்பர் கலீஃபத்துல்லாஹ்’ என்பதாகும். (அதாவது வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அக்பர் அவனது பிரதிநிதியாவார்). இஸ்லாத்தை வெளிப்படையாகத் துறந்து விட்டு, அக்பரின் “தீனே இலாஹி” யில் பக்தி சிரத்தையோடு நுழைய வேண்டும்.

இம்மதத்தைத் தழுவியவர்கள் “சேலர்” என அழைக்கப்பட்டனர். அரசனை வழிபடல் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும் என்றனர். இஸ்லாத்துக்கு முரணான செயல்களான காலில் விழுதல், தீ வழிபாடு, மாலைப் பொழுது கிரியைகள், அரண்மனையினர் எழுந்து நின்று மரியாதை செய்தல், மணி அடித்தல், மும்மூர்த்திகளை வழிபடல் போன்ற கிரியைகள் செய்தனர். பசுக்களை அறுப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது, அன்றாடம் நான்கு வேளை சூரிய வழிபாடு செய்தனர். இஸ்லாமிய போதனைகள் தட்டுத்தடங்கலின்றி நிராகரிக்கப்பட்டன.

வட்டி, சூதாட்டம், மதுவருந்துதல் ஆகியவை சட்டபூர்வமாக்கப்பட்டன. நவ்ரூஸ் பண்டிகையின்போது மதுவருந்துதல் கட்டாயமாக்கப்பட்டது. பட்டும் தங்கமும் அணிவது ஆண்களுக்கு சட்டமுறையாக்கப்பட்டது இஸ்லாமிய போதனைகளுக்கு மாறாக பன்றி தூய்மையான புனிதமான ஒரு விலங்காகக் கருதப்பட்டது. இறந்த உடல்கள் புதைப்பதற்குப் பதில் எரியூட்டப்பட்டன; அல்லது ஓடும் நதியில் எறியப்பட்டன.

அக்பரின் அரசாங்க கல்விக் கொள்கை இஸ்லாமிய மார்க்க கல்வியை ஒழிக்கும் நோக்கோடு அமைக்கப்பட்டது. அரபு மொழியில் இஸ்லாமியச் சட்டம், ஹதீஸ் ஆகிய பாடங்கள் போதிப்பதற்கு அனுமதிக்கவில்லை.. இக்கலைகளை கற்றோர் செல்லாக்காசுகளாகவும், கீழ்த்தரமானவர்களாகவும், கருதப்பட்டனர். மொழியை பொறுத்தவரை சமஸ்கிருதப்படுத்திய ஹிந்தியை வளர்ப்பதற்குப் பேராவல் காட்டப்பட்டது. அரபு மொழிச் சொற்கள் படிப்படியாகக் கைவிடப்பட்டன. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் மார்க்க கல்விகூடங்கள் கைவிடப்பட்டன. சரியான மார்க்க அறிஞர்கள் நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பொதுமக்களின் நிலை இதைவிட மோசமாயிற்று இந்தியாவிலேயே இஸ்லாத்தை ஏற்றிருந்தவர்களுக்கு இஸ்லாமிய போதனைகளிலும் பண்பாட்டிலும் போதிய பயிற்சி அளிக்கப் பட்டிருக்கவில்லை. தூய இஸ்லாத்தைப் பற்றி தெளிவு இல்லாதவர்களாக மாறி ஆதலால் அவர்களின் நடைமுறை வாழ்க்கை எல்லா விஷயங்களிலும் மார்க்கத்திற்கு முரண்பட்டதாகவே இருந்தது.

இந்த புதிய கொள்கையை ஒழித்து கட்ட அல்லாஹ் ஒரு மார்க்க அறிஞரை அனுப்பி அவனுடைய மார்க்கத்தை காத்தான். யார் அந்த அறிஞர் இன்ஷாஅல்லாஹ் விரைவில் பார்ப்போம்...

நமது பிள்ளைகளுக்கு வரலாறுகளின் முக்கியத்துவத்தை சொல்லி இஸ்லாமிய பாரம்பரியத்துடன் வளர்ப்பாம்.! இஸ்லாமிய உண்மையான வரலாறுகளை சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Monday, February 1, 2016

யர்முக் போர் களம் (Battle_of_Yarmouk)

              அணி வகுத்திருந்த கிருஸ்தவப் படையிலிருந்து வெளியே வந்த ஜூர்ஜா என்பவர், முஸ்லிம் படைத் தலைவர் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைச் சந்திக்கவேண்டும் என்று கோரினார். ஜூர்ஜாவை காலித் அவர்கள் சந்தித்தார். ஜூர்ஜா பேச ஆரம்பித்தார்.  

           ஜூர்ஜா : “காலித்! தாங்கள் உண்மையை மட்டுமே சொல்லவேண்டும். காரணம், தாங்கள் சுதந்திர மனிதர். சுதந்திர மனிதர்கள் பொய் சொல்வதில்லை. தாங்கள் ஏமாற்றவும் கூடாது. காரணம் கண்ணியமிக்கவர்கள் ஏமாற்றமாட்டார்கள். தங்களுக்கு அல்லாஹ் வானுலகிலிருந்து ஒருவாள் வழங்கியதாகவும், அதனை முஹம்மது அவர்கள் தங்களிடம் கொடுத்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். இது உண்மையா?”

காலித் இப்னுவலீத் (ரலி): “உண்மை இல்லை”

ஜூர்ஜா : “அப்படியானால் தங்களை ‘அல்லாஹ்வின் வாள்’ என்று அழைப்பதற்கு என்ன காரணம்?”

       காலித் (ரலி): “நாங்கள் இருளில் கிடந்தோம். இறைவன் எங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியை வழங்கினான். ஆனால் நாங்கள் அவரைப் புறக்கணித்தோம். பின்னர் நிறைய பேர் அவரது வார்த்தைகளைச் செவி மடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களையும் அவர்களை ஏற்றுக் கொண்டவர்களையும் நாங்கள் தொல்லைகளுக்கு ஆட்படுத்தினோம். எங்களுக்கிடையில் சண்டைகளும் நடந்தன. கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் மீது இறைத்தூதர் அவர்களின் பிடி இறுகியது. எங்களுடைய இதயங்களும் தலைகளும் அல்லாஹ்வுக்கு அடி பணிந்தன. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மூலமாக அல்லாஹ் எங்களை நேர்வழியில் ஆக்கினான். அவர்களோடு சேர்ந்து நாங்களும் தீமைகளுக்கெதிராகப் போராடினோம்.

        ஒரு தடவை அண்ணலார் அவர்கள், ‘அல்லாஹ் வெளியில் எடுத்த நிறைய வாள்களில் ஒரு வாள் நீ’ என்று கூறினார்கள். அதற்கு பிறகுதான் நான் ‘அல்லாஹ்வின் வாள்’ என்று அழைக்கப்பட்டேன்.”

ஜூர்ஜா: “என்ன விஷயத்திற்காக எங்களை நீங்கள் அழைக்கிறீர்கள்?”

காலித் : “வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற சத்தியத்தை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் வாழ்ந்திடவும் வேண்டும்.”

ஜூர்ஜா: ”இன்று உங்களோடு சேர்பவர்களுக்கு என்ன அந்தஸ்து வழங்குவீர்கள்?”

காலித்: “இஸ்லாமில் எங்களுக்கு என்ன அந்தஸ்து உள்ளதோ அதே அந்தஸ்து உங்களுக்கும் கிடைக்கும். அல்லாஹ் எங்களுக்குக் கடமையாக்கிய காரியங்கள் உங்களுக்கும் கடமையாகும். எங்களுக்கிடையில் பிரமுகர்கள், சாதாரண மனிதர்கள், முதலில் வந்தவர், கடைசியில் வந்தவர் என்ற வித்தியாசம் இல்லை.”

ஜூர்ஜா: “இப்பொழுது வருபவர்களுக்கும் அதே பிரதிபலனும் அனுகூலங்களும் கிடைக்குமா?”

காலித்: “ஆம். கிடைக்கும். ஒரு வேளை எங்களை விட அதிகமாகவே அவர்களுக்குக் கிடைக்கும்.”

ஜூர்ஜா: “காரணம்…?”

காலித்: “நாங்கள் நிறைய தியாகங்கள் செய்திருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் இறைத்தூதர் அவர்கள் வாழ்ந்திருந்த சமயத்தில் நாங்கள் இஸ்லாமினுள் நுழைந்தோம். அவர்களுக்கு இறைச்செய்தி (வஹீ) வருவதை நாங்கள் நேரில் கண்டோம். இறை அத்தாட்சிகள் பலவற்றை அவர்கள் எங்களுக்குக் காண்பித்துத் தந்தார்கள். ஆனால் நீங்கள் அப்படியல்ல. அனைத்தையும் கேட்கும் வாய்ப்பு மட்டுமே உங்களுக்கு உள்ளது. அதனால் மனதறிந்து இஸ்லாமினுள் நுழைபவர்கள் உண்மையில் எங்களை விடச் சிறந்தவர்கள்.”

ஜூர்ஜா: “தாங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.”

ஜூர்ஜா இதனைச் சொல்லிவிட்டு முஸ்லிம் அணியில் வந்து நின்றார். கலிமாவை உரக்க மொழிந்தார்.  பின்னர் முஸ்லிம்களோடு சேர்ந்து கொண்டு எதிரிகளை எதிர்த்துப் போராடினார். ஒரு தடவை மட்டும்தான் அவர் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களோடு தொழுதார். அல்லாஹு அக்பர்! அன்று மாலையே அவர் ஷஹீதானார்.

          காலித் இப்னு வலீத் (ரலி) பற்றி படிக்க நீரைய வரலாற்று செய்திகள் உள்ளன. இவர்கள் இஸ்லாத்திற்க்கு வருவதற்கு முன்பு இருந்த நிலையும் சேர்ந்து படிப்பது சிறந்தது. நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும் இஸ்லாமிய அரசியல் முறையும் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Friday, January 15, 2016

பிரான்சால் பாராட்டப்பட்ட ஜிஹாதி

          19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நடந்தது அந்த நிகழ்ச்சி!  ஒரு நாட்டால் தேசத் துரோகியாய் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட ஒருவர், பின்னர் அதே நாட்டால் அந்த நாட்டின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டு ஹீரோவாய் புகழப்படுவது வரலாற்றில் அரிதாகக் காணக்கிடைக்கும் நிகழ்வு. இத்தனைக்கும் குற்றம் சாட்டியதும், பின்னர் அவரைக் கொண்டாடியதும் அவரது சொந்த நாடு அல்ல.

        “அமீர் அப்துல் காதிர் அல் ஜசாயிரி” ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் 1808 ஆம் ஆண்டு பிறந்து இளம் வயதிலேயே அல்-குரானை மனனம் செய்து இஸ்லாமியக் கல்வியையும் கற்ற மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார். 1825 ஆம் ஆண்டு மக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டுவிட்டு, பல்வேறு அரபு நாடுகளில் பிரயாணம் செய்து விட்டு பல வருடங்கள் கழித்து நாடு திரும்பிய போது தனது தாய்நாடான அல்ஜீரியாவை பிரஞ்சுப் படைகள் ஆக்கிரமித்திருந்தன. இன்று உலகில் நல்லவர்கள் என்பது போல் காட்டிக்கொள்ளும் ஆங்கிலேயர்களும் பிரஞ்சுக்காரர்களும் உலகம் முழுவதும் நிகழ்த்திய கொடூரங்கள் எண்ணிலடங்காதவை.

            வெறும் 22 வயதில் ஆக்கிரமிப்புக்கு எதிராக களம் இறங்கினார் அப்துல் காதிர். போர்க்களில் அனுபவம் ஏதுமின்றி களத்தில் குதித்து வல்லரசுகளில் ஒன்றான பிரான்சை எதிர்த்துப் போரிடும் சாதாரண பணியில்லை. ஆனாலும் உறுதி பூண்டார், களம் கண்டார்,  தனித்தனி குழுவாக இருந்த அனைத்துப் பழங்குடி மக்களையும் ஒன்றிணைத்து ஒரு படையை அமைத்தார். இதுவே அவர்களின் முதல் வெற்றி !!!

              1842 வரை தொடர்ந்த தாக்குதல்களில் சில இடங்களில் இவரது படைகளும் சில இடங்களில் பிரஞ்சுப் படைகள் வெற்றி பெற்றன. பிரஞ்சுப் படைகள் நிறைய இடங்களில் சமாதான உடன்படிக்கைகளை மீறி தாக்குதல் நடந்தியது.

                நவீன ஆயுதங்களும், பணபலமும், படைபலமும் கொண்ட ஒரு வல்லரசை எதிர்த்து எத்தனைநாள் பழங்குடிகளால் தாக்குப் பிடிக்க முடியும்? பிறகு சில வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அப்துல் காதிர். பின்னர் பிரான்சுக்கும், பிறகு அங்கிருந்து டமாஸ்கஸ் நகருக்கு நாடு கடத்தப்பட்டார். அல்ஜீரியா பிரஞ்சின் காலனி நாடு ஆனது.

             அரேபியக் கைதிகளின் உடல்களைச் சிதைப்பது, பழங்குடிக் குழுக்களை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிவது, ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை உயிருடன் எரிப்பது என்று பிரான்ஸ் தனது அழிச்சாட்டியத்தை காட்டியது. ஆனால் இஸ்லாமிய போர் நெறிமுறைகளைப் சரிவரப் பின்பற்றிய  அமீர் தனது எதிரிகளைப் போன்று கீழ்த்தரமாக நடந்து கொள்ளாமல் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். இவ்வளவு ஏன், ஒருமுறை கடும் உணவுப் பஞ்சம் வந்தபோது தன்னிடம் கைதிகளாக உள்ள பிரஞ்சுப் படை வீரர்களுக்கு தன்னால் உணவளிக்க முடியாமல் போனபோது அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்து விட்டார். அதற்கு முன்னரோ பின்போ போரில் நடக்காத இந்த அரிய நிகழ்வை வரலாறு இன்றும் பொன்னெழுத்துக்களால் பொறித்து வைத்துள்ளது.

              1841 ஆம் ஆண்டு அப்துல் காதிரிடம் இருந்த பிரஞ்சுக் கைதி ஒருவரை விடுதலை செய்யக் கோரி அல்ஜீரிய பிஷப் எழுதிய கடிதத்தில் ”என்னை உங்களுக்குத் தெரியாது. எனது இறைப் பணி என்பது கடவுளுக்கு பணிவிடை செய்வதும் எல்லா மனிதர்களையும் சகோதர்களாக  நேசிப்பதும் தான். என்னிடம் தருவதற்கு பணமோ தங்கமோ இல்லை “கருணையுள்ளவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்” என்ற விவிலிய வாக்கியத்துடன் நிறைவடைந்த கடிதத்துக்கு அமீர் இப்படி பதில் எழுதினார்.

                    சிறைபட்டிருக்கும் ஒரு கிருஸ்த்தவரின் விடுதலையை மட்டுமே நீங்கள் கோரி இருக்கக் கூடாது. எல்லா கிருஸ்த்தவர்களையும் விடுவிக்குமாறு நீங்கள் கோரி இருக்க வேண்டும். அதே போன்று பிரஞ்சு ராணுவத்தால் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களையும் விடுவிக்குமாறு நீங்கள் கூறி இருந்தால், உங்கள் இறைப்பணி இன்னும் இருமடங்கு பலனுள்ளதாய் ஆகி இருக்குமே. விவிலியத்தில் தானே இதுவும் இருக்கிறது ”மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயோ அதனை நீ அவர்களுக்குச் செய்” என்று முடித்திருந்தார்.

            இந்த வீரர்களை மீட்கும் பணியில் இரு தரப்பினரும் ஈடுபட்டிருந்த வேளையில் பிரஞ்சு தளபதிகள் முதல் முதலாக அப்துல் காதிர் அவர்களை நேரில் கண்டு அவரது எளிமையைக் கண்டு வியந்து போனார்கள். டமாஸ்கசுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னால் அமீரை சந்தித்த நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் நன்றிகளை அவருக்குத் தெரிவித்தார்கள். அவர்களில் அப்துல் காதிர் அவர்களிடம் கைதியாகப் பிடிபட்டு நல்ல முறையில் நடத்தப்பட்ட பிரஞ்சு ராணுவ அதிகாரிகளும் உண்டு.

             நாடுகடத்தப்பட்டு டமாஸ்கஸ் நகரில்  வாழ்ந்து கொண்டிருந்த அப்துல் காதிர் அங்கும் சில சவால்களை மேற்கொள்ள வேண்டி வந்தது. 1860 ஆம் ஆண்டு உதுமானியப் பேரரசின் அப்போதைய கவர்னராக இருந்த உமர் பாஷாவின் ஆளுகையில் இருந்த ஷியாக்களில்  ஒரு பிரிவினரான “துருஸே முஸ்லிம்கள்” கிறித்தவர்களை தாக்கினார்கள். அநியாயமாக எந்தக் கிறித்தவனும் கொலை செய்யப்படுவதை நான் வேடிக்கை பார்க்க மாட்டேன் என்று அறிவித்த அப்துல் காதிர் ஒரு படையை திரட்டி கிறித்தவர்களை பாதுகாக்கும் பணியில் இறங்கினார்.

                    தனது நாட்டை அடிமைப்படுத்தி, தன்னை போரில் தோற்கடித்து சிறையில் அடைத்து நாடு கடத்தியவர்கள் தானே என்று பார்க்காமல் நியாயத்துக்கு குரல் கொடுத்தார். உதுமானியப் பேரரசின் அரசருக்கு தகவல் அனுப்பினார். படை திரட்டி 12,000 க்கும் மேற்பட்ட கிருஸ்த்தவர்களைக் காப்பாற்றி ”Citadel of Damascus” என்ற கோட்டையில் அவர்களைத் தங்க வைத்து பாதுகாத்தார். உலகம் முழுவதும் பரவிய இந்தத் தகவலில் நெகிழ்ந்துபோனார்கள் கிறித்தவர்கள். கூனிக் குறுகிப் போனது பிரஞ்சு அரசாங்கம். அவரது மனித நேய நடவடிக்கைக்காக ஆயிரக்கணக்கில் மக்களை பாதுகாப்பாய் இடம் பெயர்த்த ஜிஹாதுக்காக பிரஞ்சு அரசின் மிக உயரிய விருதான  Grand Cross of the Légion d’honneur  அவருக்கு அறிவிக்கப்பட்டது.

             தங்களுக்கு எதிராகப் போர் தொடுத்து தங்களால் நாடு கடத்தப்பட்ட ஒருவருக்கே தனது நாட்டின் உயரிய விருதை வழங்கும் நிகழ்வு வரலாற்றில் மிக அரிதே. அது இங்கே நடந்தது. காட்டுத்தீயெனப் பரவிய இந்த சம்பவம் அமெரிக்காவை வந்தடைந்தது. ஒரு முஸ்லிம் கிறித்தவர்களின் உயிருக்காக ஜிஹாத் செய்தாரா? என்று நம்ப முடியாமல் கேட்டார் அதிபர் ஆப்ரஹாம் லிங்கன்.

         பாராட்டுக் கடிதமும்  சில துப்பாக்கிகளும் அன்பளிப்பாக லின்கனிடமிருந்து அனுப்பப்பட்டது. இன்றும் அந்தத் துப்பாகிகள் அல்ஜீரிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்றார்கள். அயோவா மாகாணத்தில் இருக்கும் ஒரு நகரத்துக்கு “Elkader” அப்துல் காதிரின் பெயர் சூட்டப்பட்டது.

              அரபுப் பெயர் கொண்டவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் சந்தேகப் பார்வை பார்க்கப்பட்டு தனிச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் ஒரு நாட்டில், எங்கோ நீதிக்காய்ப் போராடிய ஒரு விரரின் பெயரில் ஒரு நகரம் இருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம் தானே !!!

       நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும், இஸ்லாமிய அரசியல் முறையும் சொல்லி வளர்ப்போம். இவரைபோன்ற இஸ்லாமிய மார்க்கத்தையும், இஸ்லாமிய போர் நெறிமுறைகளையும் பேணி காத்த பல இஸ்லாமிய சுல்தான்கள், அரசர்கள் வரலாற்றில் உள்ளனர். இவர்களுடைய வரலாறுகள் படிக்காமல் தேவையில்லாத மக்களுடைய வரலாறுகள் படிப்பது நமது நேரத்தை வீனாக்குவதற்கு சமம். இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Friday, January 1, 2016

கருப்பு தங்கம் மான்ஸா மூஸா (கி.பி 1280-1337)

        14 ஆம் நூற்றாண்டில் இஸ்லாத்தை தன் வாழ்வில் அனைத்து நிலைகளிலும் பின்பற்றி வாழ்ந்து, மாலி பேரரசின் மாபெரும் அரசராக திகழ்ந்து “கருப்பு தங்கமான” மான்ஸா மூஸா உலகையே தன் வசம் ஈர்த்தார்.

    ஆப்ரிக்க கண்ட வரலாற்றில் மாபெரும் பேரரசு என்றால், அதுவும் அறிவுப் பேரரசு என்றால் அது மான்ஸா மூஸா ஆண்ட அந்த 25 ஆண்டுகால மாலிப் பேரரசுதான். ஆயிரக்கணக்கான தங்க சுரங்கங்களை கொண்ட மாலியின் ஆட்சியாளரான இவர் இஸ்லாமிய மார்க்கத்தில் மிகுந்த பிடிப்பும், பேணுதலும் உடையவராக இருந்தார். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தன் வாழ்நாளில் அல்லாஹ்வுடைய தூது செய்தியான இஸ்லாத்தை இந்த உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும், மாலியை இந்த உலகம் திரும்பி பார்க்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

     இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும், மாலிப் பேரரசின் மீதும், உலகத்தின் கவனத்தை திருப்ப வேண்டும் என்ற தீராத தாகத்தோடு காத்திருந்த மான்ஸா மூஸாவுக்கு ஒரு பொன்னான சிந்தனை தோன்றியது. கி.பி 1324 ஆம் ஆண்டிற்கான ஹஜ்ஜை பயன்படுத்தினார், மாலியில் ஹஜ் பயணக் கூட்டம் தயாராகி நின்றது. மான்ஸா மூஸா முதலில் ஒட்டகத்தில் அமர, அவருக்குப் பின்னால் 60,000 மக்கள் உயர்தரமான ஆடைகள் அணிந்து நின்றனர். மேலும் 60 ஒட்டகங்களில் 2000 கிலோ தங்கக் கட்டிகள், 300 பவுண்ட் எடை கொண்ட சுத்திகரிக்கப்படாத தங்கக் துகள்கள், 12 ஆயிரம் பணியாளர்கள் என்று ஒரு பெரும் நகரமே புனித மக்கா நோக்கி நகர்ந்து வரத் துவங்கியது.

            மக்கள் கூட்டம் கூட்டமாக கூடிநின்று மான்ஸா மூஸா அவர்களின் ஹஜ் பயணக் குழுவை வியந்து பார்த்தனர். செல்லுகின்ற வழியெல்லாம் வாழ்ந்த மக்களுக்கு இவர் தங்கக் கட்டிகளையும், தங்கக் துகள்களை இலவசமாக அள்ளி அள்ளிக் கொடுத்தார். வழியில் எந்த எந்த ஊரில் கூடாரம் அமைத்து தங்கினார்களோ அங்கேயெல்லாம் அல்லாஹ்வை வணங்கிட மஸ்ஜிதை கட்டினார். எகிப்தில் வாழ்ந்த மக்களுக்கு இவர் அள்ளிக் கொடுத்த தங்கத்திற்கு அளவே இல்லை. இப்படி இலவசமாக வாரி இறைத்த தங்கத்தினால் அடுத்த 13 ஆண்டுகளுக்கு மேல் எகிப்தில் தங்கத்திற்கு மதிப்பு இல்லாமல் போய் மக்கள் தங்கத்தை வெறுக்கும் அளவிற்கு போனதாம்.

      இஸ்லாமிய மார்க்கம் குறித்தும், அவர் வாரி வழங்கிய தங்கம் குறித்தும் தான் உலகம் முழுவதும் பேச்சாக இருந்தது. ஆப்பிரிக்காவே அதிர்ந்தது, ஐரோப்பா ஆச்சரியத்தில் மூழ்கியது. இஸ்லாமிய உலகமே இவருடைய ஹஜ் பயணத்தை பார்ந்து வியந்தது. இதனால் உலகம் முழுவதும் உள்ள வணிகர்கள் மாலியில் குவிந்தனர். மாலியில் வியாபாரம் பெரும் அளவில் பெருகத் துவங்கியது. 

      மாலிப் பேரரசை இஸ்லாமியக் கல்வியில் மிக உயர்ந்த பீடமாக உருவாக்க வேண்டும் என்ற வேட்கையில் மக்காவிலிருந்து திருப்பும் போது இஸ்லாமிய உலகின் தலை சிறந்த கல்வியாளர்களையும், கட்டிடக்கலை நிபுணர்களையும் மாலிக்கு அழைத்து வந்து, திம்புக்த்து நகரில் ஒரு பல்கலைக்கழகத்தைக் கட்டுவதற்கு உத்தரவிட்டார். அவர்களால் கட்டி முடிக்கப்பட்ட அந்த பல்கலைக்கழகம் தான் “ஜாமியா திம்புக்த்து” என்ற உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகம்.

      பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றும் மதரஷா பட்டதாரிகள் 5 வேளை தொழுகையை மட்டும் நிறைவேற்றி விட்டு மிகுதியான நேரத்தை வீணாக்குவதை கண்டார், பெரும் எண்ணிக்கையிலான மனித ஆற்றல் மற்றும் அறிவாற்றல் வினாகுவதை உணர்ந்தார். இமாம்கள் எஞ்சிய நேரத்தை பயனுள்ள வகையில் நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் மேன்மைக்கும் பயன்படுத்திட வேண்டும் என்று மூஸா அவர்கள் முடிவு செய்தார்.

     மாலிப் பேரரசு முழுவதும் உள்ள சிறிய அளவிலான குர்ஆன்  பாடசாலைகளை இணைத்து ஒரே பாடத் திட்டமாக, ஒரே பயிற்றுவிப்பு மற்றும் ஒரே கால அளவு முறையாக முதலில் மாற்றி அமைத்து, அதை உயர் கல்வி நிறுவனமான ஜாமியா திம்புக்த்துவில் இணைத்து முஸ்லிம்களின் உயர் கல்வியை வலிமையானதாக, உலகை வெல்லும் கல்வி முறையாக மாற்றினார். இதன் மூலம் மாலிப் பேரரசுலிருந்து  அறிவும் ஆற்றலும் பொருந்திய சமூக, அறிவியல், தொழில்நுட்ப, விஞ்ஞானிகளை உருவாக்கிட வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றி, இதற்காகவே ஜாமியாவின் பாடத் திட்டங்களை உலகத் தரத்திற்கு மாற்றி அமைத்தார்.
    
   இவருடைய திட்டத்தால் உலகம் முழுவதும் ஜாமியா திம்புக்த்துவின் கல்வித்திறன் எதிரொலித்தது. உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் மாலிப் பேரரசின் திம்புக்த்து நகர் நோக்கி கல்வி பயில வந்தனர். அவர் அன்று ஏற்படுத்திய புரச்சி இன்றைக்கும் மாலி என்றாலே “ஆப்பிரிக்காவின் இஸ்லாமிய கல்வியின் தலைமை பீடம்” என்று வரலாறு பதிவாக்கி வைத்துள்ளது.

      கி.பி 1330 இல் ஒரு இலட்சம் மக்கள் தொகை கொண்ட திம்புக்த்து நகரில் அமைத்திருந்த ஜாமியாவில் 25,௦௦௦ மாணவர்கள் கல்வி பயின்றார்கள். இப்பொழுதும் ஜாமியா திம்புக்த்து பெயல்பட்டு வருகிறது. அவர் மரணித்து 7௦௦ ஆண்டுகள் கடந்த போதிலும் மாலி என்றாலே இஸ்லாத்துடன் இணைந்த தொழிற்கல்வியின் தலைமைபீடம் என்று ஆப்ரிக்க மக்கள் தங்களது தங்கத் தலைவனைப் போற்றிக் புகழ்கின்றனர். இவரால் உயிரூட்டப்பட்ட மாலியின் வளர்ச்சி பணிகள் மற்றும் இஸ்லாமிய அழைப்புப் பணிகள் அடுத்து வந்த 150 ஆண்டுகளுக்கு மாலியை ஆப்பிரிக்காவின் தலைமை பீடமாக மாற்றியது.

     மான்ஸ மூஸா மரணித்து 12 ஆண்டுகள் கழித்து மாலிக்கு சென்ற உலகை சுற்றிய கடல் பயணி “இப்னு பதூதா”  தனது பயணக் குறிப்பில் “வலிமையான ஆட்சியாளராகவும், வளமிக்க நாட்டின் அதிபாராகவும், எதிரிகள் கண்டு நடுங்கிய மாவிரனாகவும், இறை பக்கியும், ஈகை குணமும் உடைய மனித நேயராக வாழ்ந்துள்ளார் மான்ஸ மூஸா. இவர் ஆட்சியில் மாலி முழுவதும் மக்களுக்கு பாதுகாப்பு, உயந்த நீதி கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இன்றும் கூட இவ்வுலகில் வாழ்ந்த பெரும் பானக்காரர்களில் இவரே முதலிடம்.


       நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும், இஸ்லாமிய அரசியல் முறையும் சொல்லி வளர்ப்போம். இவர்களுடைய வரலாறுகள் படிக்காமல் தேவையில்லாத மக்களுடைய வரலாறுகள் படிப்பது நமது நேரத்தை வீனாக்குவதற்கு சமம். இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!