Wednesday, September 16, 2015

தடையை நீக்கி அறிவியல் புரச்சியை ஏற்படுத்தியது இஸ்லாமா?

     இன்றைய நவீன முன்னேற்றமும் அதன் விளைவுகளும் தொழில் புரட்சியால் ஏற்பட்டதே. பூமியில் புதைந்து கிடந்த வளங்களை கண்டேடுத்து நிலக்கரியையும், கனிம பொருளை மனிதன் எடுத்தான், விரைத்து ஓடும் நீரிலிருந்து மின்சாரத்தை எடுத்தான், இப்படியாக இயற்கையிலிருந்து மனித முன்னேற்றத்திற்கு தேவையானவைகளை செய்தே தொழிற் புரட்சி ஏற்ப்பட்டது.

      இது போன்ற வளங்கள் ஆதி முதலே பூமியில் புதைந்து இறுக்க அவற்றை கண்டெடுத்து பயன்படுத்தி ஒரு மேம்பட்ட நாகரிகத்தை மனிதன் ஏன் உருவாக்கவில்லை? என்ன தான் காரணம்? வரலாறில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு காலக் கட்டத்திலும் மனிதன் இயற்கைக்கு தெய்விக தன்மை கூறி அதை வழிபட்டதே இதற்க்கு காரணமாக அமைகிறது.. கிரேக்கம், எகிப்து, ரோம், இந்தியா மற்றும் பாரசிகம் போன்ற அனைத்து பண்டைய நாகரிகமும் பல தெய்வ வணக்க வழிபாடுகளையே செய்தன. பூமி, நதிகள், மலைகள், சூரியன், நிலா போன்ற அனைத்தையும் மனிதன் கடவுள்களாக வணங்கி வழிப்பட்டான்.

     இப்படியாக இயற்கைகளையும், பல தெய்வ வழிபாடுகளில் மூழ்கி இருந்த மனித சமூகத்தை மாற்றி அமைத்து இயற்கைகள் ஒரு படைப்பினமே, அவற்றை வணங்க கூடாது என்று மனிதர்களுக்கு மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் பணி முஹம்மது (ஸல்) அவர்கள் (இஸ்லாமிய) காலத்திலும் அதை ஒட்டிய உத்தம கலீஃபாக்கள் காலத்திலும் வெற்றிகரமாக நடைபெற்றது.

    புதிய விஷயங்களை கண்டுபிடிக்கும் திறன் வாய்ந்த அறிஞர்கள் இஸ்லாத்திற்கு முன்பு வாழவில்லை என்று நாம் சொல்ல முடியாது. பல அறிஞர்கள் இஸ்லாத்திற்கும் முந்திய காலத்தில் வாழ்ந்தார்கள் ஆனால் அவர்கள் கண்டுபிடித்து வெளியிடுபவை, அன்றைய மக்களின், அரசர்களின் மூட நம்பிக்கைக்கும், தெய்வ வழிபாட்டிற்கும் எதிராக இருந்ததாலும், அவற்றை மக்கள் எதிர்த்ததாலும், புதுப்புது உண்மைகளையும், இயற்கையின் இரகசியங்களையும் ஆராய்ச்சி செய்ய முடியாமல் பல நூற்றாண்டுகளாக தடை செய்யப்பட்டது.
  
இவற்றை பில்லி, சூனியமெனவும், சாத்தானின் தூண்டுதல் என்று கூறப்பட்டதால். புதிய சிந்தனைகளுக்கு எவ்வித மதிப்பும், முன்னேற்றமும் இல்லாமல் போய் விட்டது.

     இஸ்லாமிய தொடக்க காலத்தில் இம்மாற்றம் மனிதர்களிடம் தோன்ற ஆரம்பித்தது என்றாலும், முறைப்படுத்தப்பட்ட சீரான முன்னேற்றம் கி.பி 832 இல் அப்பாஸிய ஆட்சிகாலத்தில் “பைத்துல் ஹிக்மா” நிறுவப்பட்ட பின்னரே உருவானது. ஸ்பெயினிலும், சிசிலியிலும் அரேபிய ஆட்சிகாலத்தில் இப்பணி வெகு உத்வேகத்துடன் தொடர்ந்தது. இறுதியில் உலகில் பெருப்பாலும் பகுதிக்கு பரவி, தொழில் புரட்சிக்குத் தூண்டுகோலாக இருந்தது.   
 
    இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னரே அறிவியல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மனப்பான்மை ஏற்ப்பட்டது. இந்த எழுச்சி தங்கு தடையுன்றி தொடந்து இன்றைய நவீன கண்டுபிடிப்புகள் வரை தொடர்கிறது. இஸ்லாம் மார்க்கம் வந்த பிறகே நாம் காணும் இந்த மனித வழ முன்னேற்றம் ஏற்பட்டது என்பதற்க்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் இப்போது வாழும் முஸ்லிம்களாகிய நான் அதை மறந்து வாழ்கிறோம். அறிவியல் புரட்சிக்கு காரணாமான நாம், இப்போது அதை பற்றி கவலை படாமல் வாழ்க்கிறோம். அதை மீண்டும் நமது கையில் எடுக்கும் காலத்தை எதிர்ப்பார்ப்போம். இன்ஷாஅல்லாஹ்!!!

   நிச்சயமாக, வானங்கள்பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (அல்-குர்ஆன் 3:190 )


      நாம் எந்த துறையை எடுத்து படித்தாலும் அதைக்கொண்டு உலக மக்களுக்கு பயனுள்ள விஷயங்களை நம்மால் உருவாக்கமுடியும் செய்ய முடியும். அல்லாஹ் குர்ஆனிலே அணைத்து துறைகளை பற்றியும் சொல்லி அதை ஆராய சொல்கிறான்.. இன்ஷாஅல்லாஹ் நாம் அனைவரும் முயற்சி செய்தால் இந்த உலகம் முஸ்லிம்களின் கையில் தவழும் நாள் வெகு துரைவில் இல்லை.

Tuesday, September 1, 2015

“வீரத்தளபதி தாரிக் பின் ஜியாத்” (கி.பி.711)

          நல்ல ஆட்சி வராதா? என்று மக்கள் ஏங்கினர், பக்கத்து பிராந்திய கவர்னர்கள் கூட இவனை ஒழிக்க யாரும் வரமாட்டர்களா என்று எதிர்ப்பார்த்த காலம். எந்த அளவு கொடுமையான ஆட்சி என்றால் அந்த நாட்டுக்கு செல்லும் மக்களின் பணம், பொருள் ஏன் கரப்பைக்கூட சூறையாடும் ஒரு கொடுமையான கவர்னர் தான் இந்த விசிகோத் மன்னன் ரோட்ரிக்ஸ்.

பக்கத்து கண்டமான ஆப்ரிக்காவில் அமைதியான இஸ்லாமிய ஆட்சி நடப்பதை பார்த்த அவர்கள் எங்கள் நாட்டுக்கு வந்த நியாயமான ஆட்சி செய்யுங்கள் என்று கேட்டுகொன்டத்தில் இணங்க விசிகோத் மன்னன் ரோட்ரிக்ஸ்க்கு எதிராக மொரோக்கோவில் அடிமை வம்சத்தில் பிறந்த பெர்பர் இனத்தை சேர்ந்த தாரிக் பின் ஜியாத் தலைமையில் வெறும் 7,000 படைவிரர்களுடன் சுமார் 1,00,000 எதிரி படைகளை வெற்றி கண்டு ஐரோப்பிய கண்டமே நடுங்கியது.

1.       வெற்றிக்கு பிறகு சுமார் 800 ஆண்டுகள் ஸ்பெயினை (அண்டலூசியவை) முஸ்லிம்கள் ஆட்சிபுரிந்தார்கள்.
2.       இஸ்லாமியர்களின் 800 வருட ஆட்சியில் இன்றைய ஸ்பெயின் பெயர் அல்-அந்தலூஸியா.
3.       தாரிக் பின் ஜியாத் அவர்கள் தங்கியதால் தான் இந்த இடத்துக்கு “ஜமல் அல் தாரிக்” என்று பெயர் வந்த்தது, அது காலப்போக்கில் ஜிப்ரால்டிஸ் என்று மாறிவிட்டது.
4.       இந்த 800 வருட இஸ்லாமிய ஸ்பெயினில் அறிவியல்ஆய்வுகளில் ஈடுபட்ட முஸ்லிம்கள் உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகளாக திகழ்ந்தார்கள்.
5.       அல்-அந்தலூஸியா (ஸ்பெயின்) முதல் இஸ்லாமிய கவர்னராக வீரத்தளபதி தாரிக் பின் ஜியாத் திகழ்ந்தார்.
6.       இந்த வரலாற்று சிறப்புமிக்க போரை “குவாடிலட் போர்” என்று அழைக்கப்படுகிறது.
7.       இந்த போரில் முஸ்லிம் தரப்பில் 3,000 அதிகமானோர் சாஹிதனார்கள்.

 12ஆம் நுற்றாண்டுக்கு பிறகு முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்பட்ட கோஸ்டி மற்றும் குழு சண்டையை பயன்படுத்தி கிருஸ்துவர்கள் மீண்டும் ஸ்பெயின்னை கைப்பற்றினார்கள் அந்த அளவு என்றால் கி.பி.1492 க்கும் பிறகு ஒரு முஸ்லிம் கூட இல்லை என்ற அளவுக்கு.


வீரத்தளபதி தாரிக் பின் ஜியாத் அவர்களின் தியாகம் நமக்கு ஒரு முன்மாதிரி. பிர்க்கலத்தில் ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்களின் வாழ்வு நமக்கு ஒரு படிப்பினை மட்டுமல்ல, அது ஒரு எச்சரிக்கையும் கூட...!

Saturday, August 15, 2015

இந்திய முஸ்லிம்களின் தியாகம் மறக்க மட்டும்தானா..?

          1929 டிசம்பரில் லாகூர் அருகில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் “இந்தியாவிற்கு பூரண சுதந்திரமே எங்கள் லட்சியம்” என தீர்மானம் நிறைவேற்ற பட்டு, சுதந்திரம் கிடைக்கும் வரை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் நாளை பூரண சுயராஜ்ஜிய தினமாக கொண்டாடுவதென உறுதி ஏற்கப்பட்டது. அதனால் தான் இந்திய அரசியலமைப்பு சட்ட நடைமுறைக்கு வர ஜனவரி 26 தேர்வு செய்யப்பட்டது.

மறக்கப்பட்ட ஹள்ரத் மொஹானி:
      இத்தீர்மானம் நிறைவேற்றுவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1921ம் ஆண்டு டிசம்பரில் அஹமதாபாத்தில் முஸ்லிம் லீக் மாநாட்டில் மவ்லானா ஹள்ரத் மொஹானி, வெள்ளையர் வெளியேற வேண்டும் இந்தியாவிற்கு பரிபூரன சுதந்திரம் கிடைக்க வேண்டும் என முழக்கமிட்டார். இந்த தீர்மானம் இப்போது வேண்டாம் என்று காந்தி கேட்டுகொண்டார். ஆனால் பூரண சுதந்திரம் கொள்கையில் உறுதியுடன் இருந்த மொஹானி, ‘நமது லட்சியம் இந்தியாவிற்கு பூரண சுதந்திரமே, எவருடைய மேலாதிக்கத்தின் அனுமதியோ, அறிவுறுத்தலோ இல்லாமல் நம்மை நாமே ஆள வேண்டும்’ என்றார்.

      பிரிட்டிஸ் ஆட்சிக்கெதிராக மக்களை புரட்சி செய்ய தூண்டியதாக இவரை இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்று ஆக்கபூர்வமாக செயல்பட்டது அரசியலில் முஸ்லிம்களுக்கு தனித்தொகுதி வேண்டும் என்று வாதாடியவர் ஹஜ்ரத் மொஹானி. அரசியல் நிர்ணய சபை தேர்தலில் டாக்டர் அம்பேத்கருக்கு காங்கிரஸ் வாய்ப்பளிக்காத நிலை கண்டு அதிர்ச்சியடைந்த முஸ்லிம் லீக் தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவரை வங்காளத்திற்கு அழைத்து வெற்றி பெற செய்தார் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

இந்தியாவிற்கு விடுதலை தா அல்லது உன்னுடைய சுதந்திர நாட்டில் என் உடலை அடக்கம் செய்ய இடம் தா; அடிமை நாட்டில் நான் மரணிக்க விருப்பவில்லை என இங்கிலாந்தில் வீர முழக்கமிட்டார் மௌலான முஹம்மது அலி ஜவஹர்.
     
இந்திய விடுதலைப் போரில் வீரியத்தை ஏற்படுத்தியதோடு அதை கிளர்ச்சியாக்கிய பெருமை கிலாபத் இயக்கத்தை தான் சாரும். கேரளத்தில் மாப்பிள்ளை புரச்சியும், கி.பி. 1857ல் சிப்பாய் கலகம் என கூறப்படும் முதல் சுதந்திர போரையும் முஸ்லிம்கள் தான் நடத்தினார்கள் என்பதற்காக ஆங்கிலயோர்களால் முஸ்லிம்கள் கொன்று குவிக்கபட்டனர்.

      இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் 14000 பேர் தூக்கில் போட்டதும், நெருப்பு குண்டங்களில் இஸ்லாமிய மத அறிஞர்கள் தூக்கி எறியப்பட்ட செய்திகள் இருட்டடிப்பு செய்யபட்டாலும் “தாமசனை” போன்ற வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருப்பதை எப்போது படித்தாலும் கண்ணீர் சொட்டுகிறது.

மறைக்கப்பட்ட ஐவேரி சகோதரர்கள்:
     ஆண்டுதோறும் ஜனவரி 9ஐ மையமாக வைத்து வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு நடத்தப்பட காரணம் காந்திஜி 1915 ஜனவரி 9 அன்றுதான் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திருப்பினார் என்பதால்தான். ஆனால் ஏன் அவர் தென்னாப்பிரிக்கா சென்றார் என்று நம்மில் யாருக்கும் தெரிவதில்லை.

      குஜராத்தின் போர் பந்தரை சேர்ந்த அப்துல்லா ஆதம் ஐவேரி, அப்துல் கரீம் ஆதம் ஐவேரி சகோதரர்கள் 1865 களில் தாதா அப்துல்லா அன்ட் கம்பெனி என்ற பெயரில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரை தலைமையாக கொண்ட கப்பல் கம்பெனிக்கு 105 பவுண்ட் சம்பளத்திற்க்கு அழைத்து செல்லப்பட்டார். 1894 மே  22ம் தேதி தாதா அப்துல்லா கம்பெனியின்தான் நேட்டால் இந்தியா காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு அதன் தலைவராக அப்துல்லா ஐவேரியும், செயலாளராக காந்தியும் செயல்பட்டார். அதன் பிறகு தான் 1906 மே முதல் இந்திய சுதந்திரத்திற்காக காந்திஜி குரல் கொடுக்க ஆரம்பித்தார்.


இன்று இந்துத்துவ அமைப்புகளால் அதிகம் விமர்சிக்கப்படும் தாருல் உலூம் தேவ்பந்த் மதரஷாவின் முதல் மாணவரான ஷைஹுல் ஹிந்த் மௌலான மஹ்மூதில் ஹசன் ஹஜ்ரத் அவர்கள் தான் வெள்ளையர்களை எதிர்த்து அகிம்சை வழியில் போராட முடிவெடுத்த போது அதற்க்கு தலைமை பொறுப்பேற்க காந்தியை கை காட்டினார். இது போன்று பல உண்மை வரலாறுகள் வளரும் தலைமுறைக்கு சொல்லுவது நமது கடமை என்பதை நாம் அதிகமாக மறந்துவிடுகிறோம்.                                                                                                                                                 Source: Kayal Makbul- piraimedai

Saturday, August 1, 2015

ஜிப்ரடில் மலை அடிவாரம் (கி.பி. 711 ஜூலை 13)

      இன்று (கி.பி. 711. ஜூலை 13) தாரிக் இப்னு ஜியாத் அவர்கள் இன்றைய ஸ்பெயின் உள்ள ஜிப்ரடில் மலை அருகில் போர் துவங்குவதற்கும் சிறிது நேரத்திற்கு முன்பாக ஆற்றிய உரை.

அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் துணை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.
       “எனதருமை வீரர்களே! உங்களுக்கு பின்னால் கடல் இருக்கிறது. முன்புறம் நவீன ஆயுதங்களோடு எதிரிகள் அணிவகுத்து நிற்கின்றனர். அல்லாஹ்வின் மீதும், தனித்துவமிக்க உங்களின் தன்னம்பிக்கையின் மீதும், மன உறுதிப்பாட்டின் மீதும், தான் நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக நிற்கிறீர்கள். எதிரிகளை வீழ்த்தி உடனடி வெற்றியைப் பெறவில்லை என்றால் உங்களது நம்பிக்கையான எதிர்க்கலாம் பாழாகிவிடும்.

       எதிரிகளின் உள்ளங்களில் பதற்றமும், பீதியும் நிறைந்துள்ளது. அவர்கள் வயிறு முட்டக் குடித்துவிட்டு நிற்கின்றனர். வீரர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அதிகமதிகம் வணக்கங்களில் ஈடுபடுங்கள். அல்லாஹ்விடம் மனமுருகி துஆ செய்யுங்கள். “ஷஹிது” என்ற உன்னதமான நிலையை அடைய மனதில் “நிய்யத்” செய்யுங்கள்.

       இந்தப் போரில் உங்களை வழிநடத்தும் நான் உங்களில் முதல் நபராக உங்கள் எதிரிகளை சந்திப்பேன் என்று உறுதி கூறுகிறேன். உங்களுக்கு ஏற்ப்படும் எந்த அபாயமும் எனக்கும் சொந்தமானது. உங்களில் இருந்து எந்த சுழலிலும் நான் விலகி செல்ல மாட்டேன். இது அல்லாஹ்வின் மீது ஆணை! சத்தியத்தை நிலைநிறுத்துவதே நமது குறிக்கோள்.

       உங்களில் யாராவது உயிருக்கு பயந்து புறமுதுகிட்டு ஓடினால் அவர்களுக்கு பரிசு மரண தண்டனையே! இன்ஷாஅல்லாஹ் போரில் வெற்றி பெரும் நமக்கு இந்த நாட்டில் சிறப்பான பரிசுகள் காத்திருக்கின்றன. அமீருல் முஃமினின் கலிஃபா வலிது இப்னு அப்துல் மாலிக் அவர்கள் தங்களின் அரபு இன வீரர்களில் இருந்து தனித்திறன் பெற்ற உங்களை இந்த புனிதப் போரில் முதல் நிலை வீரர்களாகத் தேர்வு செய்துள்ளார். அல்லாஹ்வின் வார்த்தைகள் ஐரோப்பிய மண்ணில் ஓங்கி ஒலித்திட வேண்டும் என்பதே கலிஃபா அவர்களின் விருப்பம்.

விஷிகோத் மன்னன் ரோட்ரிக்ஷை நேருக்கு நேர் சந்திக்கும் முன்பாக நான் விழ்ந்தால் எனது இந்த உத்தரவுகளை இரட்டிப்பாக்கி வீறுகொண்டு எழுந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை இந்த மண்ணில் நிலை நிறுத்துங்கள். ரோட்ரிக்ஸ் விழ்ந்தால் அவனோடு அவனது வீரர்களையும் வெற்றி கொள்வீர்கள்.”

      என்று வீரத்தளபதி தாரிக் பின் ஜியாத் அவர்கள் உணர்ச்சி பொங்க உரை நிகழ்த்தி முடித்தவுடன் அதனால் உரமேற்றபட்ட வீரர்களின் உள்ளத்திலிருந்து “அல்லாஹு அக்பர்” “அல்லாஹு அக்பர்” “அல்லாஹு அக்பர்” என்ற உயிரின் உயிரான முழக்கம் விண்ணையும் மண்ணையும் அதிரச் செய்தது.


இவரைபோன்ற இஸ்லாமிய போர் தளபதிகளின் வரலாறுகளை நமது பிள்ளைகளுக்கு சொல்லி அவர்களை அறிவுஜீவிகளாக வளர்த்து இஸ்லாமிய உண்மையான வரலாறுகளை அழியாமல் காப்போம். இன்ஷாஅல்லாஹ்...!

Friday, July 17, 2015

சீன முஸ்லிம்களின் வாழ்வும் வரலாறும்…!

   சீனாவின் வடமேற்கு எல்லைப் புற மாகாணமாக சிங்ஜியாங்கின் தலைநகரான உரும்கியில் 2010 ஜூலை மாதம் 5 ஆம் தேதியன்று இரண்டு இனங்கள் கொடூரமான ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் 184 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

                உலக அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய அச்சம்பவம் குறித்து சற்று வரலாற்றுப் பின்னணியோடு அலசிப் பார்த்தால் தான் உண்மைச் செய்தி வெளிவரும். இல்லையென்றால் வலிமையான ஊடகங்களை வைத்திருப்போர் சொல்வதே உண்மையாகிவிடும். சீன அரசு கொடுக்கின்ற செய்திகளைத்தான் உலக பத்திரிக்கைகளும் வெளியிட்டு வருகின்றன. இதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டத்தை சீன அரசு தீட்டி வருகிறது என்ற செய்தி பின்புறம் ஒளிந்துள்ளதை எந்த ஏடுகளும் வெளிக்காட்டவில்லை.

சீனாவில் இஸ்லாம் அறிமுகம்:
கி.பி. 650 இல் உதுமான் (ரலி) அவர்களின் இஸ்லாமிய அரசின் போது உலகில் மிகப்பெரும் பேரரசுகளின் ஒன்றான சீனாவிற்கு ஸஅத் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசின் தூதராக அனுப்பப்பட்டார்கள். தான் ஏற்கனவே வந்துயிருந்தாலும் அரபு வணிகர்களின் அழைப்புப் பனியின் காரணமாக சீனாவின் பல பாகங்களிலும் இஸ்லாம் ஆழமாக வேருர்று இருந்ததை கண்டார்கள். சீனாவில் வாழ்ந்த முஸ்லிம்களை ஒருங்கிணைத்து இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பை உருவாக்கிடும் விதமாக டாங் பேரரசின் மன்னர் குவாசானகிடம் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கான அனுமதி கேட்டு “கேன்டன்” நகரில் அன்றைக்கு கட்டப்பட்ட பள்ளிவாசல் தான் இன்றைக்கும் அந்நகரில் உள்ளது.

அதன் பிறகு அப்பாஸியாக்கள் உமையாக்கள் காலத்திலும் சீனாவோடும் டாங் பேரரசோடும் முஸ்லிம்களுக்கு மிக நெருக்கமான நட்பும் வியாபார தொடர்புகளும் இருந்தன. அன்றைய உலகின் மிகப் பெரிய வியாபார கேந்திரமாக விளங்கிய “சில்க்ரோடு” என்ற பகுதியில் வியாபாரம் செழிப்பாக நடைபெற்றது. ஐரோப்பா, அரபுநாடுகள், மத்திய ஆசியா மற்றும் சீனா வரையிலான வியாபாரத் தொடர்புகளுக்கு முக்கியக் கேந்திரமாக சீனாவில் தற்போது பிரச்சனைக்குள்ளாகி இருக்கும் இந்த சிங்ஜியாங் பகுதிதான் இருந்தது.

1949 வரை சுயாட்சி பெற்ற தனிநாடாக சோவியத் யூனியனின் ஆதரவோடு கிழக்கு துருக்கிஸ்தான் என்ற பெயரில் விளங்கி வந்தது இன்றைய சிங்ஜியாங் மாகாணம். 1949ல் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் மூலம் சிங்ஜியாங் பகுதியை தன்னோடு இணைத்துக் கொண்டது சீன குடியரசு. இந்த இணைப்பை ஏற்காத சிங்ஜியாங் மக்கள் சீன குடியரசின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அன்றிலிருந்து இன்று வரை கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற பெயரில் விடுதலைக்காக போராடி வருகிறது.

மோதலுக்கான காரணம்:
1949 ஆம் ஆண்டு கணக்கு படி கிழக்கு துர்கிஸ்தானாக இருந்த சிங்ஜியாங் பகுதியில் துருக்கிக் மொழி பேசும் முஸ்லிம் இனங்களும், மங்கோலிய இன முஸ்லிம்களும், ஈரானிய இன முஸ்லிம்களும், சைனிஸ் ஹாய் இன முஸ்லிம்களுமாக 95 விழுக்காடு முஸ்லிம்கள் தான் இந்த மாகாணத்தில் வாழ்ந்தனர். இதில் உய்குர் இன முஸ்லிம்கள் தான் பெரும்பான்மையினர்.

சீனாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 40 விழுக்காடும், எண்ணெய் வளமும், எரிவாயு வளமும் 60 விழுக்காடும், பருத்தி, கால்நடை வளர்ப்பு, காற்றாலை, கம்பளி, வேளாண்மை என்று சீன பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிங்ஜியாங் மாகாணம் திகழ்கிறது. இப்படிப்பட்ட மண்ணிற்கு சொந்தமான மக்களின் பெரும்பான்மை எண்ணிக்கையை குறைத்தால் தான் அங்கே உள்ள வளங்களை சுரண்ட முடியும் என்ற காரணத்தால் புதிதாக தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவற்றில் முஸ்லிம்களைப் புறக்கணித்து விட்டு முஸ்லிமல்லாத ஹான் இன மக்களை சிங்ஜியாங் பகுதியில் குடியமர்த்தி அவர்களை பெரும் பதவியில் அமர்த்தியது சீன அரசு.

உய்குர் முஸ்லிம்களிடம் உள்ள கைவினை பொருட்கள் தயாரிக்கும் திறனை பயன்படுத்தி விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உய்குர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சிங்ஜியாங் பகுதியில் தொடங்காமல் மத்திய சீனாவில் உள்ள ஒரு மாகாணத்தில் தொழிற்சாலைகளை உருவாக்கி இந்த மக்களை சிங்ஜியாங் மாகாணத்திலிருந்து மத்திய சீனாவிற்கு வேலை தேடி புலம் பெயர செய்தது சீனா அரசு. சூழ்ச்சியை அறியாத உய்குர் முஸ்லிம்கள் லட்சக்கணக்கில் வேலை தேடி புலம் பெயர்ந்தனர்.

1947ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 95 விழுக்காடாக இருந்த முஸ்லிம்கள் 2004 கணக்கெடுப்புபடி 45 விழுக்காடாகவும், ஹான் இனத்தவர் 45 விழுக்காடாகவும் மாறிப்போயினர்.

வேலை தேடி சீனாவின் மத்திய மாகாணத்திற்கு குடிபெயர்ந்த முஸ்லிம்கள் உலகளவில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலின் காரணமாக ஏறக்குறைய ஒரு லட்சம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அதிர்ச்சியுற்ற முஸ்லிம்கள் தங்களது சொந்த மண்ணிற்கு வந்தபோது தான் சிங்ஜியாங் மாகாணத்தில் எல்லா முக்கிய பொறுப்புகளிலும் ஹான் இனத்தவர் அமர்ந்திருப்பது தெரிந்தது. ஒரு பக்கம் வேலை வாய்ப்பற்று வறுமையில் மண்ணின் மைந்தர்கள் வாட, மறுபக்கம் அவர்களின் வளங்களை எல்லாம் ஹான் இனத்தவர் சுரண்ட,  இரு சமூகத்தாருக்கும் சம வாய்ப்பளிக்கவேண்டிய சீன கம்யூனிஸ்டு அரசு ஹான் இனத்தவர் பக்கம் ஒரு தலைபட்சமாக நடக்க, மோதல் முற்றி கலவரமாகி உயிர்பலி ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்திகள் எல்லாம் அவ்வளவு எளிதாக வெளியே வருவதில்லை.

பாலஸ்தீனத்தில் அரபு மக்களின் நிலப்பரப்பை ஆக்கிரமித்து யூதர்களை குடியமர்த்தி இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியது போல, சீன அரசு மண்ணின் மைந்தர்களைப் புலம் பெயர செய்து பிற இன மக்களை குடியமர்த்தி வளங்களை தேசியம் என்ற பெயரால் சுரண்டி வருகிறது. போதாக் குறைக்கு உய்குர் மக்களின் மொழியான துருக்கிக் என்ற அரபி வரி வடிவம் கொண்ட மொழியையும் சிதைத்து அவர்களது கலாச்சாரத்தையும் சிதைத்து வருகிறது. தொடர்ந்து சீன அரசிற்கு எதிராக புரட்சிகள் சிங்ஜியாங் பகுதியில் நடைபெற்று வருகின்றன.  இன்ஷாஅல்லாஹ் அது ஒரு நாள் நிச்சயம் வென்றே தீரும்!.


         நமது பிள்ளைகளுக்கு இது போன்று இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களையும், அக்கரமங்களையும் செல்லி நேர்மையான இஸ்லாமிய அரசியல் முறைகளை செல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Friday, July 3, 2015

திருகுர்ஆன் தமிழாக்கப் பணி – ஒரு வரலாற்றுப் பார்வை!

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்:

       பெரும்பாலான உலக மொழிகளில் உலகப் பொதுமறையாம் திருக்குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதன் முதலில் சிரியாக் (சுர்யானீ) மொழியில்தான் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டது. ஹிஜ்ரீ முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (கி.பி. 7 நூற்றாண்டின் துவக்கத்தில்) முஸ்லிமல்லாத ஒருவரால் சிரியாக் மொழியில் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டது. அடுத்து பெர்பரீஸ் மொழியிலும், அதையடுத்து பாரசீக மொழியிலும் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டது.

      இந்திய மொழிகளில் உருது, ஹிந்தி, குஜராத்தி, சிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளிலும் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1. மௌலானா, ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி:
      தமிழில் முதன் முறையாகத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு 1943ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை நாடறிந்த மார்க்க மேதை அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டார்கள். 1876ஆம் ஆண்டு பிறந்த மௌலானா அவர்கள், 1906ல் வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் மௌலவி பட்டம் பெற்றார்.

     1929ஆம் ஆண்டு திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான ‘அல்பகரா’ அத்தியாயத்திற்கு மட்டும் விரிவுரையுடன் மொழிபெயர்ப்பு வெளியிட்டார்கள். பின்னர் முழுக் குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிட எண்ணி, வேலூர் பாக்கியாத்தில் சில மாதங்கள் தங்கி, அங்குள்ள பெரிய மார்க்க அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்று ‘தர்ஜுமத்துல் குர்ஆன் பி அல்த்தஃபில் பயான்’ என்ற பெயரில் 1943ஆம் ஆண்டு முழுமையான மொழிபெயர்ப்பு வெளியிட்டார்கள்.

2. ஜான் டிரஸ்ட்:
     அடுத்து சென்னை டாக்டர் எஸ். முஹம்மத் ஜான் அவர்களால் 1983ல் ‘குர்ஆன் மஜீத்’ எனும் பெயரில் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. பின்னர் டாக்டர் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட ஜான் டிரஸ்ட் இந்த மொழி பெயர்ப்பைத் தொடர்ந்து வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளது.

    ஆங்கிலத்தில் வெளிவந்த யூசுப் அலீ அவர்களின் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, கம்பம் மௌலவி, ஸதக்கத்துல்லாஹ் பாகவி, எம். அப்துல் வஹ்ஹாப் M.A. Bth ஆகியோரின் ஒத்துழைப்பால் இந்த மொழிபெயர்ப்பு வெளியானது. 

3. அஹ்மதிய்யா மொழிபெயர்ப்பு:
      ‘திருக்குர்ஆன் (அரபி மூலத்துடன் தமிழாக்கம்)’ என்ற பெயரில் 1989ஆம் ஆண்டு இங்கிலாந்து ‘இஸ்லாம் இண்டர்நேஷனல் பப்ளிகேஷன்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தில் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று வெளியானது. இது அஹ்மதிய்யா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் எழுதிய ‘தஃப்சீர் ஸஃகீர்’ எனும் உர்து விளக்கவுரையை அடிப்படையாகக் கொண்டு மௌலவி, முஹம்மத் அலி என்பவரால் எழுதப்பட்டது.

4. திரீயெம் பிரிண்டர்ஸ்:
       ‘குர்ஆன் தர்ஜமா’ என்ற பெயரில் 1992ஆம் ஆண்டு திரீயெம் பிரிண்டர்ஸ் நிறுவனத்தாரால் தமிழ் மொழி பெயர்ப்பு ஒன்று வெளியானது. மௌலானா, M.அப்துல் வஹ்ஹாப் M.A. B.Th மௌலானா, K.A. நிஜாமுத்தீன் மன்பஈ உள்ளிட்ட அறிஞர்களால் இந்த மொழி பெயர்ப்பு எழுதப்பட்டது.

5. சஊதி மொழிபெயர்ப்பு:
      சஊதி அரபிய்யா அரசாங்கம் சார்பாக ‘சங்கை மிக்க குர்ஆன்’ எனும் பெயரில் 1992ஆம் ஆண்டு ஒரு மொழிபெயர்ப்பு வெளிவந்தது. இந்த மொழி பெயர்ப்புப் பணியை மௌலவி, ரி. முஹம்மத் இக்பால் மதனீ அவர்கள் தலைமையில் இலங்கை மார்க்க அறிஞர்கள் குழு ஒன்று மேற்கொண்டது. இது ஓர் இலவச வெளியீடாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

6. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்[IFT]:
      மௌலானா, சையித் அபுல் அஃலா மௌதூதி அவர்களின் உர்து மூலத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் அமைப்பால் 1996ஆம் ஆண்டு ‘திருக்குர்ஆன் (மூலம், தமிழாக்கம், விளக்கவுரை)’ என்ற பெயரில் அழகான தமிழில் திருக் குர்ஆன் மொழிபெயர்ப்பு வெளியானது.

     சரளமான நடை, நல்ல தமிழ், அத்தியாயங்கள் ஒவ்வொன்றுக்கும் முன்னுரை, அடிக்குடிப்பு விளக்கம் ஆகியவற்றால் இந்த மொழிபெயர்ப்புத் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது.

7. பஷாரத் பப்ளிஷர்ஸ்:
     சென்னை பஷாரத் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தார் 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ‘தர்ஜமா அல்குர்ஆனில் கரீம்’ எனும் பெயரில் ஒரு மொழிபெயர்ப்பு வெளியிட்டனர். இதை திண்டுக்கல் மௌலவி, அ. சிராஜுத்தீன் நூரீ அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இதில் திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பெற்ற பின்னணி நிகழ்வுகள் இடம்பெற்றிருப்பது சிறப்பு அம்சமாகும்.

8. மூன் பப்ளிகேஷன்ஸ்:
     2002 டிசம்பரில் சென்னை மூன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தார், ‘திருக்குர்ஆன்’ எனும் பெயரில் ஒரு மொழிபெயர்ப்பு வெளியிட்டனர். மௌலவி, பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதியுள்ள இந்த மொழிபெயர்ப்பு 400 விளக்கக் குறிப்புகளுடன் அமைந்துள்ளது. 

     இவையன்றி திருச்சியிலிருந்து பேராசிரியர், பா. தாவூத் ஷா அவர்கள் எழுதி வெளியிட்ட ஒரு தமிழ் பெயர்ப்பும்  வந்துள்ளது.

    இந்த தகவல்கள் சென்னை ரஹ்மத் அறகட்டளையில் பணிபுரியும் முஹம்மது கான் பாகவி அவர்களின் கட்டுரையுள் இருந்து எடுத்தது. இன்னும் குர்ஆன் விளக்கவுரை முழுவதும் தமிழில் வரவில்லை என்பது வருத்தமான செய்திதான்.

Thursday, June 18, 2015

ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த் ( கி.பி.1563 - கி.பி 1624 )

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

       அக்பரின் மார்க்க விரோதமான ஆட்சி காலத்தில் சிர்ஹிந்த் என்ற ஊரில் கி.பி.1563  பிறந்து தனது தந்தை மூலமாக மார்க்க அறிவுகளை பெற்றதோடு தனது 17 வயதுக்குள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து அத்துடன் தப்சீர் மற்றும் ஹதிஸ் கலையில் சிறந்து விளங்கினார். அதன் பிறகு தர்க்கம், தத்துவம், இறையியல் போன்ற கலைகளையும் கற்றார். 

                இவர் அக்பரின் மோசமான ஆட்சி காலத்தில், அக்பரின் கண்டு பயந்தவர்களுக்கு மத்தியிலேயே வளர்ந்தார். அவர் தம்மைச் சூழ்ந்து வளர்ந்து வந்த தீமைகளைத் தடுத்து நிறுத்தச் சக்தியற்றவராக இருந்தபோதும் ஈமானில் உறுதியானவராகவும், செயலில் சிறந்தவராகவும் விளங்கினார். அத்துடன் மற்றவர்களையும் நேர்வழி நடக்கத் தூண்டிக் கொண்டிருந்தார்.

      ஷேக் அஹமத் அவர்கள் பல்வகை ஆற்றல்களும் திறமைகளும் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். அக்காலத்தில் மலிந்திருந்த சீர்கேடுகேளுக்கு முற்றுப்புள்ளியிட்டு ஷரீஅத்தை, மார்க்கத்தை மேலோங்கச் செய்ய மனவுறுதியோடு எதிர்த்து நிற்க முன்வந்த ஒரே மனிதர் “ஷேக் அஹ்மத்” அவர்கள்தான். அரசாங்கக் கொள்கைகளைப் பலமாக எதிர்த்து உண்மையான சமயநெறிக்குப் புத்துயிரளிக்கப் பெருமுயற்சி செய்தார். அக்கால தீய போக்குகள் அனைத்தையும் அவர் எதிர்த்துப் போராடியதோடு ஆட்சியாளர்கள் விரும்பாத சரியான மார்க்கச் சட்டங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

      அக்பரின் இறப்புக்கு பிறகு அவரின் மகன் ஜஹாங்கீருக்கு “அஹமத் சிர்ஹிந்த்” அவர்கள் தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்ய மறுத்தார் என்பதற்காக அவரைக் குவாலியர் கோட்டையில் சிறையிலிட்ட அதே ஜஹாங்கீர் “ஷேக் அஹ்மத்” அவர்களின் மார்க்க விளக்கத்தின் பயனாக அவரின் மாணவரானர். தம் புதல்வரை மார்க்க கல்வி கற்பதற்காக “ஷேக் அஹ்மத்” அவர்களிடம் ஒப்படைத்தார். இந்தப் புதல்வர் தான் பிற்காலத்தில் ஷாஜஹான் என்ற பெயரில் முடிசூட்டப்பட்டார். இறுதியில் தீமைகளை ஒழித்துக் கட்டுவதில் அவர் வெற்றி பெற்றார்.  

      இஸ்லாத்தை மரியாதைக் குறைவாகவும் கேவலமாகவும் நடத்திய அரசாங்கத்தின் மனப்பான்மை இப்பொழுது இஸ்லாத்தை மதித்து நடக்கும் வகையில் மாற்றமடைந்தது. அரசவைச் சட்டகர்த்தாக்கள் புனைந்த புதுக் கோட்பாடுகளும், சட்டவிதிகளும் கொண்ட அக்பரின் ‘தீனே இலாஹி’ என்ற மதம் மறுபடியும் எழ முடியாதவாறு முடக்கப்பட்டது. இஸ்லாமியக் கட்டளைகளுக்கு எதிரான எல்லாத் திருத்தங்களும், எதிர்ப்பு சட்டங்களும் தாமகவே ரத்தாகிச் செல்லுபடியாகாதவையாகி விட்டன என்று அறிவிக்கப்பட்டது. ஆட்சி முறை முடியாட்சியாகவே இருந்ததெனினும் சமயக்கலைகளையும் ஷரீயத் சட்டங்களையும் பொறுத்தவரை அரசாங்கத்தின் மனப்பன்மை சகிப்புத் தன்மையும் மரியாதையும் உள்ளதாக மாறிற்று.

      ஷேக் அஹ்மத் அவர்கள் இந்தியாவின் முஸ்லிம் அரசாங்கம், முற்றாக ‘ஜாஹிலியத்தின்’ (அறியாமையின்) கைகளுக்கு மாறுவதை தடுத்தது மட்டுமின்றி, ஏழாம் நூற்றாண்டிலேயே இந்திய நாட்டில் இஸ்லாத்திற்கு எதிராக கிளம்பிய இயக்கத்துக்கு நிரந்தர முற்றுப் புள்ளியிட்டார்.

     அதைவிட மிகப்பெரிய சாதனை ‘அவ்ரங்கசீப்’ எனும் அரசக் குடும்பத்து மாணவனை உருவாக்கி விட்டு சென்றார். ஷரீஅத்தை, மார்க்கத்தை ஒழித்துக்கட்டும் செயலில் ஈடுபட்டவருமான அக்பரின் கொள்ளுப் பேரரான ‘அவ்ரங்கசீப்’  இஸ்லாத்தின் பாதுகாவலர் ஆனார்.

      நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற மார்க்க அறிஞர்களின் வரலாறுகளையும், அவர்கள் மார்க்கத்திற்காக செய்த தியாகங்கள், இவர்கள் செய்த சாதனைகள் போன்ற அனைத்தையும் சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Wednesday, June 3, 2015

அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் எளிமையான ஆட்சி

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

       பெருமானார் நபி (ஸல்) அவர்களின் மறைவு, இறுதி நபித்துவத்தை நிறைவு செய்தது. அது மட்டுமின்றி நபித் தோழர்களின் கிலாபத் ஆட்சிக் காலத்தையும் தோற்றுவித்தது. நபி (ஸல்) பின் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். நபி (ஸல்) வாழ்ந்து காட்டிய அதே எளிமையில் ஆட்சி முறையை நடத்தினார்கள்.

      மதீனாவை ஆண்ட அபூபக்கர் (ரலி) அவர்கள், ஒரு முறை முதுகில் சில துணி மூட்டைகளைச் சுமந்தவர்களாக மதீனாவின் கடை வீதியில் சென்று கொண்டிருந்தார். அதை பார்த்த உமர் (ரலி) அவர்கள், “தாங்கள் எங்கு செல்கிறீர்கள்? உங்கள் முதுகில் என்ன மூட்டை?” என்று வினவினார்கள்.
     “உமரே! கடை வீதிகளில் இந்த உடைகளை விற்று வரச் செல்கிறேன்” என்றார்.
  “ஏன்? ஆட்சிப் பொறுப்பில் ஆயிரம் வேலைகள் இருக்கும் போது இப்படி வியாபாரம் செய்து தங்களுடைய நேரத்தை வீணடிப்பது எனக்கு நியாயமாகப் படவில்லை” என்று உமர் ஆவேசமாக சொன்னார்.

     அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள், உமரே! பொறுமை கொள்ளுங்கள். நான் ஆட்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தினால், என்னை நம்பியிருக்கிற குடும்பத்திற்கு யார் பொறுப்பேற்பது? எங்களின் அன்றாடத் தேவைகளை யார் நிறைவேற்றுவது? அதற்காகத்தான் பழைய வியாபாரத்தில் ஈடுபடுகிறேன் என்றார்கள்.

     அப்படியானால் தாங்கள் அரசாங்க கஜானாவிலிருந்து வேலை செய்வதற்கான எந்தப் பயனையும் அனுபவிப்பதில்லையா? என்று உமர் வினவினார்கள்.

      நிச்சயமாக இல்லை. நபி (ஸல்) அவர்கள் அரசாங்க கஜானாவில் இருந்து தன் சுய தேவைக்காக எதனையும் பயன்படுத்துவதில்லை. தனக்கு மட்டுமல்ல, தன் வம்சாவழியினர் அனைவருக்குமே அதை “ஹராம்” என்று தடை செய்திருக்கிறார்கள். அவர்கள் நடைமுறைப்படுத்தாத ஒரு வழிமுறையை எப்படி நான் கையாள்வேன்? என்றார் அபூபக்கர் (ரலி).

      பின்னர், இது தீவிரமாகச் சிந்திக்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல் தீர்க்கப்படவேண்டிய விஷயமாகவும் எனக்குப்படுகிறது. அரசாங்க வேலை செய்வதற்கெனவே ‘பைத்துல்மால்’ என்ற அரசுப் பணம் உள்ளபோது அதை எப்படித் தாங்கள் மறுக்க முடியும்? நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே சட்ட நுணுக்கங்களில் கைதேர்ந்தவராக இருந்த அபூஉபைதா (ரலி) அவர்களை அணுகி இதற்கு ஓர் முடிவு செய்வோம் என்றார் உமர். பிறகு இருவருமே அபூஉபைதா (ரலி) அவர்களை அணுகினார்கள்.

      விவரங்களைக் கேட்டறிந்த அபூஉபைதா (ரலி) அவர்கள், ‘இறைத் தூதுவர் குடும்பத்தினருக்கு ‘பைத்துல்மால்’ என்ற அரசுப் பணம் என்றாக்கப்படவில்லை. குறிப்பாக அது நபித்தோழர்களுக்காக, அதுவும் சிரமப்படும் நபித் தோழர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டது. எனவே அதிலிருந்து அபூபக்கர் (ரலி) அவர்கள் மாதா மாதம் தன் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவு சம்பளமாக எடுத்துக் கொள்ளலாம். வியாபாரம் செய்வதை விட்டுவிட்டு தன் சிந்தனை முழுவதையும் அரசுப் பணியில் செலவிடலாம். அதற்குத் தடையில்லை என்று தீர்ப்பு சொன்னார்கள். அதோடு ஒரு சிறு தொகையையும் சம்பளமாக அவர்கள் நிர்ணயம் செய்தார்கள்.

      அரசாளும் மன்னனாயிருந்தாலும், மதி நுட்பத்தால் ஒரு சாதாரணக் குடிமகன் ஒரு நல்ல தீர்ப்பைச் சொல்கிறார் என்றால், அதற்கு கட்டுப்படக்கூடிய தன்மை வேண்டும் என்பதுதான் நபித்தோழர்கள் கலீபாக்களாய் அரசோச்சிய காலகட்டத்தின் நியதியாய் இருந்தது. அபூபக்கரும் அந்தத் தீர்ப்புக்கு தலைச்சாய்த்தார்.


      சில காலம் சென்றது. ஒரு முறை அபூபக்கர் (ரலி) அவர்கள் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அன்னாரின் மனைவியார், உணவு உண்டபின் சிறிது இனிப்பைக் கொண்டு அபூபக்கர் (ரலி) அவர்களின் முன் வைத்தார்கள்.

      ‘என்ன இது இனிப்பு? யார் கொண்டு தந்தார்கள்’ என்று வினவினார் அபூபக்கர் (ரலி) அவர்கள். ‘யாரும் தரவில்லை. நானே தயார் செய்தேன். தாங்கள் வழங்கும் அரசு சம்பளப் பணத்திலிருந்து சிறிது சிறிதாய் மிச்சம் பிடித்து இந்த இனிப்பைச் செய்தேன்’ என்றார் மனைவி.

     ‘நான் பெறும் சம்பளம் நம் செலவு போக மிஞ்சும் அளவில் அதிகமாய் இருக்கிறதா? எவ்வளவு என்று சொல்’ என்று கேட்டு  கொண்டார்கள் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள். அது மட்டுமல்ல… அன்றிலிருந்து அந்தத் தொகையை தனது சம்பளத்திலிருந்து குறைத்துக் கொண்டார்கள். நபித்தோழர்களின் இது போன்ற நன்னடத்தைகள் இஸ்லாமிய ஆட்சியின் இறையாண்மையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

    அபூபக்கர் (ரலி) அவர்கள், தான் மரணிக்கும் தருவாயில் தன்னிடம் அரசாங்கச் சொத்தாய் இருந்த அமரும் ஈச்சம்பாய், உண்பதற்கும், அருந்துவதற்கும் பயன்படுத்திய தோல் துருத்திகள், மரபாண்டங்களை தனக்குப் பின்னால் வரும் கலீஃபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்கள். அவர்களின் பின்னால் அவற்றைப் பெற்றுக்கொண்ட உமர் (ரலி) அவர்கள் ‘அபூபக்கர் சரியான முன் மாதிரியை அமைத்துத் தந்துவிட்டார்கள். இனி ஆட்சிக்கு வரும் எவரும் அவர் வகுத்த எளிமையை மீற முடியாது. இப்பொருட்கள் தவிர்த்து எதனையும் நான் பயன்படுத்தமாட்டேன்’ என்றார்கள்.

       இன்ஷாஅல்லாஹ்.. இது போல் ஒரு அழகிய ஆட்சியை அல்லாஹ் இவ்வுலகில் அமைப்பனாக. ஆமின்!!! நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும் , இவர்கள் செய்த சாதனைகளையும், சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Sunday, May 17, 2015

சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) (கி.பி. 1137-1193)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்....

                   கி.பி. 636 ஆம் ஆண்டு இரண்டாம் கலிபா ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் தளபதி ஹஜ்ரத் காலித் இப்னு வலிது (ரலி) அவர்கள் தலைமையில் ரோமப் பேரரசின் பிடியில் சிக்கி சீரழிந்த ஜெருசலம் உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதி இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அங்கு வசித்த கிறிஸ்துவர்களும், யூதர்களும் சுதந்திர காற்றை சுவாசித்தனர். கிருஸ்துவ திருசபை ஒன்று கூடி கலிபா உமர் (ரலி) அவர்களை கம்பளம் விரித்து வரவேற்றனர். ஆனால் ரோமப் பேரரசும், ஐரோப்பிய உலகமும் வெறி பிடித்துக் கதறியது, பழிவாங்க காத்திருந்தனர். ஒன்றல்ல... இரண்டல்ல.... சுமார் 450 ஆண்டுகள் கடந்தன..!

      11ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களுக்கு மத்தியில் விரோதமும், குரோதமும் தலைக்கேரியதன் காரணமாக சக முஸ்லிமை அழிக்க ஐரோப்பிய திருச்சபைக்கு சிலர் அழைப்பு விடுத்து மாபெரும் பிழையை செய்தனர். இந்த வாய்பை பயன்படுத்திய அவர்கள் தங்களுடைய 450 வருட பழியை தீர்த்து ஜெருசலத்தை மீட்க களத்தில் இறங்கினர். சிலுவை போர் என்ற பெயரில் அழைப்பு விடுத்து ஜெருசலத்தை நோக்கி வந்தனர். வரும் வழியில் கண்ணில் கிடைக்கும் முஸ்லிம்கள், பள்ளிவாசல்கள் என அனைத்தையும் அழிந்தனர். சரியாக 450 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்லாமியர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிளவின் காரணமாகவும் மார்க்கத்தை சரியாக பேணாததின் விளைவு 1095 ஆம் ஆண்டு நமது (முஸ்லிகளின்) முதல் கிப்லா அவர்களின (கிருஸ்துவர்) கைக்கு சென்றது.

     முதல் கிப்லாவை இழந்த உலக முஸ்லிம் சமுகம் தனது நிலையை எண்ணி வருந்தியது, இழந்த நிலத்தையும், இறையில்லத்தையும் மீட்டிட 40, 50 ஆண்டுகளாக தொடந்து சிறு சிறு போர்கள் செய்துக்கொண்டு இருந்தனர்.  இராக்கின் “சதாம் ஹுசைன்” பிறந்த அதே ஊரில் சரியாக கி.பி 1137ஆம் ஆண்டு பிறந்த ஒருவர் தனது இளம் பருவத்தில் சிலுவை படையினருக்கு எதிரான இராணுவத்தில் ஒரு சாதாரண வீரராக சேர்ந்து அத்துடன் சீரியாவின் உயர்தரமான மதரஸாவில் மார்க்கக் கல்வியோடு, வரலாறு, சட்டம், மானுடவியல், அரபு மொழி என பல துறையில் அறிவோடு விளங்கியதன் விளைவாக சாதாரண வீரன் என்ற நிலையிலிருந்து இராணுவ தளபதி என்ற நிலைக்கு உயந்தியது. ஜெருசலேத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற வீரமும், விவேகமும், பொறுமையும் இவரை மீண்டும் தளபதியிலிருந்து எகிப்தின் கவர்னராக பதவி உயர்த்தியது. யார் அந்த மாவீரன்? “சுல்தான் சலாவுதீன் அய்யூபி”

      பொறுப்புக்கு வந்த உடன் சூடான், ஈராக், எகிப்து, சிரியா உள்ளிட்ட பகுதிகளை ஒருக்கிணைத்து முஸ்லிகளை உச்சகட்டப் போருக்கு ஆயத்தம் செய்தார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இராணுவத்துடன் தங்கி இராணுவ வீரர்களுக்கு நவீன ஆயுதங்கள் பயன்படுத்தும் முறை, ஜெருசலத்தின் வரலாறு, ஜெருசலத்தை மீட்க வேண்டிய கடமை மற்றும் ஷஹிதால் கிடைக்கும் அந்தஸ்தை பற்றியும் சொல்லி ஒரு வலுவான இராணுவ வீரர்களை உருவாக்கினார். சலாவுதீன் அவர்கள் மிகப் பெரிய போருக்கு தயாராகிறார் என்பதை தெரித்து கொண்ட ஜெருசலமின் அரசன் “லுசிக்ணன்” என்பவன் முந்திக் கொண்டு சிரியா மீது தாக்குதல் கொடுக்க தயாரானான்.

       கி.பி. 1187 ஜுலை மாதம் 4ஆம் தேதி “டைபரியாஸ்” என்ற பகுதியில் இஸ்லாமிய இராணுவமும் லுசிக்ணன் இராணுவமும் மோதின. அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற வேண்டி களம் இறங்கிய இஸ்லாத்தின் போராளிகளுக்கு அல்லாஹ் மகத்தான வெற்றியை பரிசாக அளித்தான். கி.பி. 1095 பறிப்போன பைத்துல் முகத்தஸ் மாவீரன் சலாவுதீன் அய்யூபி அவர்களின் முயற்சியால் கி.பி. 1187 மீண்டும் முஸ்லிகளின் கையில்வந்தது. இச்செய்தி ஐரோப்பிய உலகை உலுக்கியது, போப் அர்பன் III  என்ற மத பீடத்தின் தலைவர் உட்பட பலர் மாரடைப்பால் மாண்டனர். கி.பி  1095 இல் சிலுவைப் படையினர் முஸ்லிம்களுக்கு செய்த கொடூரத்திற்கு எந்த பழிதீர்க்கும் நடவடிக்கையும் இல்லாமல் அங்கு வாழ்த்த கிறிஸ்துவர்களுக்கும், யூதர்கலுக்கும்  பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

      போரிட்ட சிலுவைப் படையினர்களுக்கு மட்டும் அபராதம் விதித்து அதையும் சலாவுதீன் அய்யுபே செலுத்திவிட்டார். அது மட்டுமா அனைவரும் ஐரோப்பாவிற்கு செல்ல வாகன வசதியும் செய்துக்கொடுத்தார். வரலாற்றில் இப்படி ஒரு அரசனை பார்க்க இயலாது என்ற அளவுக்கு அல்லாஹ்வுடைய தீனையும், பெருமானாரின் போர் நெறிகளையும் கையாண்டார். இந்த நர்செயல்கள்  தான் இவரை மாவீரன் சுல்தான் சலாவுதீன் அய்யூபி (ரஹ்) என்ற நிலையை பெற்று தந்தது.

     ஆனால் நன்றிகெட்ட ஐரோப்பா மீண்டும் படை திரட்டியது. பிரிட்டன் அரசர் ரிச்சர்ட் I  தலைமையில் மூன்றாவது சிலுவை யுத்தம் தொடங்கியது, வருகின்ற வழியில் வாழ்ந்த 3 ஆயிரதிர்ற்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு சலாவுதீன் படையும் பதிலடி கொடுந்தது முன் வரிசையில் வந்த சிலுவை படையினர் தூக்கிலிடபட்டனர். இரண்டு படைகளும் கி.பி 1191 செப்டம்பரில் மோதிக்கொண்டனர். முஸ்லிம் படையும் சில நேரங்களில் தோல்வியை தழுவியது அவர்களும் தோல்வியை தழுவினார்கள். போரின் இறுதியாக ரிச்சர்டின் சிலுவை யுத்த படை பின்வாங்கி சென்றது. ஜெருசலமும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் முழுவதுமாக முஸ்லிம்களின் கைக்குள் வந்தது.

     ரீச்சர் திருப்பி செல்லும் வழியில் அவருடைய குதிரை இறந்த செய்தி கேள்விப்பட்ட சலாவுதீன் அய்யூபி (ரஹ்) தனக்கு எதிராக படை எடுத்து வந்த மன்னர் குதிரை இல்லாமல் இருக்கிறாரா என்று அவரை கௌரவிக்க மன்னர்கள் மட்டுமே பயன்படுத்தும் உயர்தரமான குதிரையை அனுப்பினார். இப்படி பட்ட உயரிய பண்புகள் கொண்ட சலாவுதீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் கி.பி. 1193 ஆம் ஆண்டு மரணமடைதார். அந்நிலையில் அவர்விட்டு சென்ற அவருடைய சொத்து, 1 தங்க நாணயமும், 47 வெள்ளி நானயமும் தான்.

     மீண்டும் ஜெருசலத்தை கைபற்ற வேண்டும் என்று சிலுவை யுத்தகாரர்களின் வாரிசுகள் காத்துகடன்தனர். ஒரு நாள் ஒரு வருடம் இல்லை 700 வருடங்கள். 19ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் முஸ்லிம் நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டனர் இதனை பயன்படுத்து ஐரோப்பிய சிலுவை யுத்த வாரிசுகள் உதுமானியப் பேரரசை நயவஞ்சகமாக வீழ்த்தி விட்டு  ஜெருசலத்தை முஸ்லிம்களிடமிருந்து கைபற்றிவிட்டனர்.

     கி.பி. 1917 இல் சிரியா சென்ற பிரிட்டிஸ் படை தளபதி எட்மன்ட் ஆலன் நேராக சுல்தான் சலாவுதீன் அய்யூபி அடக்கஸ்தலம் சென்று:      “Today The Wars Of Crusaders Are Completed” இன்றோடு சிலுவை யுத்தக்காரர்களின் போர் முடிவு பெற்றது என்று கூறினான். அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் படை தளபதி ஹென்றி கொரோடு அடக்கஸ்தலத்தின் மீது கால் வைத்து: “Awake Salahudeen! We Have Returned. My Presence  Here Consecrater The Victory Of The Cross Over Crescent” எழுந்திரு சலாவுதீன்! நாங்கள் திருப்பி வந்திருக்கிறோம்! புனிதத்தன்மை வாய்த என்னுடைய வருகையயின் மூலம் சிலுவை, பிறையை வென்றது. 700 வருட பகையை பாருங்கள்.... கடைசியாக 1924 ஆம் ஆண்டு ஜெருசலம் மீண்டும் யூதர்களின் கையில் சென்று விட்டது. 

      யா அல்லாஹ் எங்களுக்கு உதவி செய்! பைத்துல் முகத்தஸ் மீட்கபட்டு இஸ்லாத்தின் மடியில் தவழ வேண்டும்.. இன்ஷாஅல்லாஹ் ...!

       நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும், இஸ்லாமிய அரசியல் முறையும் சொல்லி வளர்ப்போம். இவரைபோன்ற இஸ்லாமிய மார்க்கத்தையும், இஸ்லாமிய போர் நெறிமுறைகளையும் பேணி காத்த பல இஸ்லாமிய சுல்தான்கள், அரசர்கள் வரலாற்றில் உள்ளனர். இவர்களுடைய வரலாறுகள் படிக்காமல் தேவையில்லாத மக்களுடைய வரலாறுகள் படிப்பது நமது நேரத்தை வீனாக்குவதற்கு சமம். இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Sunday, May 3, 2015

சீன தேசமும் ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) அவர்களும்.

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

      பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் ஏராளமானோர் இருந்தாலும் அவர்களில் ஒரு சிலரின் தனித்துவமிக்க தியாகமும் அர்ப்பணிப்பும் துணிச்சலான செயல்களும் அவர்களின் பெயர்களை வரலாற்று ஏடுகளில் உயர்த்திப் பிடிக்க காரணமாக இருத்தது. குறிப்பாக உலகம் முழுவதும் இஸ்லாமிய மார்க்கத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேட்கையில் ஆபத்தான பல பயணங்கள் மேற்கொண்டவரின் இவர் முக்கியதுவம் வாய்த்தவர்.

      அபிசினியா நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்த மக்களில் இடம்பெற்ற இவர் அங்கு சிறுது காலம் வாழ்ந்தார். இவரோ இளம் சஹாபி இவரால் அங்கேயே இருக்க முடியவில்லை இஸ்லாம் மார்க்கத்தை இன்னும் பல தேசங்களுக்கு கொண்டு செல்லவேண்டும் என்று ஆர்வத்தில் தனது தந்தையின் வியாபார நாடுகளான சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளை தேர்வுசெய்து அபிசினியாவிலிருந்து புறப்பட்டார்.

     பாய்மரப் படகு செங்கடலில் இருந்து புறப்பட்டு இந்தியப் பெருங்கடலின் வழியாக தமிழகத்திற்க்கும் இலங்கைக்கும் இடையே புகுந்து வங்கக்கடல் வழியாக கல்கத்தா அருகில் உள்ள உலகப் புகழ்பெற்ற சிட்டாகாங் துறைமுகத்தை அடைந்து நங்கூரம் பாய்ச்சி நிறுத்திய சஹாபிதான் ஹஜ்ரத் ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) அவர்கள். 

       சிறுது காலம் சிட்டாகாங் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தை எத்திவைத்து பிறகு சற்று மேலே உள்ள இடங்களான மணிப்பூர், மேகாலய, அஸ்ஸாம் அதன் தொடர்ச்சியாக சீனா சென்றடைத்தார்கள். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஹஜ்ரத் ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) மக்காவில் பெருமானாரை விட்டுப் பிரிந்து அபிசினியாவிற்கு சென்ற ஆண்டு கி.பி 615 அதாவது அல்-குரான் வசனங்கள் இறங்கத் துவங்கி 5 ஆண்டுகள் கூட முழுமை பெறவில்லை. 

       கி.பி. 616--618 க்கும் இடைப்பட்ட காலத்தில் சீனா சென்று சீன மக்களிடையே பெருகியிருந்த மூட நம்பிக்கைகளையும் தவறான உணவுப் பழக்க வழக்கங்களையும் தவறு என விளக்கிக் கூறி பெருமானாரைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தை சீன மக்களிடையே விதைத்தார்கள். கி.பி 623 ஆம் ஆண்டு அரபு வணிகர்கள் மூலம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு போய்விட்டதாக செய்தி வருகிறது. உடனடியாக ஸஅத் (ரலி) சீனாவிலிருந்து மதீனா திரும்பிவிட்டார்கள்.

      மதினா திரும்பிய ஸஅத் (ரலி) பத்ரு, உஹது போன்ற போர்களில் கலந்து தன்னுடைய வாழ்வை மதீனாவிலேயே தொடர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களில் மறைவுக்குப்பிறகு தொடர்ந்து அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களில் ஆட்சியில் இஸ்லாமிய இராணுவத்தில் பணியாற்றினார். 

       கி.பி. 650 இல் உதுமான் (ரலி) அவர்களின் இஸ்லாமிய அரசின்போது உலகில் மிகப்பெரும் பேரரசுகளின் ஒன்றான சீனாவிற்கு ஸஅத் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசின் தூதராக அனுப்பப்பட்டார்கள். ஏற்கனவே சீனாவிற்கு வந்திருந்த அனுபவமும் சீனா மக்களின் பழக்க வழக்கங்களையும் நன்றாக அறிந்துருந்த ஸஅத் (ரலி) அவர்கள் இப்போது இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ தூதராக கி.பி. 650 இல் மீண்டும் சீனா வந்தார்கள். 

       இந்த முறை முழு குரானுடன் வந்த ஸஅத் (ரலி) அவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் அதன் பிறகு அரபு வணிகர்களின் அழைப்புப் பனியின் காரணமாக சீனாவின் பல பாகங்களிலும் ஆழமாக வேருர்று இருந்ததை கண்டார்கள். சீனாவில் வாழ்ந்த முஸ்லிம்களை ஒருங்கிணைத்து இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பை உருவாக்கிடும் விதமாக டாங் பேரரசின் மன்னர் குவாசானகிடம் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கான அனுமதி கேட்டு “கேன்டன்” நகரில் அன்றைக்கு கட்டப்பட்ட பள்ளிவாசல் தான் இன்றைக்கும் அந்நகரில் “ஹஜ்ரத் ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) மெமோரியல் மஸ்ஜித்” என்றும் “Huaisheng Mosque” என்றும் அழைகப்படுகிறது.

      சீனர்களுக்கு அரபி பெயர்களை உச்சரிக்க கடினமாக இருந்ததால் “ஹசன்” என்ற பெயரை “ஹாய்” என்றும் “ஹுசைன்” என்பதை “ஹுய்” என்றும் சுருக்கி அழைத்தனர். இதே போல இப்பள்ளியையும் சுருக்கி  Huaisheng Si என்று அழைக்கின்றனர்.  

நம் குழந்தைகளும், நாமும் கண்டிப்பாக தெரிந்து வைத்து இருக்கவேண்டிய வரலாறு.