Thursday, June 18, 2015

ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த் ( கி.பி.1563 - கி.பி 1624 )

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

       அக்பரின் மார்க்க விரோதமான ஆட்சி காலத்தில் சிர்ஹிந்த் என்ற ஊரில் கி.பி.1563  பிறந்து தனது தந்தை மூலமாக மார்க்க அறிவுகளை பெற்றதோடு தனது 17 வயதுக்குள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து அத்துடன் தப்சீர் மற்றும் ஹதிஸ் கலையில் சிறந்து விளங்கினார். அதன் பிறகு தர்க்கம், தத்துவம், இறையியல் போன்ற கலைகளையும் கற்றார். 

                இவர் அக்பரின் மோசமான ஆட்சி காலத்தில், அக்பரின் கண்டு பயந்தவர்களுக்கு மத்தியிலேயே வளர்ந்தார். அவர் தம்மைச் சூழ்ந்து வளர்ந்து வந்த தீமைகளைத் தடுத்து நிறுத்தச் சக்தியற்றவராக இருந்தபோதும் ஈமானில் உறுதியானவராகவும், செயலில் சிறந்தவராகவும் விளங்கினார். அத்துடன் மற்றவர்களையும் நேர்வழி நடக்கத் தூண்டிக் கொண்டிருந்தார்.

      ஷேக் அஹமத் அவர்கள் பல்வகை ஆற்றல்களும் திறமைகளும் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். அக்காலத்தில் மலிந்திருந்த சீர்கேடுகேளுக்கு முற்றுப்புள்ளியிட்டு ஷரீஅத்தை, மார்க்கத்தை மேலோங்கச் செய்ய மனவுறுதியோடு எதிர்த்து நிற்க முன்வந்த ஒரே மனிதர் “ஷேக் அஹ்மத்” அவர்கள்தான். அரசாங்கக் கொள்கைகளைப் பலமாக எதிர்த்து உண்மையான சமயநெறிக்குப் புத்துயிரளிக்கப் பெருமுயற்சி செய்தார். அக்கால தீய போக்குகள் அனைத்தையும் அவர் எதிர்த்துப் போராடியதோடு ஆட்சியாளர்கள் விரும்பாத சரியான மார்க்கச் சட்டங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

      அக்பரின் இறப்புக்கு பிறகு அவரின் மகன் ஜஹாங்கீருக்கு “அஹமத் சிர்ஹிந்த்” அவர்கள் தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்ய மறுத்தார் என்பதற்காக அவரைக் குவாலியர் கோட்டையில் சிறையிலிட்ட அதே ஜஹாங்கீர் “ஷேக் அஹ்மத்” அவர்களின் மார்க்க விளக்கத்தின் பயனாக அவரின் மாணவரானர். தம் புதல்வரை மார்க்க கல்வி கற்பதற்காக “ஷேக் அஹ்மத்” அவர்களிடம் ஒப்படைத்தார். இந்தப் புதல்வர் தான் பிற்காலத்தில் ஷாஜஹான் என்ற பெயரில் முடிசூட்டப்பட்டார். இறுதியில் தீமைகளை ஒழித்துக் கட்டுவதில் அவர் வெற்றி பெற்றார்.  

      இஸ்லாத்தை மரியாதைக் குறைவாகவும் கேவலமாகவும் நடத்திய அரசாங்கத்தின் மனப்பான்மை இப்பொழுது இஸ்லாத்தை மதித்து நடக்கும் வகையில் மாற்றமடைந்தது. அரசவைச் சட்டகர்த்தாக்கள் புனைந்த புதுக் கோட்பாடுகளும், சட்டவிதிகளும் கொண்ட அக்பரின் ‘தீனே இலாஹி’ என்ற மதம் மறுபடியும் எழ முடியாதவாறு முடக்கப்பட்டது. இஸ்லாமியக் கட்டளைகளுக்கு எதிரான எல்லாத் திருத்தங்களும், எதிர்ப்பு சட்டங்களும் தாமகவே ரத்தாகிச் செல்லுபடியாகாதவையாகி விட்டன என்று அறிவிக்கப்பட்டது. ஆட்சி முறை முடியாட்சியாகவே இருந்ததெனினும் சமயக்கலைகளையும் ஷரீயத் சட்டங்களையும் பொறுத்தவரை அரசாங்கத்தின் மனப்பன்மை சகிப்புத் தன்மையும் மரியாதையும் உள்ளதாக மாறிற்று.

      ஷேக் அஹ்மத் அவர்கள் இந்தியாவின் முஸ்லிம் அரசாங்கம், முற்றாக ‘ஜாஹிலியத்தின்’ (அறியாமையின்) கைகளுக்கு மாறுவதை தடுத்தது மட்டுமின்றி, ஏழாம் நூற்றாண்டிலேயே இந்திய நாட்டில் இஸ்லாத்திற்கு எதிராக கிளம்பிய இயக்கத்துக்கு நிரந்தர முற்றுப் புள்ளியிட்டார்.

     அதைவிட மிகப்பெரிய சாதனை ‘அவ்ரங்கசீப்’ எனும் அரசக் குடும்பத்து மாணவனை உருவாக்கி விட்டு சென்றார். ஷரீஅத்தை, மார்க்கத்தை ஒழித்துக்கட்டும் செயலில் ஈடுபட்டவருமான அக்பரின் கொள்ளுப் பேரரான ‘அவ்ரங்கசீப்’  இஸ்லாத்தின் பாதுகாவலர் ஆனார்.

      நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற மார்க்க அறிஞர்களின் வரலாறுகளையும், அவர்கள் மார்க்கத்திற்காக செய்த தியாகங்கள், இவர்கள் செய்த சாதனைகள் போன்ற அனைத்தையும் சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Wednesday, June 3, 2015

அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் எளிமையான ஆட்சி

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

       பெருமானார் நபி (ஸல்) அவர்களின் மறைவு, இறுதி நபித்துவத்தை நிறைவு செய்தது. அது மட்டுமின்றி நபித் தோழர்களின் கிலாபத் ஆட்சிக் காலத்தையும் தோற்றுவித்தது. நபி (ஸல்) பின் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். நபி (ஸல்) வாழ்ந்து காட்டிய அதே எளிமையில் ஆட்சி முறையை நடத்தினார்கள்.

      மதீனாவை ஆண்ட அபூபக்கர் (ரலி) அவர்கள், ஒரு முறை முதுகில் சில துணி மூட்டைகளைச் சுமந்தவர்களாக மதீனாவின் கடை வீதியில் சென்று கொண்டிருந்தார். அதை பார்த்த உமர் (ரலி) அவர்கள், “தாங்கள் எங்கு செல்கிறீர்கள்? உங்கள் முதுகில் என்ன மூட்டை?” என்று வினவினார்கள்.
     “உமரே! கடை வீதிகளில் இந்த உடைகளை விற்று வரச் செல்கிறேன்” என்றார்.
  “ஏன்? ஆட்சிப் பொறுப்பில் ஆயிரம் வேலைகள் இருக்கும் போது இப்படி வியாபாரம் செய்து தங்களுடைய நேரத்தை வீணடிப்பது எனக்கு நியாயமாகப் படவில்லை” என்று உமர் ஆவேசமாக சொன்னார்.

     அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள், உமரே! பொறுமை கொள்ளுங்கள். நான் ஆட்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தினால், என்னை நம்பியிருக்கிற குடும்பத்திற்கு யார் பொறுப்பேற்பது? எங்களின் அன்றாடத் தேவைகளை யார் நிறைவேற்றுவது? அதற்காகத்தான் பழைய வியாபாரத்தில் ஈடுபடுகிறேன் என்றார்கள்.

     அப்படியானால் தாங்கள் அரசாங்க கஜானாவிலிருந்து வேலை செய்வதற்கான எந்தப் பயனையும் அனுபவிப்பதில்லையா? என்று உமர் வினவினார்கள்.

      நிச்சயமாக இல்லை. நபி (ஸல்) அவர்கள் அரசாங்க கஜானாவில் இருந்து தன் சுய தேவைக்காக எதனையும் பயன்படுத்துவதில்லை. தனக்கு மட்டுமல்ல, தன் வம்சாவழியினர் அனைவருக்குமே அதை “ஹராம்” என்று தடை செய்திருக்கிறார்கள். அவர்கள் நடைமுறைப்படுத்தாத ஒரு வழிமுறையை எப்படி நான் கையாள்வேன்? என்றார் அபூபக்கர் (ரலி).

      பின்னர், இது தீவிரமாகச் சிந்திக்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல் தீர்க்கப்படவேண்டிய விஷயமாகவும் எனக்குப்படுகிறது. அரசாங்க வேலை செய்வதற்கெனவே ‘பைத்துல்மால்’ என்ற அரசுப் பணம் உள்ளபோது அதை எப்படித் தாங்கள் மறுக்க முடியும்? நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே சட்ட நுணுக்கங்களில் கைதேர்ந்தவராக இருந்த அபூஉபைதா (ரலி) அவர்களை அணுகி இதற்கு ஓர் முடிவு செய்வோம் என்றார் உமர். பிறகு இருவருமே அபூஉபைதா (ரலி) அவர்களை அணுகினார்கள்.

      விவரங்களைக் கேட்டறிந்த அபூஉபைதா (ரலி) அவர்கள், ‘இறைத் தூதுவர் குடும்பத்தினருக்கு ‘பைத்துல்மால்’ என்ற அரசுப் பணம் என்றாக்கப்படவில்லை. குறிப்பாக அது நபித்தோழர்களுக்காக, அதுவும் சிரமப்படும் நபித் தோழர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டது. எனவே அதிலிருந்து அபூபக்கர் (ரலி) அவர்கள் மாதா மாதம் தன் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவு சம்பளமாக எடுத்துக் கொள்ளலாம். வியாபாரம் செய்வதை விட்டுவிட்டு தன் சிந்தனை முழுவதையும் அரசுப் பணியில் செலவிடலாம். அதற்குத் தடையில்லை என்று தீர்ப்பு சொன்னார்கள். அதோடு ஒரு சிறு தொகையையும் சம்பளமாக அவர்கள் நிர்ணயம் செய்தார்கள்.

      அரசாளும் மன்னனாயிருந்தாலும், மதி நுட்பத்தால் ஒரு சாதாரணக் குடிமகன் ஒரு நல்ல தீர்ப்பைச் சொல்கிறார் என்றால், அதற்கு கட்டுப்படக்கூடிய தன்மை வேண்டும் என்பதுதான் நபித்தோழர்கள் கலீபாக்களாய் அரசோச்சிய காலகட்டத்தின் நியதியாய் இருந்தது. அபூபக்கரும் அந்தத் தீர்ப்புக்கு தலைச்சாய்த்தார்.


      சில காலம் சென்றது. ஒரு முறை அபூபக்கர் (ரலி) அவர்கள் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அன்னாரின் மனைவியார், உணவு உண்டபின் சிறிது இனிப்பைக் கொண்டு அபூபக்கர் (ரலி) அவர்களின் முன் வைத்தார்கள்.

      ‘என்ன இது இனிப்பு? யார் கொண்டு தந்தார்கள்’ என்று வினவினார் அபூபக்கர் (ரலி) அவர்கள். ‘யாரும் தரவில்லை. நானே தயார் செய்தேன். தாங்கள் வழங்கும் அரசு சம்பளப் பணத்திலிருந்து சிறிது சிறிதாய் மிச்சம் பிடித்து இந்த இனிப்பைச் செய்தேன்’ என்றார் மனைவி.

     ‘நான் பெறும் சம்பளம் நம் செலவு போக மிஞ்சும் அளவில் அதிகமாய் இருக்கிறதா? எவ்வளவு என்று சொல்’ என்று கேட்டு  கொண்டார்கள் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள். அது மட்டுமல்ல… அன்றிலிருந்து அந்தத் தொகையை தனது சம்பளத்திலிருந்து குறைத்துக் கொண்டார்கள். நபித்தோழர்களின் இது போன்ற நன்னடத்தைகள் இஸ்லாமிய ஆட்சியின் இறையாண்மையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

    அபூபக்கர் (ரலி) அவர்கள், தான் மரணிக்கும் தருவாயில் தன்னிடம் அரசாங்கச் சொத்தாய் இருந்த அமரும் ஈச்சம்பாய், உண்பதற்கும், அருந்துவதற்கும் பயன்படுத்திய தோல் துருத்திகள், மரபாண்டங்களை தனக்குப் பின்னால் வரும் கலீஃபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்கள். அவர்களின் பின்னால் அவற்றைப் பெற்றுக்கொண்ட உமர் (ரலி) அவர்கள் ‘அபூபக்கர் சரியான முன் மாதிரியை அமைத்துத் தந்துவிட்டார்கள். இனி ஆட்சிக்கு வரும் எவரும் அவர் வகுத்த எளிமையை மீற முடியாது. இப்பொருட்கள் தவிர்த்து எதனையும் நான் பயன்படுத்தமாட்டேன்’ என்றார்கள்.

       இன்ஷாஅல்லாஹ்.. இது போல் ஒரு அழகிய ஆட்சியை அல்லாஹ் இவ்வுலகில் அமைப்பனாக. ஆமின்!!! நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும் , இவர்கள் செய்த சாதனைகளையும், சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Sunday, May 17, 2015

சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) (கி.பி. 1137-1193)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்....

                   கி.பி. 636 ஆம் ஆண்டு இரண்டாம் கலிபா ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் தளபதி ஹஜ்ரத் காலித் இப்னு வலிது (ரலி) அவர்கள் தலைமையில் ரோமப் பேரரசின் பிடியில் சிக்கி சீரழிந்த ஜெருசலம் உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதி இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அங்கு வசித்த கிறிஸ்துவர்களும், யூதர்களும் சுதந்திர காற்றை சுவாசித்தனர். கிருஸ்துவ திருசபை ஒன்று கூடி கலிபா உமர் (ரலி) அவர்களை கம்பளம் விரித்து வரவேற்றனர். ஆனால் ரோமப் பேரரசும், ஐரோப்பிய உலகமும் வெறி பிடித்துக் கதறியது, பழிவாங்க காத்திருந்தனர். ஒன்றல்ல... இரண்டல்ல.... சுமார் 450 ஆண்டுகள் கடந்தன..!

      11ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களுக்கு மத்தியில் விரோதமும், குரோதமும் தலைக்கேரியதன் காரணமாக சக முஸ்லிமை அழிக்க ஐரோப்பிய திருச்சபைக்கு சிலர் அழைப்பு விடுத்து மாபெரும் பிழையை செய்தனர். இந்த வாய்பை பயன்படுத்திய அவர்கள் தங்களுடைய 450 வருட பழியை தீர்த்து ஜெருசலத்தை மீட்க களத்தில் இறங்கினர். சிலுவை போர் என்ற பெயரில் அழைப்பு விடுத்து ஜெருசலத்தை நோக்கி வந்தனர். வரும் வழியில் கண்ணில் கிடைக்கும் முஸ்லிம்கள், பள்ளிவாசல்கள் என அனைத்தையும் அழிந்தனர். சரியாக 450 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்லாமியர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிளவின் காரணமாகவும் மார்க்கத்தை சரியாக பேணாததின் விளைவு 1095 ஆம் ஆண்டு நமது (முஸ்லிகளின்) முதல் கிப்லா அவர்களின (கிருஸ்துவர்) கைக்கு சென்றது.

     முதல் கிப்லாவை இழந்த உலக முஸ்லிம் சமுகம் தனது நிலையை எண்ணி வருந்தியது, இழந்த நிலத்தையும், இறையில்லத்தையும் மீட்டிட 40, 50 ஆண்டுகளாக தொடந்து சிறு சிறு போர்கள் செய்துக்கொண்டு இருந்தனர்.  இராக்கின் “சதாம் ஹுசைன்” பிறந்த அதே ஊரில் சரியாக கி.பி 1137ஆம் ஆண்டு பிறந்த ஒருவர் தனது இளம் பருவத்தில் சிலுவை படையினருக்கு எதிரான இராணுவத்தில் ஒரு சாதாரண வீரராக சேர்ந்து அத்துடன் சீரியாவின் உயர்தரமான மதரஸாவில் மார்க்கக் கல்வியோடு, வரலாறு, சட்டம், மானுடவியல், அரபு மொழி என பல துறையில் அறிவோடு விளங்கியதன் விளைவாக சாதாரண வீரன் என்ற நிலையிலிருந்து இராணுவ தளபதி என்ற நிலைக்கு உயந்தியது. ஜெருசலேத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற வீரமும், விவேகமும், பொறுமையும் இவரை மீண்டும் தளபதியிலிருந்து எகிப்தின் கவர்னராக பதவி உயர்த்தியது. யார் அந்த மாவீரன்? “சுல்தான் சலாவுதீன் அய்யூபி”

      பொறுப்புக்கு வந்த உடன் சூடான், ஈராக், எகிப்து, சிரியா உள்ளிட்ட பகுதிகளை ஒருக்கிணைத்து முஸ்லிகளை உச்சகட்டப் போருக்கு ஆயத்தம் செய்தார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இராணுவத்துடன் தங்கி இராணுவ வீரர்களுக்கு நவீன ஆயுதங்கள் பயன்படுத்தும் முறை, ஜெருசலத்தின் வரலாறு, ஜெருசலத்தை மீட்க வேண்டிய கடமை மற்றும் ஷஹிதால் கிடைக்கும் அந்தஸ்தை பற்றியும் சொல்லி ஒரு வலுவான இராணுவ வீரர்களை உருவாக்கினார். சலாவுதீன் அவர்கள் மிகப் பெரிய போருக்கு தயாராகிறார் என்பதை தெரித்து கொண்ட ஜெருசலமின் அரசன் “லுசிக்ணன்” என்பவன் முந்திக் கொண்டு சிரியா மீது தாக்குதல் கொடுக்க தயாரானான்.

       கி.பி. 1187 ஜுலை மாதம் 4ஆம் தேதி “டைபரியாஸ்” என்ற பகுதியில் இஸ்லாமிய இராணுவமும் லுசிக்ணன் இராணுவமும் மோதின. அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற வேண்டி களம் இறங்கிய இஸ்லாத்தின் போராளிகளுக்கு அல்லாஹ் மகத்தான வெற்றியை பரிசாக அளித்தான். கி.பி. 1095 பறிப்போன பைத்துல் முகத்தஸ் மாவீரன் சலாவுதீன் அய்யூபி அவர்களின் முயற்சியால் கி.பி. 1187 மீண்டும் முஸ்லிகளின் கையில்வந்தது. இச்செய்தி ஐரோப்பிய உலகை உலுக்கியது, போப் அர்பன் III  என்ற மத பீடத்தின் தலைவர் உட்பட பலர் மாரடைப்பால் மாண்டனர். கி.பி  1095 இல் சிலுவைப் படையினர் முஸ்லிம்களுக்கு செய்த கொடூரத்திற்கு எந்த பழிதீர்க்கும் நடவடிக்கையும் இல்லாமல் அங்கு வாழ்த்த கிறிஸ்துவர்களுக்கும், யூதர்கலுக்கும்  பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

      போரிட்ட சிலுவைப் படையினர்களுக்கு மட்டும் அபராதம் விதித்து அதையும் சலாவுதீன் அய்யுபே செலுத்திவிட்டார். அது மட்டுமா அனைவரும் ஐரோப்பாவிற்கு செல்ல வாகன வசதியும் செய்துக்கொடுத்தார். வரலாற்றில் இப்படி ஒரு அரசனை பார்க்க இயலாது என்ற அளவுக்கு அல்லாஹ்வுடைய தீனையும், பெருமானாரின் போர் நெறிகளையும் கையாண்டார். இந்த நர்செயல்கள்  தான் இவரை மாவீரன் சுல்தான் சலாவுதீன் அய்யூபி (ரஹ்) என்ற நிலையை பெற்று தந்தது.

     ஆனால் நன்றிகெட்ட ஐரோப்பா மீண்டும் படை திரட்டியது. பிரிட்டன் அரசர் ரிச்சர்ட் I  தலைமையில் மூன்றாவது சிலுவை யுத்தம் தொடங்கியது, வருகின்ற வழியில் வாழ்ந்த 3 ஆயிரதிர்ற்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு சலாவுதீன் படையும் பதிலடி கொடுந்தது முன் வரிசையில் வந்த சிலுவை படையினர் தூக்கிலிடபட்டனர். இரண்டு படைகளும் கி.பி 1191 செப்டம்பரில் மோதிக்கொண்டனர். முஸ்லிம் படையும் சில நேரங்களில் தோல்வியை தழுவியது அவர்களும் தோல்வியை தழுவினார்கள். போரின் இறுதியாக ரிச்சர்டின் சிலுவை யுத்த படை பின்வாங்கி சென்றது. ஜெருசலமும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் முழுவதுமாக முஸ்லிம்களின் கைக்குள் வந்தது.

     ரீச்சர் திருப்பி செல்லும் வழியில் அவருடைய குதிரை இறந்த செய்தி கேள்விப்பட்ட சலாவுதீன் அய்யூபி (ரஹ்) தனக்கு எதிராக படை எடுத்து வந்த மன்னர் குதிரை இல்லாமல் இருக்கிறாரா என்று அவரை கௌரவிக்க மன்னர்கள் மட்டுமே பயன்படுத்தும் உயர்தரமான குதிரையை அனுப்பினார். இப்படி பட்ட உயரிய பண்புகள் கொண்ட சலாவுதீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் கி.பி. 1193 ஆம் ஆண்டு மரணமடைதார். அந்நிலையில் அவர்விட்டு சென்ற அவருடைய சொத்து, 1 தங்க நாணயமும், 47 வெள்ளி நானயமும் தான்.

     மீண்டும் ஜெருசலத்தை கைபற்ற வேண்டும் என்று சிலுவை யுத்தகாரர்களின் வாரிசுகள் காத்துகடன்தனர். ஒரு நாள் ஒரு வருடம் இல்லை 700 வருடங்கள். 19ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் முஸ்லிம் நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டனர் இதனை பயன்படுத்து ஐரோப்பிய சிலுவை யுத்த வாரிசுகள் உதுமானியப் பேரரசை நயவஞ்சகமாக வீழ்த்தி விட்டு  ஜெருசலத்தை முஸ்லிம்களிடமிருந்து கைபற்றிவிட்டனர்.

     கி.பி. 1917 இல் சிரியா சென்ற பிரிட்டிஸ் படை தளபதி எட்மன்ட் ஆலன் நேராக சுல்தான் சலாவுதீன் அய்யூபி அடக்கஸ்தலம் சென்று:      “Today The Wars Of Crusaders Are Completed” இன்றோடு சிலுவை யுத்தக்காரர்களின் போர் முடிவு பெற்றது என்று கூறினான். அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் படை தளபதி ஹென்றி கொரோடு அடக்கஸ்தலத்தின் மீது கால் வைத்து: “Awake Salahudeen! We Have Returned. My Presence  Here Consecrater The Victory Of The Cross Over Crescent” எழுந்திரு சலாவுதீன்! நாங்கள் திருப்பி வந்திருக்கிறோம்! புனிதத்தன்மை வாய்த என்னுடைய வருகையயின் மூலம் சிலுவை, பிறையை வென்றது. 700 வருட பகையை பாருங்கள்.... கடைசியாக 1924 ஆம் ஆண்டு ஜெருசலம் மீண்டும் யூதர்களின் கையில் சென்று விட்டது. 

      யா அல்லாஹ் எங்களுக்கு உதவி செய்! பைத்துல் முகத்தஸ் மீட்கபட்டு இஸ்லாத்தின் மடியில் தவழ வேண்டும்.. இன்ஷாஅல்லாஹ் ...!

       நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும், இஸ்லாமிய அரசியல் முறையும் சொல்லி வளர்ப்போம். இவரைபோன்ற இஸ்லாமிய மார்க்கத்தையும், இஸ்லாமிய போர் நெறிமுறைகளையும் பேணி காத்த பல இஸ்லாமிய சுல்தான்கள், அரசர்கள் வரலாற்றில் உள்ளனர். இவர்களுடைய வரலாறுகள் படிக்காமல் தேவையில்லாத மக்களுடைய வரலாறுகள் படிப்பது நமது நேரத்தை வீனாக்குவதற்கு சமம். இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Sunday, May 3, 2015

சீன தேசமும் ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) அவர்களும்.

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

      பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் ஏராளமானோர் இருந்தாலும் அவர்களில் ஒரு சிலரின் தனித்துவமிக்க தியாகமும் அர்ப்பணிப்பும் துணிச்சலான செயல்களும் அவர்களின் பெயர்களை வரலாற்று ஏடுகளில் உயர்த்திப் பிடிக்க காரணமாக இருத்தது. குறிப்பாக உலகம் முழுவதும் இஸ்லாமிய மார்க்கத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேட்கையில் ஆபத்தான பல பயணங்கள் மேற்கொண்டவரின் இவர் முக்கியதுவம் வாய்த்தவர்.

      அபிசினியா நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்த மக்களில் இடம்பெற்ற இவர் அங்கு சிறுது காலம் வாழ்ந்தார். இவரோ இளம் சஹாபி இவரால் அங்கேயே இருக்க முடியவில்லை இஸ்லாம் மார்க்கத்தை இன்னும் பல தேசங்களுக்கு கொண்டு செல்லவேண்டும் என்று ஆர்வத்தில் தனது தந்தையின் வியாபார நாடுகளான சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளை தேர்வுசெய்து அபிசினியாவிலிருந்து புறப்பட்டார்.

     பாய்மரப் படகு செங்கடலில் இருந்து புறப்பட்டு இந்தியப் பெருங்கடலின் வழியாக தமிழகத்திற்க்கும் இலங்கைக்கும் இடையே புகுந்து வங்கக்கடல் வழியாக கல்கத்தா அருகில் உள்ள உலகப் புகழ்பெற்ற சிட்டாகாங் துறைமுகத்தை அடைந்து நங்கூரம் பாய்ச்சி நிறுத்திய சஹாபிதான் ஹஜ்ரத் ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) அவர்கள். 

       சிறுது காலம் சிட்டாகாங் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தை எத்திவைத்து பிறகு சற்று மேலே உள்ள இடங்களான மணிப்பூர், மேகாலய, அஸ்ஸாம் அதன் தொடர்ச்சியாக சீனா சென்றடைத்தார்கள். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஹஜ்ரத் ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) மக்காவில் பெருமானாரை விட்டுப் பிரிந்து அபிசினியாவிற்கு சென்ற ஆண்டு கி.பி 615 அதாவது அல்-குரான் வசனங்கள் இறங்கத் துவங்கி 5 ஆண்டுகள் கூட முழுமை பெறவில்லை. 

       கி.பி. 616--618 க்கும் இடைப்பட்ட காலத்தில் சீனா சென்று சீன மக்களிடையே பெருகியிருந்த மூட நம்பிக்கைகளையும் தவறான உணவுப் பழக்க வழக்கங்களையும் தவறு என விளக்கிக் கூறி பெருமானாரைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தை சீன மக்களிடையே விதைத்தார்கள். கி.பி 623 ஆம் ஆண்டு அரபு வணிகர்கள் மூலம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு போய்விட்டதாக செய்தி வருகிறது. உடனடியாக ஸஅத் (ரலி) சீனாவிலிருந்து மதீனா திரும்பிவிட்டார்கள்.

      மதினா திரும்பிய ஸஅத் (ரலி) பத்ரு, உஹது போன்ற போர்களில் கலந்து தன்னுடைய வாழ்வை மதீனாவிலேயே தொடர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களில் மறைவுக்குப்பிறகு தொடர்ந்து அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களில் ஆட்சியில் இஸ்லாமிய இராணுவத்தில் பணியாற்றினார். 

       கி.பி. 650 இல் உதுமான் (ரலி) அவர்களின் இஸ்லாமிய அரசின்போது உலகில் மிகப்பெரும் பேரரசுகளின் ஒன்றான சீனாவிற்கு ஸஅத் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசின் தூதராக அனுப்பப்பட்டார்கள். ஏற்கனவே சீனாவிற்கு வந்திருந்த அனுபவமும் சீனா மக்களின் பழக்க வழக்கங்களையும் நன்றாக அறிந்துருந்த ஸஅத் (ரலி) அவர்கள் இப்போது இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ தூதராக கி.பி. 650 இல் மீண்டும் சீனா வந்தார்கள். 

       இந்த முறை முழு குரானுடன் வந்த ஸஅத் (ரலி) அவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் அதன் பிறகு அரபு வணிகர்களின் அழைப்புப் பனியின் காரணமாக சீனாவின் பல பாகங்களிலும் ஆழமாக வேருர்று இருந்ததை கண்டார்கள். சீனாவில் வாழ்ந்த முஸ்லிம்களை ஒருங்கிணைத்து இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பை உருவாக்கிடும் விதமாக டாங் பேரரசின் மன்னர் குவாசானகிடம் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கான அனுமதி கேட்டு “கேன்டன்” நகரில் அன்றைக்கு கட்டப்பட்ட பள்ளிவாசல் தான் இன்றைக்கும் அந்நகரில் “ஹஜ்ரத் ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) மெமோரியல் மஸ்ஜித்” என்றும் “Huaisheng Mosque” என்றும் அழைகப்படுகிறது.

      சீனர்களுக்கு அரபி பெயர்களை உச்சரிக்க கடினமாக இருந்ததால் “ஹசன்” என்ற பெயரை “ஹாய்” என்றும் “ஹுசைன்” என்பதை “ஹுய்” என்றும் சுருக்கி அழைத்தனர். இதே போல இப்பள்ளியையும் சுருக்கி  Huaisheng Si என்று அழைக்கின்றனர்.  

நம் குழந்தைகளும், நாமும் கண்டிப்பாக தெரிந்து வைத்து இருக்கவேண்டிய வரலாறு.

Tuesday, April 14, 2015

இஸ்ரேல் பற்றிய சிறு குறிப்பு (Small notes about Isreal)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்....

         சொல்ல வருத்தமான செய்தியாக இருந்தாலும் இந்த உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும். ஒரு சின்ன குட்டி நாடு (அகதிகள் முகாம்) மொத்தமே 1.5 கோடி மக்கள் தான். ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள். எப்படி??? அந்த மக்கள் பற்றிய இதோ சில குறிப்புகள்!!!

        கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் (Phd..,) வாங்கி இருக்க வேண்டுமாம். கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனம் ஆரம்மித்து 15 பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். அப்பத்தான் கல்லூரியில் சீட் கிடைக்கும், இன்று உலகில் உள்ள பாதி முக்கிய நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது.

       உலகில் உள்ள அணைத்து சிறுவர் கார்டுன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான். ஆனால் அந்த நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை. அவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

       கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி, சினிமா போன்ற தேவையற்றத்தை பார்க்க அனுமதிக்க படுவதில்லை. அதற்க்கு பதில் கற்பமாக இருக்கும்பொழுது கணக்கு, அறிவியல், மொழிகள் போன்ற பல பாடம் படிப்பார்கலாம். அப்போது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்களாம்.

       உலகத்தில் அதிகமாக நோபல் பரிசு வென்றவர்களும் இந்த நாட்டில் (அகதிகள்) தான் உள்ளார்கள். உலகத்தில் மொத்த படித்த மேதாவிகளும், உலகத்தை மறைமுகமாக ஆள்பவர்களும் இவர்கள்தான் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்... யார் அவர்கள்? எதற்கு இந்த அளவுக்கு வெறித்தனம்?

      உலகில் நமக்கென்று ஒரு நாடு இல்லையே என்று உலகம் முழுவதும் நாடோடிகளாக திரிந்து பிறகு முஸ்லிம்களின் நிலத்தை அபகரித்து அதுதான் எங்கள் நாடு என்று தாங்களே அறிவித்து தங்களுடைய சூழ்ச்சி புத்தியால் இஸ்லாமியர்களை அளிப்பதற்கும் உலகை தங்களுடைய கட்டுப்பாட்டில் கோண்டுவருவதற்கும் வாழும் ஒரே நாடு (அகதிகள் முகாம்) இஸ்ரேல்....    

Thursday, April 2, 2015

சுலைமான் அல் கானூனி (கி.பி 1494 - கி.பி 1566) Suleiman the Magnificent ( 1494 – 1566 )

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

       உங்களில் இருவர் இருந்தாலும் அதில் ஒருவர் அமிராக இருங்கள் என்ற இஸ்லாமிய கோட்பாடுக் கேற்ப்ப ஏறக்குறைய 469 ஆண்டுகள் உலக முஸ்லிம்களின் பாதுகாப்புக் கேடயமாக துருக்கியை தலைமையிடமாகக் கொண்டுயிருந்த உதுமானிய கிலாஃபதில், சுலைமான் அல் கானூனி ஆட்சி செய்த கி.பி. 1520 - 1566 வரையிலான 46 ஆண்டு உதுமானிய பேரரசின் உச்சகட்ட காலம் என்றும், வலிமையான பேரரசாக திகழ்ந்த காலம் என்றும், வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இன்றைக்கும் கூட ஐரோப்பிய அறிவுஜீவிகளும், வரலாற்று ஆய்வாளர்களும் அவரை சிறப்பு வாய்ந்த சுலைமான் (Sulaiman the Magnificiant) என்று அழைக்கின்றனர்.

       இஸ்லாமிய உலகமும், முஸ்லிம் வரலாற்று ஆய்வாளர்களும் அவரை சட்டங்களை வகுத்த சுலைமான் என்று அழைகின்றனர். உதுமானிய பேரரசு என்றாலே சுலைமான் அல் கானூனி அவர்களின் பெயர் தான் நினைவுக்கு வரும் என்ற அளவிற்கு தனது அறிவாலும், வீரத்தாலும், விவேகத்தாலும் வரலாற்று ஏடுகளில் தனி முத்திரை பதித்துள்ளார்.

        உலக வரலாற்றில் முஸ்லிம் அரசர்கள் பெருவாரியாக கட்டிடக் கலையின் மீது அலாதிப் பிரியமுடையவர்களாக வாழ்ந்துள்ளனர். இஸ்லாமிய கட்டிடக் கலை என்ற புதிய ஒரு கலையை உலகில் நிலை நாட்டினர். இஸ்லாமிய மார்க்கத்தின் எழுச்சியையும், தங்களது ஆட்சியின் பெருமையையும், புகழையும், ஓங்கி ஒழித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக அவர்கள் கட்டிய கட்டிடங்கள், மாளிகைகள், கோபுரங்கள், கோட்டைகள், பள்ளிவாசல்கள் இவ்வுலகில் பல பாகங்களிலும் பரந்து விரிந்து கிடக்கின்றன.

      சுலைமான் அல் கானூனி அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் தனது வாழ்நாள் சாதனையாக கருதி கட்டிய “சுலைமானிய்யா மஸ்ஜித்” என்ற பள்ளிவாசல் கி.பி. 1550 இல் துவங்கி 8 ஆண்டுகள் கட்டப்பட்டது. இன்றும் உலக மக்களின் உள்ளங்களைக் கவர்த்து வருகிறது. துருக்கி தலைநகர் இஸ்தான்புலிற்கு வருகை தரும் சுற்றுலாக் பயணிகள் இங்கு செல்லாமல் அவர்கள் திருப்புவதில்லை, அதேபோல் அதிகமான கட்டிடக்கலை மாணவர்களும், நிபுணர்களும் இங்கு வருகின்றனர்.

       இந்த பள்ளிவாசலின் தொழுகைக்கு இடம், ஆரம்ப பாடசாலை (ஷுஃபா), உயர்கல்வி நிறுவனம் (மதரஷா), ஜாமிஆ (பல்கலைகழகம்), மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி (தாருஸ் ஷிஃபா), பொதுக்குளியல் அறை (ஹம்மாம்), வழிப்போக்கர் தங்கும் இடம் (சிராய்), பொது சமையலறை (இமாரத்) ஆகிய உள்கட்டமைப்புகளை அமைத்து உலக மக்களுக்கு வழிகாட்டியுள்ளார்.

       அதே போல் பள்ளிவாசல்களில் இமாமாக இருக்க சில தகுதிகளை நிர்ணயித்தார்.
1. அல்-குர்ஆன் மற்றும் ஹதிஸ் கலையில் நுண்ணிய அறிவு இருக்க வேண்டும்.
2. நான்கு மத்ஹபு மற்றும் ஷரிஅத் தொடர்பாக விரிவான அறிவை கொண்டிருக்க வேண்டும்.
3. புதிய பிரச்சனைகளுக்கு அல்-குர்ஆன் மற்றும் நபிமொழியிலிருந்து தீர்வு எடுக்கும் திறன் இருக்க வேண்டும்.
4. அரபி, துருக்கி, ஹிப்ரு, பார்ஷி போன்ற மொழிகளில் தேர்ச்சி வேண்டும்.
5. கணிதம், இயற்பியல், வேதியல், வானியல் போன்ற அறிவியல் அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.
6. உலக வரலாறு, உலக சட்டங்கள் பற்றிய அறிவு மற்றும் நல்ல குரல் வளமும் பேச்சாற்றலும் கொண்டிருக்க வேண்டும்.

        தலைமை இம்மாமின் தகுதிகள் என்று நிர்ணயித்தவுடன் அன்றைய ஆலிம்கள் ஆடிப்போய் விட்டனர். இப்படிப்பட்ட ஆலிம்களை உருவாக்குவதற்க்கான பாடத் திட்டமோ ஆய்வு நிறுவனங்களோ நம்மிடம் இல்லை என்று கலிஃபாவிடம் முறையிட்டனர். துருக்கி சாம்ராஜ்யத்தின் அணைத்து மதரஸா மற்றும் ஜாமியாக்களின் பாடத் திட்டங்களை உடனடியாக மேம்படுத்தி இனி வருங்காலதிலாவது உலகின் போக்கை இஸ்லாத்தின் திசைக்குத் திருப்ப கூடிய ஆற்றல் பொருத்திய இமாம்களை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
   
        சுலைமான் அல் கானூனி அவர்கள் மரணிக்கும் போது ஆசியா, ஆப்பிரிக்க, ஐரோப்பா என்று மூன்று கண்டங்களின் 40 ஆயிரம் சதுர. கி.மீ நிலப்பரப்பையும், 21 மாகாணங்களைக் கொண்டதாக, ஏறக்குறைய  20 தேசிய இன மக்கள் வாழும் உலகின் பரந்து விரிந்த அதிவலிமையான வல்லரசாக உதுமானிய பேரரசு திகழ்ந்து. ஆனால் அவருக்கு பிறகு ஏற்பட்ட வாரிசு சண்டையில் சிக்கி இஸ்லாமிய கிலாபாத் பலவீனம் அடைந்தது.

       சுலைமான் அல் கானூனி போன்ற ஒரு சில உயிப்புள்ள கலிபாக்கள், சுல்தான்கள், அரசர்கள் தங்களுக்குப் பிறகு தங்களை போன்ற திறனுடைய அடுத்த தலைவர்களை உருவாக்காமல் சென்றதுதான் முஸ்லிம்களின் அரசுகள் சரிந்து வீழ்ந்ததற்கான மிக முக்கிய காரணம் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொண்டு நமது இலட்சிய பயணத்தை தொடருவோம்.! அத்துடன் நமது வெற்றிக்கு அல்லாஹ்விடம் அதிகமாக துஆ செய்வேமாக.! ஆமின்.!

       நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும் , இவர்கள் செய்த சாதனைகளையும், அதே போல் இவர்கள் எவ்விஷயத்தில் தவறு இழைத்தார்கள் போன்ற அனைத்தையும் சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Wednesday, March 18, 2015

அர்ஷிFப் போர் களம் (Battle of Arsuf)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்....
       
          இன்று (07-09-1191) கி.பி 1191 ஆம் ஆண்டு “அர்ஷிfப்” என்ற இடத்தில் கி.பி. 1187லில் முஸ்லிம்களிடம் இழந்த ஜெருசலத்தை கைப்பற்ற பிரிட்டன் அரசர் ரிச்சர்ட் I தலைமையில் மூன்றாவது சிலுவை யுத்தம் தொடங்கியது.

                        வருகின்ற வழியில் வாழ்ந்த 3 ஆயிரதிர்ற்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பதிலடி கொடுக்க சலாவுதீன் அய்யுபி (ரஹ்) அவர்களும் படையை திரட்டினார். முஸ்லிம் படையும் சில நேரங்களில் தோல்வியை தழுவியது அவர்களும் தோல்வியை தழுவினார்கள்.

                         ரீச்சர் திருப்பி செல்லும் வழியில் அவருடைய குதிரை இறந்த செய்தி கேள்விப்பட்ட சலாவுதீன் அய்யூபி (ரஹ்) தனக்கு எதிராக படை எடுத்து வந்த மன்னர் குதிரை இல்லாமல் இருக்கிறாரா என்று அவரை கௌரவிக்க மன்னர்கள் மட்டுமே பயன்படுத்தும் உயர்தரமான குதிரையை அனுப்பினார்.

                         வரலாற்றில் இப்படி ஒரு அரசனை பார்க்க இயலாது என்ற அளவுக்கு அல்லாஹ்வுடைய தீனையும், பெருமானாரின் போர் நெறிகளையும் கையாண்டார். இந்த நர்செயல்கள் தான் இவரை மாவீரன் சுல்தான் சலாவுதீன் அய்யூபி (ரஹ்) என்ற நிலையை பெற்று தந்தது.

          நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும் இஸ்லாமிய அரசியல் முறையும் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Monday, March 2, 2015

ஹித்தின் போர் களம் (Battle of Hattin)

 அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்....

        இன்றுதான் (04-07-1187) இன்றைய ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேல் பகுதியில் அமைத்துள்ள "ஹித்தின்" என்ற நகருக்கு அருகில் உள்ள "டைபரியாஸ்" என்ற சமவெளிப் பகுதியில் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களின் இஸ்லாமிய இராணுவமும் லூசிக்ணன் தலைமையிலான சிலுவையுத்த வீரர்களின்  இராணுவமும் நேருக்கு நேர் மோதிகொண்டனர். 

       அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற வேண்டி களம் இறங்கிய இஸ்லாத்தின் போராளிகளுக்கு அல்லாஹ் மகத்தான வெற்றியை பரிசாக அளித்தான். கி.பி. 1095 பறிப்போன பைத்துல் முகத்தஸ்  மாவீரன் சுல்தான் சலாவுதீன் அய்யூபி அவர்களின் முயற்சியால் கி.பி. 1187 மீண்டும் முஸ்லிகளின் கையில்வந்தது.

        கி.பி 1095 இல் சிலுவைப் படையினர் முஸ்லிம்களுக்கு செய்த கொடூரத்திற்கு எந்த பழிதீர்க்கும் நடவடிக்கையும் இல்லாமல் அங்கு வாழ்த்த கிறிஸ்துவர்களுக்கும், யூதர்கலுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

       போரிட்ட சிலுவைப் படையினர்களுக்கு மட்டும் அபராதம் விதித்து அதையும் சலாவுதீன் அய்யுபே செலுத்தி விட்டார். அது மட்டுமா அனைவரும் ஐரோப்பாவிற்கு செல்ல வாகன வசதியும் செய்துக்கொடுத்தார். வரலாற்றில் இப்படி ஒரு அரசனை பார்க்க இயலாது என்ற அளவுக்கு அல்லாஹ்வுடைய தீனையும், பெருமானாரின் போர் நெறிகளையும் கையாண்டார்.
       நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும் இஸ்லாமிய அரசியல் முறையும் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Monday, February 16, 2015

ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்புசுல்தான்

அஸ்ஸலாம் அழைக்கும் வரஹ்...

         இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்தவர் திப்பு சுல்தான். ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த அந்த மாவீரன், போர் வியூகத்திலும், படைக்கலத் தயாரிப்பிலும் சிறந்து விளங்கினார். 226 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராணுவத் தொழில்நுட்பத்திலும், வல்லமையிலும் திப்பு சுல்தான் படை சிறந்து விளங்கி ஆங்கிலேயப் படைகளை திணறடித்தது.

         மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தானின் கோட்டையும், படைக்கலத் தயாரிப்பு தொழிற்சாலையும் இருந்த அவல நிலை குறித்து உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் அன்றைய  குடியரசுத் தலைவர் APJ அப்துல் கலாமுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தக் கடிதத்தை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை தலைவர் எஸ்.டி. பிள்ளையன் பார்வைக்கு அனுப்பினார் குடியரசுத் தலைவர்.

        பிறகென்ன... ஸ்ரீரங்கப்பட்டினத்தின் ராணுவ தொழில்நுட்ப வரலாறு ஒரு புதிய செய்தியை வெளிப்படுத்தியது. திப்பு சுல்தான் ராக்கெட் தொழில்நுட்பத்தின் தந்தை என்பதும், ஏவுகணைகளைப் பயன்படுத்தியதில் முன்னோடி எனவும் அறிவிக்கப்பட்டது. உள்ளூர் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டினத்தில் பழமை வாய்ந்த பகுதிகளில் ராணுவ வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுக்காக சுற்றியபோது பல பகுதிகள் இவர்களால் அடையாளம் காணப்பட்டன.

        எதிரி முகாம்களை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் ஏவுகணை ஏவும் தளங்களை அவர்கள் கண்ணெதிரே கண்டனர். சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் திப்புசுல்தான் தான் என்பதை இந்திய விஞ்ஞானிகள் கூறினார்கள். நவீனகால ராணுவ வரலாற்றில் ராக்கெட் படையினை பயன்படுத்தியவர் மைசூர் புலி திப்புசுல்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

        வீரத் திப்புவின் படைகள் பயன்படுத்திய ராக்கெட்டுகள் லண்டன் மாநகரில் உள்ள “உல்விச்” அருங்காட்சியகத்தில் உள்ளது. ஸ்ரீரங்கப்பட்டினம் நவீனகால ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தின் தொட்டில் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

       இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பயன்படுத்திய V2 ராக்கெட்களுக்கு முன்னோடியாக திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம் இருந்தது என்றும், திப்புவின் ராக்கெட் 2.2Kg முதல் 5.5Kg வரை இருந்தது என்றும். இரண்டு கிலோ மீட்டர் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் திப்புவின் ஏவுகணைகள், இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தையும், போர் நிபுணத்துவத்தையும் விளக்குவண்ணம் உள்ளது என்றும், ராக்கெட்களை போர்க்களத்தில் பயன்படுத்திய முதல் மாவீரன் திப்பு சுல்தான் என்பதும் உலகிற்கு தெரிவிக்க விரும்புவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நாஸாவில் டாக்டர் அப்துல் கலாம் கலாம் கண்ட காட்சி:
        இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சி அணுஆயுத எழுச்சி, ராணுவத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அத்தனை ஏற்றங்களுக்கும் முக்கியக் காரணமாக விளங்கிய அறிவியல் அறிஞரும் முன்னால் இந்தியக் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாம், தனது ஆராய்ச்சிக்பணிக்காலத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவிற்குச் சென்றபோது தான் கண்ட காட்சியை நாட்டு மக்களுக்கு தனது “அக்கினிச் சிறகுகள்” நூலில் விவரித்துள்ளார்.

        ''எனது பயணத்தின் இறுதிக் கட்டமாக வாலப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டி மையத்திற்குச் சென்றேன். இந்த மையம் நாஸாவின் சவுண்டிங் ராக்கெட் திட்டத்திற்கு இந்த மையம்தான் அடித்தளம். இங்கே, வரவேற்புக் கூடத்தில் ஓர் ஓவியம் பிரதானமாகக் காட்சியளித்தது. ஒரு சில ராக்கெட்டுகள் பறந்து கொண்டிருக்கும் பின்னணியுடன் போர்க்களக் காட்சி ஒன்றை ஓவியமாக அங்கே தீட்டியிருந்தார்கள்.

        அந்த ஓவியத்தின் திப்பு சுல்தானின் படை வெள்ளையர்களுடன் போரிடும் காட்சியை அதில் கண்டேன். திப்பு சுல்தானின் சொந்த தேசத்தில் மறக்கப்பட்டு விட்ட ஒரு உண்மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதியில் நினைவுகூர்ந்து போற்றப்படுவதை அந்தச் சித்திரம் உணர்த்தியது. ராக்கெட் போர்த் தந்திரத்தின் நாயகனாக ஒரு இந்தியனை நாஸா பெருமைப்படுத்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சிகொண்டேன்.

Monday, February 2, 2015

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார் (கி.பி 1862 - கி.பி 1931)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

         தனது 16ம் வயதில் தந்தையை இழந்த இவர் தனது மாமாவின் பராமரிப்பில் வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து. பிறகு குர்ஆன் ஓதிகொடுக்கும் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் 1912கலில் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைப்பற்றி தனது இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியாவை வைத்தது.

         இதனை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்த்து இயக்கம் நடத்தி அதன் தலைவராக இருந்தார். இவர் தன் இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, வீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்து வந்தார்.

         இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே தொடர்த்து போர் நடந்தது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு அறிந்துருந்த உமர் முஃக்தார் அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர் புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். இவர் ஒரு  ஆசிரியராக இருந்தபோதிலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர் தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார். இதுவே உலகின் முதல் கொரில்லா படை தாக்குதல் என்று கூறப்படுகிறது..

         கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல்கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு, இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் போராடினார்கள். இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிர்ச்சியோ நவீன ஆயுதங்களோ, போக்குவரத்து சாதனங்களோ மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களோ கிடையாது. தணியாத சுதந்திர வேட்க்கையும், அந்நியரிடம் அடிமைப் படக்கூடாது என்ற வெறியும், உமர் முக்தார் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலும் மட்டுமே இருந்தது.

         பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக “பெனிட்டோ” முசோலினியின் படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.

         உமர் முக்தார் வழி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை, அவரே முன்னின்று போரிட்டார். முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது, அவரது குழுவினர் அவரை தப்பித்து போய் விடும்படி வற்புறுத்தியதையும் மறுத்து சண்டையிட்டு கடைசியில் 1931ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பாசிஸ இத்தாலிப் படையினரால் உமர் முஃக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்தது. இறுதியில் இத்தாலியப் படைகளால் மரணதண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

         இத்தாலியப் படை அவரை சலோக் நகரில், 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் மீறி,  சர்வதேச விதி முறைகளையும் மீறி,  அவரது வயதையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 70 (எழுவது). சிறையில் சிறை அதிகாரி இவரிடம் “ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை?” என்ற போது ”ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவனாகவும், அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும்” என்றாராம் ஒமர் முக்தார்.

         உமர் முஃக்தார் கைது செய்யபட்டு தண்டணையை எதிர்நோக்கியிருந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் “உமர் முக்தார்” என்ற பெயரில் 1980களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

         நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற போராளிகளின் வரலாறுகள் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Friday, January 16, 2015

உலகின் கருப்பு நாள் (World Black Day)

 அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

      இந்தியாவின் கருப்பு நாள் தெரியும், அது என்ன உலகின் கருப்பு நாள் என்று நம்மில் மெரும்பாலருக்கு புதியதாக தெரியும் ஆனால் இது புதுசு இல்லை. யூத, நசரானிகளின் 300 ஆண்டின் திட்டத்தின் பதில்தான் இந்த நாள். ஆம்!

       1924 மார்ச் 3ஆம் தேதி உலக முஸ்லிம்களின் உள்ளத்தில் பிரளயம் ஏற்ப்பட்ட நாள். தங்களது மார்க்க, சமுக வாழ்விற்கு பொறுப்பேற்று இருந்த முஸ்லிம்களின் உலகத் தலைமையான (உதுமானிய) கிலாஃபத் கலைக்கப்பட்ட நாள்.
       ஒரு ஊரில் இரண்டே இரண்டு முஸ்லிம்கள் இருந்தால் கூட அதில் தகுதியுள்ள ஒருவரின் தலைமையில் தான் அடுத்தவர் தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமிய சமுக அரசியல் கோட்பாடு. வரலாறு முழுக்க எதாவது ஒரு வகையில் தங்களுக்காக ஒரு ஒருங்கிணைந்த தலைமையை உருவாக்கிக் கொண்டு வாழ்ந்த உலக முஸ்லிம் சமுகம், 1924 இல் தலைமையே இல்லாத சமுகமாக, தாறுமாறாக பிளவுப்பட்ட சமுகமாக மாற்றப்பட்ட நாள்.

       முஸ்லிம்களின் உலகத் தலைமையை விழ்த்த வேண்டும் என்ற இலக்கோடு யுத, நசரானிகள் மூன்று நூற்றாண்டுகளாக உண்ணாமல், உறங்காமல் அதற்காகவே உழைத்து பலவிதமான சதித்திட்டங்களை நிறைவேற்றி கிலாஃபத்தை வீழ்த்திய நாள்....

        நமது பிள்ளைகளுக்கு இது போன்ற வரலாறுகள் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!


Thursday, January 1, 2015

அட்மிரல் செங்ஹி (Admiral Zheg He)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

        மனிதனின் அறிவும், ஆற்றலும், வீரமும், இறைவன் அவனுக்கு வழங்கியுள்ள மாபெரும் அருட்கொடையாகும். கடல் வழிப் பயணம் என்பது சாதாரணது கிடையாது, அது எல்லோராலும் முடிவதும் கிடையாது. அப்படிப்பட்ட கடல் வழிப் பயணத்தில் உலக சாதனை என்பது நினைத்து கூட பார்க்க இயலாத அளவிற்கு மிக ஆபத்தானது.

        1969 இல் மனிதன் நிலவில் கால்பதித்தான் என்று சொன்ன போது உலக மக்கள் எப்படி புருவம் உயர்த்தி வியந்தார்களே, அதே போல ஒரு சம்பவம் கி.பி.1405 ஆம் ஆண்டு தொடங்கி  கி.பி.1433 வரை  28 ஆண்டுகள் நடைப்பெற்று உலகின் கவனத்தைப் புரட்டிப் போட்டது.

        கி.பி 1371 ஆம் ஆண்டு சீனாவின் யுனான் மாகாணத்தில் பிறந்தவர்தான் செங்ஹி. இளம் வயதிலேயே வீரமும் விவேகமும் நிறைந்து காணப்பட்ட செங்ஹி  ஆரம்பமாக இஸ்லாமிய கல்வியைப் பயின்று பிறகு சீனாவின் தற்காப்புக் கலைகளையும் பயின்றார். அதே போல் சிறு வயதிலேயே தனது தந்தையோடு நெடுந்தூரம் பயணம் செய்து ஹஜ் செய்யும் வாய்ப்பையும் பெற்றார்.

         வாழ்நாளில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதையே தனது உயிர் முச்சாக்க கொண்டிருந்த செங்ஹியின் ஆர்வத்திற்கு சீனாவின் யுனான் மாகாணத்தை ஆண்ட மிங் பேரரசின் மன்னர் ஸுடி ஆதரவு அளித்தார். இந்தியப் பெருங்கடலில் உலகமே ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு பிரம்மாண்டமான கடல் பயணத்தை துவங்குமாறு அட்மிரல் செங்ஹிக்கு மன்னர் உத்தரவு பிறப்பித்தார்.

         சாதிக்க வேண்டும் என்ற துடிப்போடு இருந்த செங்ஹிக்கு மன்னரின் உத்தரவு அளவில்லா மகிழ்சியைத் தந்தது. இன்றைய சீனாவின் வர்த்தக தலைநகராகத் திகழும் ஷாங்காய்லிருந்து 40 கி.மி. தொலைவில் உள்ள “தாய்காய்” என்ற கப்பல் கட்டும் தளம் உள்ளது. அங்கே சென்ற அட்மிரல் செங்ஹி தனது மேற்ப்பார்வையில் அதுவரையிலும் உலகம் கண்டிராத, ஏன் கடலே கண்டிராத மிகப் பெரிய அளவிலான 62 கப்பல்களைக் கட்டுவதில் ஈடுபட்டார்.
              
        62 கப்பல்களும் கட்டி முடிக்கப்பட்டு கி.பி 1405 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கப்பல் கடலில் இறக்கப்பட்டது. ஒவ்வொரு கப்பலிலும் கடல் பயணிகள், மொழிபெயற்ப்பாளர்கள், மருத்துவர், தொழில் அதிபர், சமையல் கலைஞர்கள் என மொத்தம் 30 ஆயிரதிர்ற்கும் அதிகமானோர் இருந்தனர். ஒரு மாபெரும் நகரமே கடலில் மிதந்து வந்தது. உலகத்தில் ஒரு அதிர்வு ஏற்ப்பட்டது. உலகமே அட்மிரல் செங்ஹியின் கடல் பயணத்தை பற்றி பேசியது.
         இதன் மூலம் சீனாவின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. சீனாவை நோக்கி வர்த்தகர்கள் படைதிரண்டு வந்தனர். செங்ஹியின் கப்பல் அளவில் பெரிய கப்பல்களைக் கட்டுவதற்கான வர்த்தக ஒப்பந்தங்கள் சீனாவில் குவிந்தன. சீன வர்த்தகர்கள் வெளிநாடுகளில் பொருட்களை விற்ப்பதர்க்கும் வாங்குவதற்கும் இந்த வாய்பை பயன்படுத்திக்கொண்டனர்.

         பிரம்மாண்டமான கப்பல்கள் மூலம் உலகையே அதிசயிக்க வைத்த அட்மிரல் செங்ஹி தனது 7வது பயணத்தின் போது கப்பலிலேயே மரணமடைதார். அவருடைய உடல் சீனாவின் நாஞ்சியாங் நகரில் அடக்கம் செய்யப்பட்டு அங்கேயே அவருடைய அருங்காட்சியமும் உள்ளது.

         ஐரோப்பியர்களான கொலம்பஷும், வாஷ்கோடகாமாவும் தான் புதிய கடல் வழித்தடங்களைக் கண்டறிந்ததாக பச்சை பொய்களை வெட்கமில்லாமல் சொல்லி வருகின்றனர் சில ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள். அந்த அயோக்கியர்கள் கடலில் கால் வைப்பதற்கு 70, 80 ஆண்டுகளுக்கு முன்பே செங்ஹி உலகை வலம் வந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்க அந்த வஞ்சகர்களில் உள்ளம் மறுக்கிறது.

         கொலம்பஷும், வாஷ்கோடகாமாவும் புதிய நாடுகளுக்கு சென்று அந்த மண்ணில் வாழ்ந்த மக்களை எல்லாம் கொலைசெய்து கொன்று குவித்துவிட்டு அங்கே கொள்ளையடித்து  ஐரோப்பாவிற்கு சென்றார்கள். ஆனால் இவ்வளவு பெரிய படையுடன் உலகை வலம் வந்த செங்ஹி அல்லாஹ்வுக்கும் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்ட மனிதராக மிங் பேரரசின் சமாதன துதராகவே வலம் வந்தார் என்பது தான் வரலாற்று உண்மை.


         நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற சாதனையாளர்களின் வரலாறுகள் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Monday, November 28, 2011

நம்மை விட்டு செல்லும் லால்பேட்டை


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... 
               30,000 மேற்பட்ட இஸ்லாமியர்கள் வாழும் நமது லால்பேட்டையில் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள்  14,000 த்திற்க்கும் மேற்பட்டவர்கள்,  ஆனால் அரசு படிவேட்டில் 9,592 நபர்கள் மட்டும் தான் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் என பதிவாகியுள்ளது. கடந்த 19/10/2011 அன்று நடந்த நமதூர் பேரூராட்சி மன்ற தேர்தலில் வாக்களித்த மக்கள் வெறும் 6229, அதாவது மொத்த மக்கள் தொகையில் 20.7%, வாக்களிக்க தகுதியுள்ளவர்களில்  44.5%,  அரசு படிவேட்டிலில் உள்ளவர்களில்  64.9%.
      இந்த தேர்தலின் முடிவு கடந்த 21/10/11 அன்று வெளியானது, இதில் 2,200 வாக்குகள் பெற்று (ADMK).தி.மு. வின் சபியுல்லா வெற்றி பெற்றார், இரண்டாம் இடம் (M.M.K).. வின் யாசர் அரஃபாத், மூண்றாம் இடம் முருகேசன்.
               இங்கு நாம் கவனிக்க வேண்டியது நான்கு விஷயங்களை, ஒன்று வெற்றி பெற்ற வேட்பாளர் வாங்கிய ஓட்டு 2,200 அதாவது மொத்த மக்கள் தொகையில் 7.3%, வாக்களிக்க தகுதியுள்ளவர்களில் 15.7%, வாக்களித்தவர்களில் வெறும்  22.9% தான். வெறும் 22.9% ஓட்டுக்கள்  மட்டும் பெற்று வெற்றி பெற்ற ஒருவர் 30,000 மக்களுக்கு தலைவர், அதாவது 77.1% மக்களுக்கு பிடிக்காதவர் (அல்லது) 77.1% மக்கள் இவருக்கு ஆதரவு தரவில்லை. இரண்டாவது 30,000 மேற்பட்ட முஸ்லிம்கள் வாழும் நமது ஊரில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களில் 3ஆம் இடத்தை பிடித்தது இந்து மத சகோதரர், மூண்றாவது காலம் காலமாக ஒற்றுமையுடன் நம் மக்கள் பள்ளிவாசல் மூலமாகவும், ஜமாத் மூலமாக தேர்ந்தெடுத்த மக்களாட்சி சென்று ஆளும் அரசாட்சி வந்துவிட்டது, நான்காவது 15வார்டுகள்  கொண்ட  நமது லால்பேட்டையில் 4வார்டுகளை இந்து மதத்தை சார்ந்தவர்கள் கைப்பற்றிவிட்டார்க்கள்.
      இதற்கு காரணம் என்ன என்று நாம் சிந்தனை செய்து பார்த்தோமா!!! ஒற்றுமை இல்லாமையும், தெருவுக்கு ஒரு வேட்பாளர் என களத்தில் இறங்கியதுதான் காரணமாக இருக்கமுடியும். இஸ்லாம் மார்க்கத்தில் பிறந்த நாம் சிறு, சிறு விஷயங்களுக்கொல்லாம் மோதி இப்போது எந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டோம் என்று தயவு செய்து சிந்தியுங்கள். இனிவரும் காலங்களிளாவது சிந்தித்து செயல்படுவோம்.... இன்ஷா அல்லாஹ்....
www.imdtime.org